district news | மதுரையில் பழமையான இடங்களுக்கு பாரம்பரிய நடைபயணம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மதுரையில் பழமையான இடங்களுக்கு பாரம்பரிய நடைபயணம்

Added : செப் 17, 2012

மதுரை:மதுரையில் தானம் அறக்கட்டளை, பாத்திமா கல்லூரியின் வரலாற்றுத் துறை சார்பில் பாரம்பரிய நடைபயணம் நடந்தது.இதில் தொல்லியல் நிபுணர் வேதாச்சலம் பேசியதாவது: நகரில், அடையாளம் காணப்பட்ட இடங்களில் மிகப் பழமையானதாக 12 இடங்கள் உள்ளன. மீனாட்சி அம்மன் கோயில், திருமலை நாயக்கர் அரண்மனை, சேதுபதி மருத்துவமனை, பத்து தூண்கள் சந்து, விளக்குத்தூண், கொத்தவால் சாவடி, தேர்கள், பிற்கால பாண்டியர்களின் அரண்மனை வாயிலான விட்டவாசல், ராயகோபுரம், எழுகடல் தெரு, புதுமண்டபம், நகரா மண்டபம் ஆகியவை இன்றும் பண்டைய அடையாளமாக உள்ளன.ஆங்கிலேயர் ஆட்சியின்போது, மதுரையை விரிவுபடுத்த, அன்றைய கலெக்டர் ஜான் பிளாக்பர்ன் முடிவு செய்தார். தற்போது வெளிவீதியாக உள்ள பகுதியில் இருந்த அகழிகள் மூடப்பட்டன. அவரது நினைவாக விளக்குத்தூண் உருவானது. கல்லாலான யானை சிற்பத்தை கொண்டு யானைக்கல் சந்திப்பும் உருவானது. பிற்கால பாண்டியர் அரண்மனையின் எச்சமாக பராமரிக்கப்படுவது விட்டவாசல், என்றார். வரலாற்றுத் துறை பேராசிரியர் மரியபாக்கியம், தானம் அறக்கட்டளை திட்டத் தலைவர் பாரதி, மாணவிகள் சாந்தி, ஆர்த்தி, முத்துப்பிரியா உட்பட பலர் பேசினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X