Spray the area of rain will continue Kuttraalam | குற்றாலம் பகுதியில் தொடரும் சாரல் மழை| Dinamalar
Advertisement
குற்றாலம் பகுதியில் தொடரும் சாரல் மழை
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

குற்றாலம்:குற்றாலம் அருவி பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழை காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.கடந்த ஜூன் 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை கேரள வனப்பகுதியில் தென்மேற்கு பருவமழை பெய்து வந்தது. இந்த மழை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டிய பகுதியில் பெய்ததால் ஐந்தருவி, மெயின் அருவியில் தண்ணீர் விழத்துவங்கியது. அதன்பின் வெயிலும், தென்மேற்கு பருவக்காற்றும் என இயற்கையின் தட்பவெப்ப நிலை மாறுபட்டு காணப்பட்டது.இதனால் அருவிகளிலும் தண்ணீர் வரத்தும் அடியோடு குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது.

இந்நிலையில் கடந்த 16ம் தேதி இரவு கேரள வனப்பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் குற்றாலம், செங்கோட்டை, தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு சாரல் மழை பெய்தது.
நேற்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் பெய்த சாரல் மழை காரணமாக ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் விழுந்தது. மெயின் அருவியில் பரவலாக தண்ணீர் விழுந்தது. நாளுக்கு நாள் தண்ணீர் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சீசன் முழுமையாக துவங்கிவிட்டதாக சுற்றுலா பயணிகளும் அதிகரித்து வருகின்றனர்.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்