2G scam: JPC divided over calling in Raja | ராஜாவிடம் வாக்குமூலம் பெறும் முடிவு ; பார்லி., கூட்டுக்குழுவில் கருத்து மோதல்| Dinamalar

ராஜாவிடம் வாக்குமூலம் பெறும் முடிவு ; பார்லி., கூட்டுக்குழுவில் கருத்து மோதல்

Added : ஜூன் 19, 2012 | கருத்துகள் (16)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
2G scam: JPC divided over calling in Raja,ராஜாவிடம் வாக்குமூலம் பெறும் முடிவு ; பார்லி., கூட்டுக்குழுவில் கருத்து மோதல்

புதுடில்லி: ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கி ஜாமினில் இருக்கும் மாஜி மத்திய அமைச்சர் ராஜாவிடம் வாக்குமூலம் பெற பார்லி., கூட்டுக்குழு முன்பு ஆஜராக வேண்டும் என பா.ஜ., தரப்பில் வலியுறுத்தப்பட்டாலும், காங்கிரஸ் மற்றும் தி.மு.க,தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

பார்லி., கூட்டுக்குழு ஸ்பெக்ட்ரம் தொடர்பாக விசாரித்து வருகிறது. இன்று இக்குழு இது தொடர்பாக விவாதிக்க கூடியது. இதில் அனைத்துக்கட்சி சார்பில் உறுப்பினர்கள் உண்டு. பாஜ.,தரப்பில் பங்கேற்ற ஜஸ்வந்த்சிங், மற்றும் யஸ்வந்த்சின்கா, ராஜாவை ஆஜராகி விளக்கம் அளிக்க கேட்க வேண்டும். பிரதமரும் ஆஜராக அழைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு மற்ற கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ராஜாவை அழைக்கும் பட்சத்தில் இதற்கு முன்னதாக அமைச்சராக இருந்தவர்கள் குறிப்பாக பா.ஜ., காலத்தில் இருந்தவர்கள் வாஜ்பாய்வரை அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட வேண்டும் என்றனர். இதனால் இருதரப்பினர் இடையே கடும் கருத்து மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து எவ்வித முடிவும் எடுக்கப்படாமல் கூட்டம் முடிந்தது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavanuku Nallavan - earth,where else ?  ( Posted via: Dinamalar Android App )
20-ஜூன்-201207:30:30 IST Report Abuse
Nallavanuku Nallavan இது oru நாடகம். all are acting together. we get cheated everytime.
Rate this:
Share this comment
Cancel
ராம.ராசு - கரூர்,இந்தியா
19-ஜூன்-201222:04:11 IST Report Abuse
ராம.ராசு "ராஜாவை அழைக்கும் பட்சத்தில் இதற்கு முன்னதாக அமைச்சராக இருந்தவர்கள் குறிப்பாக பா.ஜ., காலத்தில் இருந்தவர்கள் வாஜ்பாய்வரை அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட வேண்டும்" என்று கேட்பதில் என்ன தவறு. ஒருவேளை அவர்கள் வாக்குமூலம் கொடுத்தால் இந்த வழக்கிற்கு இன்னும் கூடுதலான ஆதாரங்கள் கிடைக்கலாமே. ஒரு சிலர், ஒரு சில ஊடகங்கள் சொல்லுவது அனைத்தும் உண்மையென்று எடுத்துக்கொண்டால் சட்டம், வழக்கு, நீதிமன்றங்கள் எதற்க்காக...? பேசாமல் ஊடகங்கள் செய்திகளின் அடிப்படையிலேயே தண்டனை கொடுத்துவிடலாமே. பல வருடங்களுக்கு பிறகும், நீதிமன்றம் தீர்பளித்த பிறகும் மீண்டும் உயிர் பெற்ற வழக்குகள் எத்தனையோ உண்டு. ராசாவிற்கு ஆதரவாக இதை சொல்லவில்லை. விசாரணை என்பது அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே. அதை ஏன் எதிர்க்கட்சிகள் செய்ய தயக்கம் காட்ட வேண்டும். சாதாரணமானவர்கள் கேட்கத்தானே செய்வார்கள்.
Rate this:
Share this comment
Cancel
RAMESH - singapore  ( Posted via: Dinamalar Android App )
19-ஜூன்-201220:50:12 IST Report Abuse
RAMESH இளைஞர்களை தவறான வழியில் அழைத்துச்செல்வதே ஊழல் மத்தி்ய அரசும் பணம்தி்ண்ணி தி் மு க வும் தான்
Rate this:
Share this comment
Cancel
மக்கள் குரல் - முத்து நகர் / இந்தியா,இந்தியா
19-ஜூன்-201220:32:41 IST Report Abuse
மக்கள் குரல் எப்படி, கடைசி வரை எந்த முடிவும் எடுக்க படவில்லை , எப்படி எடுப்பாக ? அதன் முடிவு என்னன்னு தெளிவா முடிவு பண்ணிதான கூட்டம் போடுறது காங்கிரஸ் இதில் திமுக கூட்டு வேறு . பாவம் நங்கள் தான் ....... ? இதே ஒரு களவுல ஒருத்தன் பித்தள குடம் திருடி மாட்டினா மவன சென்மத்துக்கும் மறக்க முடியாத அளவுக்கு கிடைச்சிருக்கும் காவல் துறைகிட்ட ஆனால் ராசாவ பாருங்க எதோ நாட்டுக்கு பெருமை சேர்த்தமாதிரி சிரிச்சி கிட்டு போஸ் தருகிறார் . ஜனநாயகம் நான் செய்தால் குற்றம் இல்ல நீ செய்தால் கொடும் குற்றம் மாத்துங்க யாராவது மாத்துங்க .
Rate this:
Share this comment
Cancel
Rajan - Coimbatore,இந்தியா
19-ஜூன்-201220:17:24 IST Report Abuse
Rajan திரு வாஜ்பாய் போதாது. போபர்ஸ் ராஜீவ் காந்தி முதல் அகராதி பண்டித நேரு வரை ஆஜர்படுத்த வேண்டும் என்று சொல்லுங்கள். அப்பதான் எஸ்கேப் ஆகமுடியும். திருடனுக்கு திருடன் வக்காளத்து CHORIS....STUPITS
Rate this:
Share this comment
Cancel
Amudan - Mannarkudi  ( Posted via: Dinamalar Android App )
19-ஜூன்-201220:08:54 IST Report Abuse
Amudan கூட்டுக்குழு முன்பு காந்தி்யை அழைத்து ஏன்? சுதந்தி்ரம் வாங்கிக்கொடுத்தீர்கள் என்று கேளுங்கள். என்னய்யா இது? நாடு எங்கே போகிறது என்றே தெரியவில்லை.
Rate this:
Share this comment
Cancel
Amudan - Mannarkudi  ( Posted via: Dinamalar Android App )
19-ஜூன்-201220:01:30 IST Report Abuse
Amudan ஐயா எனக்கு சொல்லுங்க ஐயா ஊழல் நடந்ததா இல்லையா? அப்ப ஏன்? இவ்வளவு நாளா உள்ளே வைத்தீர்கள். பாவம் அவரை விட்டு விடுங்கள். அவருக்கு தொலைத்தொடர்புத் துறையை கொடுங்கள். பல கோடி செல்போன் இணைப்புகளாவது கொடுப்பாரு. இன்னொரு டிவி ஆரம்பிக்கட்டும். இப்பதான் தெரியுது நீங்கள் ஏன் பிரணாப்பை ஆதரிக்கிறீர்கள் என்று. காங்கிரசு எம் பி பேசாமல் காந்தி்யை அழைக்கச் சொல்லியிருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
A R Parthasarathy - Chennai,இந்தியா
19-ஜூன்-201219:24:06 IST Report Abuse
A R Parthasarathy இன்று சட்டத்தின் பிடியில் சிக்கியிருப்பவர் ராசா மட்டுமே. எனவே அவர் தான் ஆஜராகி தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும். அவர் சொல்லும்போது, யார் யார் பெயர் வருகிறதோ அவர்களை அழைத்து விசாரிக்கலாம். ஆனால் முதலில் ராசாவை விசாரிப்பதில் எந்த தவறும் இல்லை. உண்மையிலேயே ராசா குற்றமட்ட்ரவராக இருந்தால், அந்த தவறு நடைபெறுவதற்கு காரணமாக இருந்தவர்கள் யார் என்பதை அவர் சொல்லலாமே/ ஒரு நாடாளு மன்ற உறுபினர் தன்னுடைய சகாக்கள் முன்பு ஆஜராகி தன்னிலை விளக்கம் அளிப்பதில் எந்த தவறும் இல்லை என்றே நான் நினைக்கிறன்.
Rate this:
Share this comment
Cancel
kavikaavya - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
19-ஜூன்-201217:53:58 IST Report Abuse
kavikaavya எவன் தப்பு செய்தாலும் தப்புதான். இதிலென்ன ராஜாவை மட்டும் அழைப்பது,ஊருக்கு இழிச்சவாயன் ஆண்டி என்பதுபோல் இருக்கிறது இந்த பஞ்சாயத்து. அத்வானி என்ன ஊழல் புரியாதவரா? சோனியா என்ன அன்னை தெரசாவா? ஜெயா என்ன அன்னிபெசன்ட் அம்மையாரா? பொழப்ப பாத்துகுட்டு போங்கப்பா, எந்த அரசியல் கட்சியும் லோக்பால் மசோதாவுக்கு உண்மையான ஆதரவை தர தயாரில்லை தெரியுமா?இது எதைக்காட்டுகிறது?அம்புட்டு பயலும் காச அல்லரதுக்குதான் அரசியல் கட்சிகளில் சேருகிறார்கள் அன்பர்களே...
Rate this:
Share this comment
Cancel
Deepan Chakravarthy.B - Abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
19-ஜூன்-201217:48:53 IST Report Abuse
Deepan Chakravarthy.B மனோஜ் அவர்கள் கூறியது போல் மக்கள் புரட்சி ஒன்று விரைவில் நடக்க வேண்டும் இந்த ஊழல் அரசியல்வாதிகளை கலை எடுக்க வேண்டும்.... கருத்துகளுக்கு விரைவில் செயல் வடிவம் கொடுக்க மக்கள் முன் வர வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை