DISTRICT NEWS | குறும்படத்துக்கு விருது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குறும்படத்துக்கு விருது

Added : ஜூன் 27, 2012

திருப்பூர் : திருப்பூரில் ஐந்து குறும்படங்களுக்கு "அரிமா விருது 2012' வழங்கப்பட்டது. திருப்பூர் சென்ட்ரல் லயன்ஸ் கிளப், ஆண்டுதோறும் குறும்பட விருது, சக்தி விருது வழங்கி வருகிறது. இந்தாண்டுக்கான விருது வழங்கும் விழா, சங்க அலுவலகத்தில் நடந்தது. கோவை பாலமுருகன் தயாரித்த "ஓயாமாரி' குறும்படத்துக்கு முதலிடம், கோத்தகிரி தவமுதல்வன் தயாரித்த "பச்சை ரத்தம்' இரண்டாமிடம், புதுவை யுகபாரதி தயாரித்த "குருவி தலையில் பனங்காய்' குறும்படம் மூன்றாமிடம் பெற்றன.இவர்களுக்கு "அரிமா குறும்பட விருது 2012' வழங்கப்பட்டது. திருப்பூர் சூர்யபாரதியின் "அன்புள்ள அப்பா', திருநாவுக்கரசின் "புதிய உலகம்' ஆகிய குறும்படங்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது. கோபி சுமதிஸ்ரீ எழுதிய "தகப்பன் சாமி' கவிதைக்கும், மதுரை மஞ்சுளா எழுதிய "மொழியின் கதவு' கவிதை தொகுப்புக்கும், சக்தி விருது 2012 வழங்கப்பட்டது. சுதாமா கோபாலகிருஷ்ணன், பரிசுகளை வழங்கினார். சுப்ரபாரதி மணியன், பரிசு பெற்ற குறும்படங்களை பற்றி விளக்கினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X