DISTRICT NEWS | வடசிறுவளூர் பள்ளியில் புதிய கட்டடங்கள் திறப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வடசிறுவளூர் பள்ளியில் புதிய கட்டடங்கள் திறப்பு

Added : செப் 01, 2012

திண்டிவனம்:திண்டிவனம் அடுத்த வடசிறுவளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிய கட்டடங்கள் திறப்பு விழா நடந்தது.வடசிறுவளூர் நடுநிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் 3 லட்ச ரூபாய் செலவில் தலைமை ஆசிரியர் அறை மற்றும் நூலக கட்டடம் கட்டப்பட்டது. இந்த கட்டடங்களை ஒலக்கூர் ஏ.இ.ஓ., வெங்கடேசன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் நெடுமாறன் திறந்து வைத்தனர்.ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன், ஊராட்சித் தலைவர் ரவி, தலைமை ஆசிரியை பத்மாவதி, ஓய்வுப் பெற்ற தலைமை ஆசிரியர்கள் ராமதாஸ், காத்தவராயன் மற்றும் கல்விக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்துக் கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X