PODHU NEWS | மருத்துவமனை கட்டடங்கள் பராமரிப்பிற்கு தனிப்பிரிவு | Dinamalar
Advertisement
மருத்துவமனை கட்டடங்கள் பராமரிப்பிற்கு தனிப்பிரிவு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சிவகங்கை : அரசு மருத்துவ கல்லூரி, ஆஸ்பத்திரிகளுக்கு புதிய கட்டடம் கட்டுதல், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள பொதுப்பணித்துறையில் தனி கட்டுமான பிரிவை ஏற்படுத்தி அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக பொதுப்பணித்துறையின் கீழ் கட்டுமானம், பராமரிப்பு பணிகளை மாவட்டங்களில் உள்ள செயற்பொறியாளரின் கீழ் கோட்ட பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் செயல்பட்டனர். அரசு அலுவலகங்கள், பள்ளிகளுக்கு புதிய கட்டடம் கட்டுதல், பராமரித்தல் போன்ற பணிகளை செய்து வந்தனர். இந்நிலையில், தேசிய சுகாதார திட்டம் மூலம் சுகாதாரத்துறைக்கென நிதி ஒதுக்கப்படுகிறது. இந்த நிதி மூலம் தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரி, ஆஸ்பத்திரிகள், சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டடம் கட்டுதல், பராமரித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு நிதியை முறையாக பயன்படுத்தும் பொருட்டு இங்கு புதியதாக தனிப்பிரிவு துவங்கி கட்டடம் கட்டுதல், பராமரித்தல் பணிகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. பிரிப்பு: சுகாதாரத்துறை இயக்குனர் வேண்டுகோளை ஏற்று, அரசு சுகாதாரத்துறை கட்டடங்கள் கட்டுதல், பராமரித்தல் பணிகளை மேற்கொள்ள பொதுப்பணித்துறையில் தனி கட்டுமான பிரிவை ஏற்படுத்தி உத்தரவிட்டுள்ளது. நிர்வாக பொறியாளரின் கீழ் 3 மாவட்டங்கள் நிர்வகிக்கப்பட உள்ளது. ஜூன் 14 முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு, மருத்துவ கட்டுமான பிரிவாக மாற்றப்பட்டுள்ளது. புதிய பிரிவு: மதுரை செயற்பொறியாளரின் கீழ் மதுரை,தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உதவி கோட்ட பொறியாளர், 15 பொறியாளர் அலுவலகம், சிவகங்கை செயற்பொறியாளரின் கீழ் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் உதவி கோட்ட பொறியாளர்கள், 12 உதவி பொறியாளர் அலுவலகங்கள், திருநெல்வேலி செயற்பொறியாளரின் கீழ் பாளையங்கோட்டை, சங்கரன்கோவில், நாகர்கோவில், தூத்துக்குடி துணை கோட்ட பொறியாளரின் கீழ் 14 பொறியாளர் அலுவலகங்கள் என மாநில அளவில் பிரிக்கப்பட்டுள்ளது.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்

செப்டம்பர் 24,2016