கோர்ட் அனுமதியின்றி விசாரணை கைதிகளுக்கு விலங்கு கூடாது: ஐகோர்ட் கிளை உத்தரவு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கோர்ட் அனுமதியின்றி விசாரணை கைதிகளுக்கு விலங்கு கூடாது: ஐகோர்ட் கிளை உத்தரவு

Added : ஆக 08, 2010
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை: சிறையில் இருந்து விசாரணை கைதிகளை கோர்ட்டிற்கு அழைத்து செல்லும் போது, கோர்ட் அனுமதியின்றி கை விலங்கு அணிவிக்க கூடாது, என மதுரை ஐகோர்ட் கிளை குறிப்பிட்டது.


தேனி மாவட்டம் கே.கே.பட்டியை சேர்ந்த சிவனாண்டி தாக்கல் செய்த மனு: என் மகன் மனோகரன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, மதுரை சிறையில் உள்ளார். அவரை விசாரணைக்காக உத்தமபாளையம் கோர்ட்டிற்கு ஆயுதம் ஏந்திய போலீசார் அழைத்து செல்கின்றனர். அவரது கையில் விலங்கு அணிவிக்கின்றனர். இயற்கை உபாதைகளை கழிக்கக் கூட, அவர்கள் விலங்கை கழற்ற அனுமதிப்பதில்லை. கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டோர், தப்ப முயற்சிப்பவர்களுக்கு மட்டுமே விலங்கு அணிவிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட கோர்ட் அனுமதியின்றி விசாரணை கைதிகளுக்கு விலங்குகள் அணிவிக்க கூடாது என போலீஸ் சட்டம் தெரிவிக்கிறது. கோர்ட்டிற்கு அழைத்து செல்லும் போது, மகனுக்கு கை விலங்கு அணிவிக்க கூடாது, என தேனி எஸ்.பி., மற்றும் மதுரை சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் வக்கீல் எஸ்.எம்.ஏ.ஜின்னா ஆஜரானார். நீதிபதி ஆர்.மாலா, கோர்ட் அனுமதியின்றி மனுதாரருக்கு கை விலங்கு அணியக்கூடாது, என போலீஸ் மற்றும் சிறை துறையினருக்கு உத்தரவிட்டார்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை