வால்பாறை: வால்பாறை அருகே கரடி தாக்கியதில் மெக்கானிக் ஒருவர் காயமடைந்தார். பொள்ளாச்சியை அடுத்த வால்பாறை வாட்டர்பால்ஸ் எஸ்டேட் பகுதியில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இந்நிலையில் இப்பகுதியைச்சேர்ந்த தங்கராஜ்(33) என்பவர் மெக்கானிக் வேலை பார்த்து வருகிறது. நேற்றுபணியை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போது அங்கு புதர்மறைவில் குட்டியுடன் பதுங்கியிருந்த கரடி தங்கராஜ் மீது திடீரென பாய்ந்து தாக்கியது. இதில் தங்கராஜ் கரடியிடமிருந்து தப்பிக்க ஓடினார். எனினும் கரடி விரட்டி , விரட்டி தாக்கியதில் படுகாயமடைந்தார். தற்போது தங்கராஜ் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பழநி அருகே யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் இறந்தார்.