peace flag to escape from the murder case | இன்ஜி.,மாணவர்கள் 30 சதவீதம் பேர் மட்டுமே வேலைக்கு தகுதியானவர்கள் :பல்கலை துணை வேந்தர் கவலை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்ஜி.,மாணவர்கள் 30 சதவீதம் பேர் மட்டுமே வேலைக்கு தகுதியானவர்கள் :பல்கலை துணை வேந்தர் கவலை

Added : ஜூன் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காரைக்குடி : இன்ஜி.,படிப்பு முடித்த மாணவர்கள் 30 சதவீதத்தினரே வேலக்கு தகுதியானவர்களாக இருக்கின்றனர், என அழகப்பா பல்கலை துணை வேந்தர் சேது. சுடலை முத்து கூறினார். காரைக்குடி அமராவதி புதூரில் ஸ்ரீராஜராஜன் இன்ஜி.,கல்லூரியில் பிளஸ் 2, டிப்ளமோ முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.கல்லூரி முதல்வர் ஹயாசிங் சுகந்தி வரவேற்றார். அழகப்பா பல்கலை துணை வேந்தர் சேது.சுடலைமுத்து பேசியதாவது: இன்ஜி., படிப்பு முடித்த மாணவர்களில் 30 சதவீதத்தினரே வேலைக்கு தகுதியானவர்களாக இருக்கின்றனர். எனவே மாணவர்கள் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள அதிக அளவில் முயற்சி செய்ய வேண்டும், என்றார். திருச்சி பாரதிதாசன் பல்கலை துணை வேந்தர் மீனா, அழகப்பா பல்கலை பதிவாளர் (பொ) மணிமேகலை பேசினர். விப்ரோ கிளை மேலாளர் லாவனம் அம்பலா, சென்னை டிரான்ஸ்டாப் சோலிசன் நிர்வாக இயக்குனர் வீரா விசுவாமித்திரர், கல்லூரி சேர்மன் பெரியசாமி, ஆலோசகர் சுப்பையா, அறங்காவல் உறுப்பினர் ராமையா பங்கேற்றனர். சிறப்பு அலுவலர் அண்ணாமலை நன்றி கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை