former president pratibha patil introuble over gifts | பரிசு பொருளை திரும்ப ஒப்படைக்க பிரதீபாவுக்கு உத்தரவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பரிசு பொருளை திரும்ப ஒப்படைக்க பிரதீபாவுக்கு உத்தரவு

Updated : செப் 26, 2012 | Added : செப் 26, 2012 | கருத்துகள் (10)

புதுடில்லி: முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டில் தனக்கு கிடைத்த பரிசு பொருள்‌களை வரும் ஜனவரி 13-ம் தேதிக்குள் ஜனாதிபதி மாளிகையில் ஒப்படைக்க வேண்டுமென தகவல் அறியும் சட்ட ஆர்வலர் சுபாஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியாக பிரதீபா பாட்டில் தான் பதவி வகித்த காலத்தில் தனக்கு கிடைத்த பரிசு பொருள்களை ஓய்வு பெற்ற பின்னர் தற்போது வசித்து வரும் அமரவாதிக்கு ‌‌எடுத்து சென்றார். இவ்விவகாரம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளிப்பட்டது. இது குறித்த விவரம் வெளியே தெரிந்த நிலையில் பிரதீபா பாட்டில் கொண்டு சென்ற பரிசு பொருள்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என ஜனாதிபதி மாளி்கை ‌கேட்டுக்கொண்டுள்ளது. பரிசு பொருளை பிரதீபா ‌கொண்டு செல்ல அனுமதித்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை மேற்‌‌கொள்ள வேண்டும் என சுபாஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். முன்னதாக அப்துல் கலாம் தான்பதவி வகித்த காலத்தில் தனக்கு கிடைத்த பரிசு பொருள்களை தன்னுடன் ‌எடுத்து சென்றார். ஆனால் அவை அனைத்தும் பயனுள்ள ஆராய்ச்சிக்காகவே பயன்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதியாக பதவிகித்த காலத்தில் பிரதீபா பாட்டில் வெளிநாட்டு பயணம் செய்வதில் அதிகளவில் அரசு பணத்தை செலவிட்டது,மற்றும் ஓய்வு ‌பெற்ற பின்னர் வசிப்பதற்காக கட்டப்ப்டட வீட்டிற்கு அரசுப்பணத்தை செலவிட்டது உட்பட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்குது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X