NDA PM should be like Vajpayee: Sushil Modi | பிரதமர் என்றால் வாஜ்பாய் போல் இருக்க வேண்டும்: சுஷில்குமார் மோடி| Dinamalar

பிரதமர் என்றால் வாஜ்பாய் போல் இருக்க வேண்டும்: சுஷில்குமார் மோடி

Added : ஜூன் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பாட்னா: பிரதமர் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் போன்றுஇருக்க வேண்டும் என பீகார் துணை முதல்வர் கூறினார். பா.ஜ.வில் செல்வாக்குமிக்க தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திரமோடியின் வளர்ச்சிக்கு கூட்டணியில் உள்ள சில தலைவர்கள் அதிருப்தி காண்பித்து வருகின்றனர்.

இன்று பேசிய பீகார் முதல்வர் நிதீஷ்குமார், பா.ஜ. பிரதமர் வேட்பாளர் மதச்சார்பற்றவராக இருக்க வேண்டும். அது யார் என்பதனை 2014- லோக்சபா தேர்தலுக்கு முன்பு இப்போதே அறிவிக்க வேண்டும் என்றார்.

இதற்கு வழிமொழிந்த பீகார் துணைமுதலவரும் பா.ஜ.வைச் சேர்ந்தவருமான சுஷில்குமார் மோடி, பிரதமர் வேட்பாளர் என்பவர் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியவராகவும், முன்னாள் பிரதமரான வாஜ்பாய் போன்று திறமையானவராகவும் சுதந்திரமாக முடிவு எடுக்கும் திறன் கொண்டவராக இருக்க வேண்டும் என கூறினார்.யார் மதச்சார்பற்றவர்: லாலு பேட்டி: இது குறித்து பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சித்தலைவருமான லாலுபிரசாத் கூறுகையில், பா.ஜ. மதச்சார்பற்ற தலைவர்கள் என யாரும் இல்லை. அப்படி யாராக இருந்தாலும் அதனை அவர்களால் காண்பிக்க முடியாது என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை