PODHU NEWS | மதுரை காமராஜ் பல்கலை உறுப்பு கல்லூரிகளில் சேர்க்கை துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை காமராஜ் பல்கலை உறுப்பு கல்லூரிகளில் சேர்க்கை துவக்கம்

Added : ஜூன் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை : புதிதாக அறிவிக்கப்பட்ட மதுரை காமராஜ் பல்கலை உறுப்பு கல்லூரிகளில், அட்மிஷனுக்கு விண்ணப்பிக்கலாம் என, பல்கலை பதிவாளர் (பொறுப்பு) கண்ணன் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மற்றும் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அரசு அறிவியல் மற்றும் கலை கல்லூரிகள் நடப்பாண்டு துவங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இக்கல்லூரிகளில் பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பி.காம்., மற்றும் பி.எஸ்சி., கணிதம் பட்ட படிப்புகள் நடப்பாண்டு செயல்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் ,திருமங்கலத்தில் தாசில்தார் அலுவலகம், அருப்புக்கோட்டை பாரதி பாலர் பிரைமரி பள்ளி, வேடசந்தூரில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மற்றும் மதுரை காமராஜ் பல்கலையிலும் வழங்கப்படுகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் வழங்க கடைசி நாள் ஜூலை 6 என்று தெரிவித்துள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை