AITA may field two teams for Olympics: reports | பயசுடன் விளையாடும் விவகாரம்: ஏ.ஐ.டி.‌ஏ. புது முடிவு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பயசுடன் விளையாடும் விவகாரம்: ஏ.ஐ.டி.‌ஏ. புது முடிவு

Updated : ஜூன் 19, 2012 | Added : ஜூன் 19, 2012 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

புதுடில்லி: ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் விளையாட டென்னிஸ் வீரர்களிடையே எழுந்துள்ள கருத்து வேறுபாடு தீர்வு எட்டப்படாமல் உள்ளது. இதில் அகில இந்திய டென்னிஸ் சங்கம் , பயசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய விளையாட்டு சங்கத்தையும் வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளது.லண்டனில் ஜூலை 27-ல் ஒலிம்பிக் போட்டிகள் ‌துவங்குகின்றனர். இந்தியா சார்பில் டென்னிஸ் விளையாட்டிற்காக இரட்டையர் பிரிவை அகில இந்திய டென்னிஸ் சங்கங்கள் தேர்வு ‌செய்தது தேர்வுக்குழு இதில் லியாண்டர்பயஸ், பூபதி இடம் பெற்றனர்.

இதில் பூபதி திடீரென விலகினார். பின்னர் ரோவன் போபண்ணா பெயர் இடம் பெற்றது அவரும் விளையாட மறுத்தார்.இந்த விவகாரம் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் வரை சென்றது. இந்நிலையில் அகில இந்திய டென்னிஸ் சங்கமான (ஏ.ஐ.டி.ஏ.), மத்திய விளையாட்டுத்துறை அமைச்சக பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதில்எந்த முக்கிய முடிவுகளும் எடுக்கப்படவில்லை எனினும் 5 பரிந்துரைகளை ஏ.ஐ.டி.ஏ. தேர்வுக்குழு, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு சமர்பித்து கடிதம் அனுப்பியுள்ளது. மேலும் பயசுடன் அனுபவம் இல்லாத ஜூனியர் வீரர்களை அனுப்புவது வீணான காரியம் என கூறி தயக்கம் காட்டி வருகிறது. இதனால் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் விவகாரத்தில் இந்திய டென்னிஸ் வீரர்களின் பிடிவாதத்தால் ஏ.ஐ.டி.ஏ. மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் திணறி வருகிறது.

தவிர இரு அணிகளை ஒலிம்பிக் போட்டிகளில் அனுப்பலாமா என பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் 21-ம் தேதி்க்குள் முடிவினை அறிவிக்க வேண்டிய இக்ட்டான நிலையில் ஏ.ஐ.டி.ஏ. உள்ளதால் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bala - NY,யூ.எஸ்.ஏ
19-ஜூன்-201221:19:18 IST Report Abuse
Bala எல்லாரும் பயசை ஒதுக்குகிறார்கள் என்றால் தவறு பயசின் மேல் தான் உள்ளது........ அது என்ன என்பது தான் இந்த சாமான்யனுக்கு தெரியவில்லை.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை