, Narendra Modi opponent, Keshubhai, to lobby party leaders in Delhi | குஜராத் தேர்தலில் மோடியை வீழ்த்துவேன்: கேசுபாய்பட்டேல்| Dinamalar

குஜராத் தேர்தலில் மோடியை வீழ்த்துவேன்: கேசுபாய்பட்டேல்

Updated : ஜூன் 19, 2012 | Added : ஜூன் 19, 2012 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆமதாபாத்: குஜராத்தில் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் நரேந்திரமோடியை வீழ்த்துவதே எனது லட்சியம் என முன்னாள் முதல்வர் கேசுபாய்பட்டேல் கூறினார். குஜராத்தில் முதல்வர் நரேந்திரமோடிக்கு எதிராக , பா.ஜ.வைச்சேர்ந்த முன்னாள் முதல்வர் கேசுபாய்பட்டேல், உள்ளிட்டோர் மோடிக்கு எதிராக ஓரணியில் உள்ளனர்.

இந்நிலையில் டில்லி வந்துள்ள கேசுபாய்பட்டேல், பா.ஜ. மூத்த தலைவர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பா.ஜ.சார்பில் முன்னர் குஜராத் முதல்வராக இருந்தவர் கேசுபாய்பட்டேல், கட்சி உத்தரவால் கடந்த 2001-ம் தேதி முதல்வர் பதவியிலிருந்து விலகினார். பின்னர் மோடி வருகையால், கட்சியலிருந்து ஓரம்கட்டப்பட்டு வந்தார்.

இந்நிலையில் டில்லி வந்துள்ள கேசுபாய்பட்டேல் நிருபர்களிடம் கூறுகையில், குஜராத்தில் முதல்வர் நரேந்திரமோடியை எதிர்த்து பிரசாரத்தை துவக்கியுள்ளோம். நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் மோடியை வீழ்த்துவதே எனது லட்சியம், மேலும் பா.ஜ. மூத்த தலைவர்களான முரளி மனோகர்ஜோஷி, தேசிய ‌தலைவர் நிதின்கட்காரி ஆகியோரை சந்தித்து பேச உள்ளேன். இன்று பா.ஜ. கூட்டம் நடக்கிறது. இதில் மூத்த தலைவர் அத்வானி, சுஷ்மா சுவராஜ் ஆகியோரையும் சந்திக்க உள்ளேன் என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A R Parthasarathy - Chennai,இந்தியா
19-ஜூன்-201219:55:51 IST Report Abuse
A R Parthasarathy சொந்த கட்சிகரனையே வீழ்த்துவேன் என்று சபதமிடும் படேல் போன்றவர்களை சந்திக்க மேலிடம் அனுமதி கொடுக்கக் கூடாது. அல்லது, அழைத்து அடக்கி வைக்க வேண்டும். கட்சியின் வளர்ச்சிக்கு இதுபோன்ற புல்லுருவிகளால் ஆபத்து நேரிட வாய்ப்பு இருக்கிறது. மேலிட தலைவர்கள் தங்களுக்குள் இருக்கும் மாச்சரியங்களை மறந்து இதுபோன்றவர்களின் கொட்டத்தை அடக்கி வைக்கவேண்டும். அதுதான் கட்சிக்கு நல்லது..
Rate this:
Share this comment
Cancel
A R Parthasarathy - Chennai,இந்தியா
19-ஜூன்-201219:51:05 IST Report Abuse
A R Parthasarathy கிட்டத்தட்ட பத்தாண்டுகாலம் திறமையான நிர்வாகத்தை கொடுத்தவர் என்ற பெயர் பெற்றிருக்கிறார் மோடி அவர்கள். இந்த நேரத்தில் அவரை விழ்த்துவேன் என்று கிளம்பி இருக்கும் படேல் போன்றவர்களை குஜராத் மக்கள் இனம் கண்டு கொள்ள வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
A R Parthasarathy - Chennai,இந்தியா
19-ஜூன்-201219:47:34 IST Report Abuse
A R Parthasarathy நல்ல நேரம் பார்த்தாரையா இந்த கேசுபாய் படேல். இன்றைய குடியரசுத்தலைவர் தேர்தலுக்கு ஆளை தேர்வு செய்ய காணோம். நாடாளுமன்ற தேர்தலுக்கு, குஜராத் மாநில தேர்தலுக்கு வரிந்து கட்டுகிறார்கள். எப்படி மக்கள் அனைவரும் ஒருமித்து கலாமை தேர்வுசெய்தும், உங்களுக்குள் முடிவெடுக்க முடியாமல் இழுத்தடித்ததால் அவரே விலகி விட்டார். அதுபோலவே, குஜராத்திலும், நாடாளுமன்ற தேர்தலிலும் இழுதடியுங்கள். நாடு விளைங்கிடும்.
Rate this:
Share this comment
Cancel
Imran - Thaskant,உஸ்பெகிஸ்தான்
19-ஜூன்-201215:44:15 IST Report Abuse
Imran இதெல்லாம் நம்ம நாட்டு தலைஎழுத்து. ஒன்று சேர்ந்தால் உண்டு வாழ்வு.
Rate this:
Share this comment
Cancel
appu - madurai,இந்தியா
19-ஜூன்-201214:29:33 IST Report Abuse
appu காங்கிரசிற்கு குறைவில்லாத ஒரு கட்சி அல்லது காங்கிரசுடன் கம்பேர் செய்ய கூடிய கட்சி ப ஜா க என்றால் மிகை ஆகாது.நல்லா இருங்கப்பா...
Rate this:
Share this comment
Cancel
jeeva - pondicherry,இந்தியா
19-ஜூன்-201214:12:26 IST Report Abuse
jeeva வெண்ணை திரண்டு வரும்போது தாளியை உடைக்காதீர் ப்ளீஸ். உங்களுக்குள் சண்டை வந்தால் மீண்டும் காங்கிரசே ஆட்சியை பிடிக்கும். நாடு மறுபடியும் நாரி விடும். அதலால் ஒரு கூரையின் கீழ் இருப்பவர்கள் சண்டை போடாதீர்கள் ப்ளீஸ் ப்ளீஸ்....K ஜீவா PONDIHERRY
Rate this:
Share this comment
Cancel
ramaprabu - madurai,இந்தியா
19-ஜூன்-201214:05:47 IST Report Abuse
ramaprabu ஊரு ரெண்டு பட்டால் கூத்தடிக்குத்தான் கொண்டாட்டம் ,,ப்ளீஸ் ஒற்றுமை யாக இருங்கள் ,,மோடிய வீழ்த்த இனி எந்த சக்தி யும் இல்லை ,,,அடுத்த பிரதமரும் அவரே ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை