58 missing after Indonesia boat sinks: rescuers | இந்தோனோஷியாவில் படகு கவிழ்ந்து விபத்து: 58 பேர் மாயம் | Dinamalar

இந்தோனோஷியாவில் படகு கவிழ்ந்து விபத்து: 58 பேர் மாயம்

Updated : ஜூன் 19, 2012 | Added : ஜூன் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஜகார்தா: இந்தோனேஷியாவில் 70 பேருடன் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதி் ல் 27 பேர் பலியாகினர். மேலும் 58 பேர் மாயமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேஷியாவின் அம்போன் நகரிலிருந்து 70க்கும் மேற்பட்டோர் படகு ஒன்றில் , உணவுப்பொருட்கள் மற்றும் கட்டுமானப்பொருட்களுடன் , அருகே உள்ள மாலுக் தீவிற்கு சென்றனர். இவர்கள் சென்ற படகு புரூ தீவு அருகே சென்ற போது திடீரென நடுக்கடலில் முழ்கியது. இதில் 58 பேர் கடலில் முழ்கியுள்ளனர். காணாமல் போனவர்களின் மீட்க்கும் பணிகள் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 12 பேர் மீட்க்கப்பட்டுள்ளனர். கடலில் ராட்சத அலை எழுந்ததால் படகு முழ்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை