2G Scam: Row at JPC meet over witnesses | முடிந்தது 2-ஜி தொடர்பான பார்லி. கூட்டுக்குழுக் கூட்டம் | Dinamalar
Advertisement
முடிந்தது 2-ஜி தொடர்பான பார்லி. கூட்டுக்குழுக் கூட்டம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி: 2-ஜி அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட பாராளுமன்ற கூட்டுக்குழு கூட்டம் முடிவடைந்தது. இதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா உள்ளிட்ட சில சாட்சிகளை அழைத்து வாக்குமூலம் வாங்குவதா , வேண்டாமா என்பது குறித்து முடிவுகள் எடுக்கப்படவில்‌லை.
2-ஜி அலைவரிசை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகவும், இதனால் அரசுக்கு ரூ. 1.75 லட்சம் கோடி இழப்பீடு நடந்ததாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. முக்கிய குற்றவாளியாக முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். தற்போது அனைவரும் ஜாமினில் உள்ளார்.

இது தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு (‌ஜெ.பி.சி) அமைக்கப்பட்டுள்ளது. இன்று நடந்த கூட்டத்தில் ராஜாவை அழைத்து விசாரித்து வாக்குமூலம் வாங்குவதா வேண்டாமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாயின.
எனினும் ராஜாவை விசாரித்தால், முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் போது தொடர்புடையவர்களையும் விசாரி்க்க வேண்டும் என்பதால் முடிவுகள் எடுக்கப்படவில்லை. பிரதமரையும் அழைத்து விசாரிக்க வேண்டும் என்பதில் அவருக்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த சூழ்நிலையில் இன்று நடந்த கூட்டம் முடிவுற்றது.தற்போதைய நிலையில் இக்குழுவின் உறுப்பினர்களாக இருந்த பா.ஜ.வின் யஷ்வந்த்சி்ன்ஷா, ஜஸ்வந்த்சிங் ஆகியோர் குழுவிலிருந்துவிலக முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்