ARASIAL NEWS | ஆளுங்கட்சி தலையீட்டால் சத்துணவு அமைப்பாளர் விபரம் வெளியிட தடை | Dinamalar
Advertisement
ஆளுங்கட்சி தலையீட்டால் சத்துணவு அமைப்பாளர் விபரம் வெளியிட தடை
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சிவகங்கை : ஆளுங்கட்சியினர் தலையீட்டால் சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் பணிக்கான காலி பணியிடம், தகுதி, தேர்வு செய்யும் முறை குறித்த விபரங்களை சிவகங்கை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஒட்டாமல் மறைக்கின்றனர். தமிழக அரசு,பள்ளிகளிலுள்ள சத்துணவு மையங்களில் காலியாக உள்ள அமைப்பாளர், சமையலர், உதவியாளர் பணியிடங்களை நிரப்பப்படும் என அறிவித்துள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை அந்தந்த ஊராட்சி ஒன்றியம்,நகராட்சிகளில் வாங்கி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் அமைப்பாளர் 92, சமையலர் 76, உதவியாளர் 275 காலிபணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி, ஜாதிவாரியான ஒதுக்கீடு, வயது போன்ற விபரங்கள் அடங்கிய பட்டியலை அந்தந்த ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சிகளில் வெளியிட வேண்டும் என அறிவிக்கப்பட்டது. தலையீடு: ஆனால், இம்மாவட்டத்தில் இப்பணியிடங்களை நிரப்ப ஆளுங்கட்சியினரின் தலையீடு அதிகரித்துள்ளது. ஒவ்வொரு பணிக்கும் குறைந்தது 30,000 முதல் ஒரு லட்ச ரூபாய் வரை வசூலிக்கின்றனர். இதற்காக, காலிபணியிட விபரம், தகுதி போன்ற விபரங்களை வெளியே ஒட்டவேண்டாம் என அதிகாரிகளுக்கு "அன்பு கட்டளை' இடுகின்றனர்.பெரும்பாலான ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நகராட்சிகளில் பட்டியல் வெளியிடப்படவில்லை. முழுவிபரங்கள் தெரியாமல் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ஜோதிபாய் கூறியதாவது: காலிபணியிட விபரம் இன சுழற்சி, தகுதி முறைப்படி தான் நிரப்பப்படும். இதில், தவறு நடக்க வாய்ப்பில்லை. ஆளுங்கட்சியினர் தலையீடு இருக்க வாய்ப்பில்லை. இதற்கென அமைக்கப்பட்ட அரசு அதிகாரிகளை கொண்ட குழு தான் அமைப்பாளர், சமையலர், உதவியாளர் பணியிடங்களை நிரப்பும். அந்தந்த ஊராட்சி ஒன்றியம், நகராட்சிகளில் காலிபணியிட விபர பட்டியல் ஒட்டப்பட்டுள்ளது. முறைப்படி தான் தேர்வு நடக்கும். விண்ணப்பதாரர்கள் யாரிடமும் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம், என்றார்.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்

செப்டம்பர் 29,2016