வலங்கைமானில் ஆகஸ்ட் 12 ல் பாடகச்சேரி சுவாமிகள் குருபூஜை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வலங்கைமானில் ஆகஸ்ட் 12 ல் பாடகச்சேரி சுவாமிகள் குருபூஜை

Added : ஆக 01, 2010

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில், பாடகச்சேரி ராமலிங்க சித்தரின் 61ம் ஆண்டு குருபூஜை ஆக.,12ல் நடக்கிறது. பாடகச்சேரி சுவாமிகள் கோவை மாவட்டத்தில் 1876 ல் அவதரித்தவர்.


 தன் 12 ம் வயதில் பாடகச்சேரி வந்து, ஆன்மிக வாழ்வைத் துவங்கினார். நோயால் வாடும் ஏழை மக்களுக்கு மூலிகை மருத்துவம் செய்து வந்தார். 1920 ல் கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலைப் புதுப்பித்து திருப்பணி செய்தார். இக்கோயிலில் பாடகச்சேரி சுவாமிகளுக்கு சன்னதி உள்ளது. வள்ளலார் மீது அதிக ஈடுபாடு கொண்ட சுவாமிகள், அன்னதானம் செய்வதில் ஆர்வம் காட்டினார். 1949ல், திருவொற்றியூர் பட்டினத் தார் சமாதி அருகில் ஆடிப்பூரத்தன்று ஜீவசமாதி அடைந்தார். திருவாரூர் பாடகச்சேரியில் வரும் 12ம்தேதி, சுவாமிகளின் 61ம் ஆண்டு குருபூஜை நடக்கிறது.


விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக காலை10 மணிக்கு அன்னதானக்கூடம் திறப்பு விழாவும், சுவாமிகளின் வரலாற்றை பற்றிய "ஆன்மசரிதம்-60' என்னும் நூலும் வெளியிட படுகிறது. நிகழ்ச்சிக்கு கருவூரார் சித்தபீடம் பாலசுப்பிரமணியன் சுவாமி தலைமை வகிக்கிறார். மாவட்ட கலெக்டர் சந்திரசேகரன் முன்னிலை வகிக்கிறார். கும்பகோணம்- நீடாமங்கலம் ரோட்டிலுள்ள வலங்கைமானில் இருந்து 1.5 கி.மீ., சென்றால் பாடகச்சேரியை அடையலாம். இந்த நிகழ்ச்சி தொடர்பாக சித்தர் நிரந்தர அன்னதான கமிட்டி மானேஜிங் டிரஸ்டி இளங்கோவை 94430 75837 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X