Confusion in caste wise census | ஜாதிவாரி கணக்கெடுப்பாளர்கள் குழப்பம் !| Dinamalar

ஜாதிவாரி கணக்கெடுப்பாளர்கள் குழப்பம் !

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
Confusion in caste wise census, ஜாதிவாரி கணக்கெடுப்பாளர்கள் குழப்பம் !

காரைக்குடி: ஜாதிவாரி கணக்கெடுப்பில் ஜாதிகளை கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி,குறிப்பிட சொல்வதால், கணக்கெடுப்பாளர்கள் குழப்பத்தில் உள்ளனர். தமிழகம் முழுவதும் ஜாதிவாரி,பொருளாதார கணக்கெடுப்பு கடந்த ஏப்ரலில் தொடங்கி நடந்து வருகிறது.பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் மூலம்,கணக்கெடுப்பாளர், மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு கணக்கெடுத்து வருகின்றனர்.அரசு சார்பில் கையேடுகள் வழங்கப்பட்டுள்ளன.இதில் ஜாதிகளுக்குரிய பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆரம்பத்தில், பொதுமக்கள் எந்த ஜாதியை குறிப்பிடுகின்றனரோ? அதை குறிப்பிடவும் என கணக்கெடுப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதன்படி அவர்களும் கணக்கெடுத்துள்ளனர். கணக்கெடுப்பு ஓரளவு முடிந்து, விடுபட்ட வீடுகளில் மேற்பார்வையாளர்கள் கணக்கெடுத்து வருகின்றனர்.இன்னும் ஒரு வாரத்தில் முடிந்து விடும் என்று இருந்த நிலையில், தற்போது அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள கையேட்டின் படிதான் ஜாதியை பதிவு செய்ய வேண்டும், என மேற்பார்வையாளர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால் கையேட்டில் உள்ள ஜாதியை போன்று,கம்ப்யூட்டரில் திருத்தம் செய்ய வேண்டிய நிலையில் அவர்கள் உள்ளனர். இதற்கு கணக்கெடுப்பாளரும் அருகில் இருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் கணக்கெடுப்பு முடிய இன்னும் 20 நாட்களுக்கு மேல் ஆகும் என கூறப்படுகிறது.


மேற்பார்வையாளர் ஒருவர் கூறியதாவது: ஆரம்பத்திலேயே சரியாக பயிற்சி கொடுக்காமல், தற்போது பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ள சொல்கின்றனர். இன்னும் எத்தனை திருத்தங்கள் மேற்கொள்ள சொல்கின்றனரோ? என்று தெரியவில்லை, என்றார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THIRUMALAI BHUVARAGHAVAN - chennai,இந்தியா
19-ஜூன்-201219:37:40 IST Report Abuse
THIRUMALAI BHUVARAGHAVAN மக்களை பிரித்தாளும் ஆணவ அரசின் தேவைக்காகவே இந்த கணக்கெடுப்பு உதவும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. அரசு இந்த வேலையை உண்மையில் செய்யத்தேவையில்லை. ஏற்கனவே உள்ள பதிவேடுகளின் மூலமே இந்த தகவல்களை எளிதாக பெற முடியும். உண்மையில் அரசின் நோக்கம் சாதி வாரியாக கணக்கெடுத்து வறியோருக்கு உதவும் நோக்கம் இருந்தால் அரசிடம் இதுவரை உள்ள தகவலே போதுமானது.
Rate this:
Share this comment
Cancel
singaravelu - thiruvarur ,இந்தியா
19-ஜூன்-201218:54:02 IST Report Abuse
singaravelu ஜாதிகள் இல்லையடி பாப்பா குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்றான் முண்டாசுக் கவிஞன் பாரதி இன்றைய கல்வி வளர்ச்சியால், சமூக சீர்திருத்தத்தால் சாதிகள் வீழ்த்தப் பட்டிருப்பதை மக்கள் ஒப்புக் கொண்டாலும் சிலபேரின் சுயநலத்திற்கு சாதி தூண்டி விடப்படும் அணையா விளக்காக ஒளிர்ந்து கொண்டிருக்கிறது அதனால்தான் கணக்கெடுப்பில் கூட குழப்பம் நீடிக்கிறது ஆகட்டும் பார்க்கலாம்
Rate this:
Share this comment
Cancel
Ayathuray Rajasingam - Scarborough ,கனடா
19-ஜூன்-201218:35:08 IST Report Abuse
Ayathuray Rajasingam தமிழ் நாடு பின்னோக்கிக் கொண்டு செல்கிறது. ஏனைய மதத்தவர்களிடையேயும் சாதி உள்ளதா? மக்கள் வணக்கும் தெய்வங்களும் சாதிக்கேற்றவாறு அவதாரம் எடுக்கின்றனரா? சிவதத்துவம் அல்லது வேத நூல்கள் அல்லது சைவ சித்தாந்தங்கள் மனித வர்க்கத்தைப் பற்றி என்ன கூறுகின்றன. இப்பொழுது பிராமணர்களும் மாமிசம் இங்கு புசிக்கின்றார்கள். மற்றும் இறைச்சி வெட்டும் தொழிலும் ஈடுபடுகிறார்கள். பணத்துக்காக என்னவும் செய்கிறார்கள். இதுக்கு செலவழிக்கிற பணத்தில் ஒரு உருப்படியான தொழில் ஸ்தாபனத்தை தொடங்கியிருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
Tasmac Priyan - chennai,இந்தியா
19-ஜூன்-201217:52:39 IST Report Abuse
Tasmac Priyan சென்னை எக்மோர் ஸ்டேசனில் ஒரு அறிவிப்பு பார்க்கலாம் " மலம் கழித்தபின் இரு கைகளையும் நன்றாக கழுவவும" . அரசு அறிவிப்புகள் எல்லாமே இப்படிதான் முக்கியமானதை விட்டு விடுவார்கள். இதுவும் அப்படியே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.