கோடநாடு எஸ்டேட் விவகாரம்: 500 பேர் மீது வழக்கு பதிவு| Dinamalar

கோடநாடு எஸ்டேட் விவகாரம்: 500 பேர் மீது வழக்கு பதிவு

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

கோத்தகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கோடநாடு எஸ்டேட் தேயிலை தொழிற்சாலைக்குள் ஆய்வு நடத்த வந்த அதிகாரிகளை தடுத்தது தொடர்பாக, அ.தி.மு.க.,வினர் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோத்தகிரி கோடநாடு எஸ்டேட்டில் அனுமதி மீறி தொழிற்சாலை கட்டப்பட்டுள்ளதாக, ஊராட்சித் தலைவர் பொன்தோஸ் புகார் கொடுத்திருந்தார். இதன்படி, தமிழக அரசு ஒருநபர் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட்டது. அக்குழு முதற்கட்ட விசாரணைக்குப் பின், ஆவணங்களை பெற்றுச் சென்றது.


இந்நிலையில், நேற்று முன்தினம் கோடநாடு ஊராட்சித் தலைவர் பொன்தோஸ், சர்ச்சைக்குரிய இடத்தை ஆய்வு செய்வதற்காக, வருவாய் துறை அலுவலர்களுடன் கோடநாடு எஸ்டேட்டுக்கு சென்றார். ஊராட்சி தலைவர் மற்றும் வருவாய் அலுவலர்களிடம், "எஸ்டேட்டினுள் செல்வதற்கு நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெறவில்லை; இதனால், ஆய்வு செய்ய எஸ்டேட்டினுள் நுழைய விடமாட்டோம்' என, அ.தி.மு.க.,வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், ஆய்வு செய்ய முடியாமல் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.


சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என, சோலூர்மட்டம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதன் அடிப்படையில், அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக, அ.தி.மு.க., மாவட்டச் செயலர் செல்வராஜ், மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., சின்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., செல்வராஜ், முன்னாள் அமைச்சர் மில்லர், அண்ணா தொழிற்சங்கம் தமிழ்மணி, ஜெயராமன், கீழ்கோத்தகிரி முன்னாள் ஒன்றியச் செயலர் மாதன், இளைஞரணி மாவட்டத் தலைவர் ரவி உள்ளிட்ட 500 பேர் மீது, 143, 147, 294 பி, 353 ஆகிய பிரிவுகளில் சோலூர்மட்டம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.