mdu dist | வழிகாட்டுகிறது கோவில்பாப்பாகுடி ஆரம்ப சுகாதார நிலையம்| Dinamalar

வழிகாட்டுகிறது கோவில்பாப்பாகுடி ஆரம்ப சுகாதார நிலையம்

Added : செப் 09, 2012

கூடல்நகர்:மதுரை கோவில்பாப்பாகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தனியார் மருத்துவமனைக்கு நிகராக சுத்தமாக பராமரிக்கப்பட்டு, மற்ற சுகாதார நிலையங்களுக்கு முன் உதாரணமாய் இருக்கிறது. இங்கு நோயாளிகளுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் உண்டு. உணவருந்த தனி அறை உண்டு. அதுவும் உடனுக்குடன் சுத்தம் செய்யப்படுகிறது. இங்கு 2 டாக்டர்கள், 18 <ஊழியர்கள் பணிபுரிகின்றனர். வாசலில் மரம், செடிகள் வேலியிட்டு பராமரிக்கப்படுகிறது. கழிப்பறைகளும் "பளிச்'சென்று, சுத்தமாக உள்ளது. மின்தடையை சமாளிக்க ஜெனரேட்டர் வசதியும் உண்டு. கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை அவர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. மருந்து, மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை ஏற்பட்டால், அதை வாங்க சிறப்பு நிதி எப்போதும் தயாராக உள்ளது. மொத்தத்தில், இந்த சுகாதார நிலையம், தனியார் மருத்துவமனைக்கு ஈடாக, மற்ற சுகாதார நிலையங்களுக்கு முன்உதாரணமாக சுத்தமாக பராமரிக்கப்படுகிறது.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X