CBI judge Pattabhi Rama Rao arrested | கங்கையே கெட்டுப்போனால் எங்கே போவது ? ஜாமினுக்கு ரூ. 6 கோடி லஞ்சம்; நீதிபதி கைது| Dinamalar

கங்கையே கெட்டுப்போனால் எங்கே போவது ? ஜாமினுக்கு ரூ. 6 கோடி லஞ்சம்; நீதிபதி கைது

Added : ஜூன் 19, 2012 | கருத்துகள் (76)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
CBI judge Pattabhi Rama Rao arrested, ஜாமினுக்கு ரூ. 6 கோடி லஞ்சம்; நீதிபதி கைது

ஐதராபாத்: சுரங்க மோசடி வழக்கில் சிக்கிய ஆந்திராவை சேர்ந்த மாபெரும் பணக்காரரும், மாஜி அமைச்சருமான, மாநில அரசையே ஆட்டி வைக்கும் ரெட்டி சகோதரர்களில் ஒருவரான ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமின் வழங்கிட ரூ. 10 கோடி பேரம் பேசிய சி.பி.ஐ., நீதிபதி இன்று கைது செய்யப்பட்டார்.

ஆந்திரா மற்றும் கர்நாடக எல்லையில் உள்ள ஒபலாபுரம் கனிம சுரங்கம் ஏலம் விடப்பட்டதில் முறைகேடு நடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதில் 100 கோடிக்கும் மேலாக இழப்பு ஏற்பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து மாஜி அமைச்சர் ஜனாத்தனரெட்டி பதவியை இழந்ததும் சி.பி.ஐ,.அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.


சி.பி.ஐ.,சிறப்பு கோர்ட் நீதிபதி பட்டாபிராமராவ் இந்த வழக்கை விசாரித்து வந்தார். சிறையில் இருந்த ரெட்டி ஜாமின் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி சில தளர்வுகளை கையாண்டு சலுகைகள் வழங்கி இவரை ஜாமினில் விடுதலை செய்தார். ஏற்கனவே இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரி ஒருவருக்கு ஜாமின் மறுத்த நீதிபதி ரெட்டிக்கு மட்டும் ஜாமின் வழங்கியது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனை நுகர்ந்த சி.பி.ஐ., அதிரடி விசாரணையை துவக்கியது. இதனையடுத்து நீதிபதி பட்டாபி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தொடர்ந்து சி.பி.ஐ.,இவரது வீட்டில் ரெய்டு நடத்தியது. இதில் பணம் நீதிபதியின் மகன் மூலம் வங்கி கணக்கில் ரூ. 3 கோடி வரை பெறப்பட்டது தெரிய வந்தது. இதனை உறுதி செய்தி சி.பி.ஐ., நீ (நி) திபதி பட்டாபிராமை இன்று சி.பி.ஐ.,அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (76)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narasimha - Chennai,இந்தியா
20-ஜூன்-201210:53:08 IST Report Abuse
Narasimha அபிஷேக் சிங்க்ஹ்வி மாதிரி ஆட்களோட சிபாரிசில் நீதிபதிகள் தேர்வு செய்யபட்டால் இதுவும் நடக்கும் இன்னமும் நடக்கும். நாட்டை கடவுள் காப்பதட்டும்.. சத்யமேவ ஜெயதே.
Rate this:
Share this comment
Cancel
k.sampath - Trichy,இந்தியா
20-ஜூன்-201206:44:48 IST Report Abuse
k.sampath இந்த நீதிபதி பணியிலிருந்து முறையாக ஒய்வு பெற்றால் இவருக்கு ஒய்வுதியப் பலன்களாக அதிக பட்சம் இருபது லட்ச ரூபாய் கிடைக்கும். இப்போ பத்து கோடி கிடைத்து விட்டது. இவனுக்கு லாபம்தான். கைது செய்வதால் பலன் ஏதும் இல்லை. இந்த பத்து கோடி மற்றும் இவனுடைய சொத்துக்கள் அனைத்தும் அரசுடமையாக்க வேண்டும். இவரை போன்றோருக்கு கடுமையான தண்டனை வழங்கினால்தான் நீதி வெல்லும். இதை செய்யாமல் வழக்கு மட்டும் நடத்தினால் ஓராண்டு சிறையில் இருந்துவுட்டு வெளியில் வந்து லஞ்சம் வாங்கிய பணத்தில் சவுகரியமாக உட்கார்ந்து சாப்பிடுவார்.
Rate this:
Share this comment
Cancel
Veluppillai Thangavelu - Toronto,கனடா
20-ஜூன்-201202:50:46 IST Report Abuse
Veluppillai Thangavelu இது வேலியே பயிரை மேய்வது போன்றது. மற்றவர்களும் கையூட்டு வாங்குகிறார்கள் என்பதால் நீதிபதியும் வாங்கலாம் என்பது நியாயமாக இருக்க முடியாது. இராஜீவ் காந்தி குடும்பம்தான் இதற்குக் காரணம். குவட்ரோசியை தப்ப விட்டவர் சோனியா காந்திதான். சுவிஸ் வங்கியில் லோட்டஸ் என்ற பெயரில் இருக்கும் கணக்கு இராசீவ் காந்தியின் கணக்குத்தான். போபார்ஸ் பீரங்கி வாங்கியதில் கிடைத்த 6௦ கோடி ரூபா அந்த வங்கியில் டாலரில் அல்லது பிராங்கில் போட்டுள்ளார்கள். பட்டாபிராமராவ் ஒருத்தர் தான் கோடிக் கணக்கில் கையூட்டு வாங்கினார் மற்ற நீதிபதிகளின் கையும் சுத்தம் மனமும் சுத்தம் என்று நினைத்து விட முடியாது. கையூட்டு வாங்கும் நீதிபதிகள் நிறைய இருக்கிறார்கள். ஒரு சாலை விபத்தில் கைப்பற்றப்பட்ட லாரியை விட நீதிபதி ஒருவர் கையூட்டுக் கேட்டுப் பெற்றுக் கொண்டார். அதற்கு நன்றியாக குற்றவாளிக்கு விதிக்கும் தண்டப்பணத்தை குறைத்து தீர்ப்பளித்தார்.
Rate this:
Share this comment
Cancel
A.MANIKANDAN.IRUGUR - coimbatore,இந்தியா
19-ஜூன்-201215:43:11 IST Report Abuse
A.MANIKANDAN.IRUGUR நீதிக்கு அரசராக இருப்பவர் .... நிதிக்கு அரசராக நினைத்தால் இப்படித்தான்
Rate this:
Share this comment
Karam chand Gandhi - Auroville,இந்தியா
20-ஜூன்-201211:44:24 IST Report Abuse
Karam chand Gandhi இந்த நாட்டின் மிக ஒழுக்கம் கெட்ட இடம் என்றால் நீதிமன்றங்களுக்குதான் முதலிடம்....
Rate this:
Share this comment
Cancel
ganesh K - pudhur,இந்தியா
19-ஜூன்-201215:29:20 IST Report Abuse
ganesh K லஞ்சம் தஞ்சம் புகா இடம் எதும் உண்டோ? கடவுள் அருள் பெற காணிக்கை கூட லஞ்சம். அட போங்கப்பா பேசாம... லஞ்சத்தை தேசிய சின்னமா மாத்திருங்க ( இந்தியன் காசுல சிங்கம் முகத்திற்கு பதிலா) மனிதன் படம் (பின்னால் திரும்பிக்கொண்டு ஒரு கைல காசு வாங்கிறமாதிரி போடலாம்). என்னோட கற்பனை சரி என்றால் thumbs up .by Dr கணேஷ்
Rate this:
Share this comment
Cancel
INDIAN - Riyadh,சவுதி அரேபியா
19-ஜூன்-201215:26:02 IST Report Abuse
INDIAN நீதித்துறை களங்கமாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போதெல்லாம் நீதிமன்றங்களின் தீர்ப்புகள் மனதிற்குள் சலனம் ஏற்படுத்துகிறது. உதாரணமாக நல்ல ஒழுக்கமுடைய ஒருகுடும்பப்பெண் மீது விபச்சாரி என்று வீண்பழி சுமத்தி நீதிமன்றத்திலேற்றினால், அவள் நல்லவள் என்று நீதிபதி தீர்ப்பு சொல்லி விடுதலை செய்தாலும், தன சமூகத்தால் அவள் அந்த சந்தேகத்துடனேயே பார்க்கப்படுகிறாள் ஏன்? நீதிமன்றங்களின் லட்சணம். இந்தநிலை மாறவேண்டும். தீர்ப்பு வழங்கினால் சஞ்சலத்திற்கு இடமில்லாமல் மாற்று கருத்தே இல்லாமல் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்வகையில் இருக்கவேண்டும். அதற்கு நீதிபதிகள் எந்தவிருப்பு வெறுப்பிற்கும் ஆளாகாமல், (அவரவர் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு) நடுநிலையுடன் செயல்பட வேண்டும்அப்போதுதான் நீதிதுரைமேல் மக்களுக்கு உண்மையான நம்பிக்கை பிறக்கும்
Rate this:
Share this comment
Cancel
M . Parames - Tirupur,இந்தியா
19-ஜூன்-201215:13:25 IST Report Abuse
M . Parames இது நமது நாடுதான ? புனிதம் என்றால் என்ன என கேட்கிறார்களே கடவுளே காப்பாத்து இந்தியாவை
Rate this:
Share this comment
Cancel
prakash - chennai,இந்தியா
19-ஜூன்-201215:05:30 IST Report Abuse
prakash இந்த நாட்டில் நீதி செத்து பல நாட்கள் ஆகுது.....
Rate this:
Share this comment
Cancel
SRIHARAN - coimbatore,இந்தியா
19-ஜூன்-201214:50:25 IST Report Abuse
SRIHARAN பெரியோர்களே நீதிபதிகளும் மனிதர்கள் தான். இந்தியர்கள் தான். சம்பளத்துக்கு வேலை செய்பவர்கள் தான் பெரும்பாலோருக்கு இருக்கும் ஆசைகள் அவர்களுக்கும் இருக்கும். மற்றவர்கள் லஞ்சம் வாங்கும் பொது அவர்கள் லஞ்சம் வாங்கக்கூடாதா?மதிய அரசில் உள்ள எதனை அதிகாரிகள் எப்படி எல்லாம் வாழ்கிறார்கள்? அரசியல் வாதிகள் எப்படி வாழ்கிறார்கள்?அவர்கள் பயணம் செய்யும் கார்களை பாருங்கள்.இத எல்லாம் பார்க்கும் நீதிபதிகளுக்கு சலனம் ஏற்படாதா?ஒரு நீதிபதி பார்லிமேன்டால் வெளியே தள்ளப்பட்டார்.இனொரு நீதிபதி நிலம் அபகரித்ததாக கூறப்பட்டார்.இன்னொரு நீதிபதி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். நீதி கிடைப்பது அதிர்ஷ்டம்.நீதியை வாங்குவது எளிது.
Rate this:
Share this comment
SRIHARAN - coimbatore,இந்தியா
20-ஜூன்-201208:00:38 IST Report Abuse
SRIHARANஜெயேந்திரர் கூட ஒரு நீதிபதியிடம் தொலைபேசி மூலம் பேரம் பேசியதாக ஒரு செய்தி உள்ளதே?...
Rate this:
Share this comment
Cancel
Muhsin Ali Abdul Shukoor - ayangudi,இந்தியா
19-ஜூன்-201214:44:32 IST Report Abuse
Muhsin Ali Abdul Shukoor இந்தியாவில் நீதி துறை மட்டுமல்ல , ஊடகவியல் துறை உட்பட அனைத்து துறைகளிலும் ஊழல் கரை புரண்டோடுகிறது....
Rate this:
Share this comment
Karam chand Gandhi - Auroville,இந்தியா
20-ஜூன்-201211:13:37 IST Report Abuse
Karam chand Gandhi நீதித்துறையில் லஞ்சம் வாங்கினால் தூக்கு தண்டனை விட குறைத்து கொடுக்க முடியாது. நடக்கட்டும்....................
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை