BJP fields Prakash Pant against Vijay Bahuguna in Sitarganj bypoll in Uttarakhand | உத்தர்க்காண்ட் இடைத்தேர்தல்: பா.ஜ. வேட்பாளர் அறிவிப்பு| Dinamalar

உத்தர்க்காண்ட் இடைத்தேர்தல்: பா.ஜ. வேட்பாளர் அறிவிப்பு

Updated : ஜூன் 19, 2012 | Added : ஜூன் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

டேராடூன்: உத்தர்க்காண்ட் மாநிலத்தில் நடக்க உள்ள இடைத்தேர்தலில் காங். சார்பில் முதல்வர் விஜய் பகுகுணா போட்டியிடும் தொகுதியில் பா.ஜ. தனது வேட்பாளரை அறிவித்துள்ளது. கடந்த மார்ச் -ஏப்ரலில் நடந்த உத்தர்க்காண்ட் ‌சட்டசபை தேர்தலில் காங். வெற்றி பெற்றது.
முதல்வராக விஜய்பகுகுணா பொறுப்பேற்றார். இவர் தற்போது எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்படவில்லை. இதைத்தொடர்ந்து சிதார்கஞ்ச் தொகுதி பா.ஜ. எம்.எல்.ஏ.வாக இருந்த கிரந்திமாண்டல் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்.கில் இணைந்தார்.

இதனால் இத்தொகுதிக்கு ஜூலை 8-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. முதல்வர் விஜய்பகுகுணா இத்தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் இவரை ‌எதிர்த்து பா.ஜ.சார்பில பிரகாஷ்பந்த் அறிவிக்கப்பட்டார். இதனை தேசிய தலைவர் நிதின்கட்காரி ‌அறிவித்தார்..முன்னதாக பகுஜன்சமாஜ், சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் வேட்பாளரை நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை