district news | மனிதச் சங்கிலி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மனிதச் சங்கிலி

Added : அக் 03, 2012
Advertisement

ஈரோடு: ஈரோட்டில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நவயுகம் அறக்கட்டளை மற்றும் ஞானோதயம் கல்வி அறக்கட்டளை சார்பில் மனிதச்சங்கிலி நடந்தது.பி.எஸ்., பார்க்கில் துவங்கி, எம்.ஜி.ஆர்., சிக்னலில் முடிந்தது. அறக்கட்டளை தலைவர் ராஜா மனித சங்கிலியை துவக்கி வைத்தார். நிறுவன தலைவர் குருஜி ஜெயகிருஷ்ணன் தலைமை வகித்தார். நிர்வாக இயக்குனர் கணேஷ் வரவேற்றார்.இதில், பிரப் சாலை வழியாக சென்ற பொதுமக்களுக்கு, காந்தியின் சொற்பொழிவுகள் அடங்கிய துண்டு பிரசுரத்தை வழங்கி, "அஹிம்சையை கடைபிடியுங்கள்' என, வலியுறுத்தினர். ஈரோடு மாவட்டம் நவயுகம் அறக்கட்டளை பொறுப்பாளர் கனகராஜ் ஏற்பாடு செய்திருந்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X