Alumni Meet | நம் பள்ளிக்கு நல்லது செய்வோம்: முன்னாள் மாணவர்கள் உறுதி| Dinamalar

நம் பள்ளிக்கு நல்லது செய்வோம்: முன்னாள் மாணவர்கள் உறுதி

Added : அக் 09, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே, என்.ஜி.ஜி.ஓ., காலனியில் உள்ள, அசோகபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சங்கக் கூட்டம் நடந்தது.
இப்பள்ளி, 1962ம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்த ஆண்டுடன், 50 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, பொன்விழா ஆண்டை சிறப்பாக கொண்டாட, இப்பள்ளியில் படித்தவர்கள், இப்பள்ளியின் வளாகத்தில் ஒன்று கூடினர்.
பள்ளித் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். இப்பள்ளியில், கணித ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற தர்மராஜ், முன்னிலை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வேலுச்சாமி துவக்கி வைத்தார்.
இதில், அசோகபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம் என்ற பெயரில், புதிய அமைப்பு துவக்கப்பட்டது.
நிர்வாகிகளாக ஜெயபாலன், செயலாளராக ரவீந்திரன், பொருளாளராக நடராஜன், மக்கள் தொடர்பு அலுவலராக ஜமுனா மற்றும் துணைத் தலைவர்கள், இணைச் செயலாளர்கள், பகுதி வாரியாக கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
முன்னாள் மாணவர் சங்க செயலாளர் ரவீந்திரன் கூறியதாவது: நாம் படித்த பள்ளியை சிறந்த முறையில் பேணி, பாதுகாத்து, வருங்கால சந்ததிகளிடம் சிறந்த முறையில் ஒப்படைக்க வேண்டியது, இப்பள்ளியில் படித்த மாணவர்களின் கடமையாகும். இதை அனைவரும் ஒருங்கிணைந்து, நிறைவேற்ற வேண்டும். எங்கள் பள்ளியின் தேவையை அறிந்து, கூடுதல் வகுப்பறைகளோ அல்லது ஆடிட்டோரியமோ, கட்டித் தர ஆலோசித்தோம். இன்னும் அதிக எண்ணிக்கையில், முன்னாள் மாணவர்களை இணைத்து, அவர்களின் கருத்துகளையும் கேட்றிந்து, பள்ளி நிர்வாகத்துடன் கலந்து, இறுதி முடிவு எடுக்கப்படும். அசோகபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 1962 முதல் 2011 வரை படித்த மாணவ, மாணவிகள் புதியதாக துவக்கப்பட்ட முன்னாள் மாணவர்கள் சங்கத்தில் இணையலாம். விருப்பம் உள்ளவர்கள் 93627 55665, 99449 76420 என்ற எண்களில் தொடர்பு கொண்டு, பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம், என்றார்.




Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X