PODHU NEWS | நித்யானந்தாவை வெளியேற்ற கோரி முதல்வர் தனிப்பிரிவில் மனு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நித்யானந்தாவை வெளியேற்ற கோரி முதல்வர் தனிப்பிரிவில் மனு

Added : ஜூன் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : மதுரை ஆதீனத்தில் புகுந்துள்ள நித்யானந்தாவை வெளியேற்ற, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி, மதுரை ஆதீன மீட்புக் குழு, இன்று தலைமைச் செயலகத்தில், முதல்வரின் தனிப் பிரிவில், மனு கொடுக்க உள்ளனர். இதுகுறித்து, மதுரை ஆதீன மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் சோலைக் கண்ணன் கூறுகையில், "இவ்விவகாரத்தில், இதுவரை, பல போராட்டங்கள் நடந்த பின்னும் கூட, தமிழக அரசு, எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கர்நாடக அரசைப் போல, தமிழக அரசும், இதில் விரைந்து நடவடிக்கை எடுத்து, நித்யானந்தாவை, மதுரை ஆதீனத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும். சைவ ஆதீனங்கள் அடங்கிய குழு மூலம், தகுதியானவரை, அங்கு மடாதிபதியாக நியமிக்க வேண்டும் எனக் கோரி, இந்த மனுவை அளிக்க உள்ளோம்' என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை