ARASIAL NEWS | அ.தி.மு.க.,வால் ஜீரணிக்க முடியவில்லை :விஜயகாந்த் பேச்சு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க.,வால் ஜீரணிக்க முடியவில்லை :விஜயகாந்த் பேச்சு

Added : ஜூன் 19, 2012 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
அ.தி.மு.க.,வால் ஜீரணிக்க முடியவில்லை :விஜயகாந்த் பேச்சு

சென்னை : ""புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தே.மு.தி.க., டெபாசிட் வாங்கியதை அ.தி.மு.க., வால் ஜீரணிக்க முடியவில்லை,'' என விஜயகாந்த் பேசினார். சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சித் தலைமை அலுவலகத்தில் நடந்த தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க் கள், மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் கட்சி தலைவர் விஜயகாந்த் பேசியதாவது: குறைந்தபட்சம் 30 ஆயிரம் ஓட்டுக்களை பெறுவோம் என்று நான் எதிர்பார்த்தேன். அது நடந்துள்ளது. அ.தி.மு.க., வெற்றிபெற்றாலும், நாம் "டெபாசிட்' பெற்றதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. நகரப் பகுதிகளில் வாங்கியதைப் போன்று கிராமப்பகுதிகளில் கூடுதல் ஓட்டுக்கள் வாங்கியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். இனிமேல் நாம் போராட வேண்டியது நிறையவுள்ளது. பல நெருக்கடிகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். ஓராண்டு கடுமையாகப் போராடினால், நமக்கு பிரகாசமான வாழ்க்கை காத்திருக்கிறது. கட்சியில் இருந்து போனவர்கள், போகிறவர்களை பற்றியெல்லாம் நான் கவலைப்படுவது இல்லை. நீங்களும் கவலைப்பட வேண்டாம். இருப்பவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இனி தங்கள் பொறுப்பை உணர்ந்து அனைவரும் செயலாற்ற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங - chennai,இந்தியா
19-ஜூன்-201207:11:56 IST Report Abuse
ஆரூர் ரங சைடு டிஷ் கிடைததற்கே இந்த ஆட்டமா? சரக்கே (வெற்றி) கிடைத்திருந்தால் என்னென்ன பேசுவாரோ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை