pathmaia pai: goeographicla status | புவிசார் குறியீடு பதிவேட்டில்இடம் பிடித்தது பத்தமடை பாய்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புவிசார் குறியீடு பதிவேட்டில்இடம் பிடித்தது பத்தமடை பாய்

Updated : நவ 06, 2012 | Added : நவ 05, 2012 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
புவிசார் குறியீடு பதிவேட்டில்இடம் பிடித்தது பத்தமடை பாய்

சென்னை: திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் தயாராகும் பாய், நாச்சியார் கோவில் குத்துவிளக்கு, ஆகியவை, புவிசார் குறியீடு பதிவேட்டின் இதழில், இடம் பெற்றுள்ளன.

சில இடங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், பிரசித்தி பெற்றவையாக இருக்கும். காஞ்சிபுரம் பட்டு, திருநெல்வேலி அல்வா, தஞ்சாவூர் பொம்மை, என, அந்தந்த ஊருக்குத் தனித்துவம் கொண்டதாக, இந்தப் பொருட்கள் இருக்கும். அறிவுசார் சொத்துரிமை துறையின் கீழ், புவிசார் குறியீடு வருகிறது.பிரசித்தி பெறும் பொருட்களுக்கு, புவிசார் குறியீடு பதிவு பெற்றால், அந்தப் பொருளை, வேறு எந்தப் பகுதியிலும் தயாரித்து, உரிமை கொண்டாட முடியாது. இந்தக் குறியீடு பெற வேண்டும் என்றால், முதலில், அந்தத் துறையிடம் விண்ணப்பிக்க வேண்டும்.பத்தமடை எனும் ஊரில் தயாரிக்கப்படும் பாய், திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தி பெற்றது.

தாமிரபரணி ஆற்றின் கரையில் விளையும் கோரைப் புல் கொண்டு, இந்தப் பாய், தயாராகிறது. அதேபோல், கும்பகோணம் அருகில் உள்ள, நாச்சியார் கோவிலில், குத்துவிளக்கு தயாரிக்கப்படுகிறது. வண்டல் மண், "மெட்டல்' கொண்டு, இந்த விளக்கு தயாரிக்கப்படுகிறது. பத்தமடை பாய், நாச்சியார் கோவில் குத்துவிளக்கு, இரண்டையும், புவிசார் குறியீடு பதிவேட்டில், பதிவு செய்வதற்காக, தமிழ்நாடு கைவினை மேம்பாட்டுக் கழகம் சார்பில், விண்ணப்பிக்கப்பட்டது.

இதற்கான பணிகளுக்காக, அறிவுசார் சொத்துரிமை வழக்குகளில் ஆஜராகும், வழக்கறிஞர் சஞ்சய்காந்தி நியமிக்கப்பட்டார். விண்ணப்பங்களை, புவிசார் குறியீடுத் துறை பரிசீலித்து, அதன் பதிவாளர் தலைமையில், ஆய்வுக் குழுக் கூட்டம் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில், இந்தப் பொருட்களின் தனி சிறப்பு, தயாரிக்கும் முறை பற்றி விளக்கப்பட்டது. பின், விண்ணப்பங்களை, ஆய்வுக் குழு ஏற்று, புவிசார் குறியீட்டுக்கான இதழில், வெளியிட்டு உள்ளது.

இதுகுறித்து, வழக்கறிஞர் சஞ்சய்காந்தி கூறியதாவது:தற்போது, பத்தமடை பாய், நாச்சியார் கோவில் விளக்கு, இரண்டும், இதழில் வெளியிடப்பட்டுள்ளன. நான்கு மாதங்கள் முடிந்த பின், இவற்றுக்கு சான்றிதழ் கிடைக்கும்.அதன்பின், இந்தப் பொருட்களை, வேறு எந்தப் பகுதியிலும் தயாரித்து, அவைகளை பத்தமடை பாய் என்றோ, நாச்சியார் கோவில் விளக்கு என்றோ, யாராவது விற்பனை செய்தால், அவர்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கலாம்.இவ்வாறு, சஞ்சய்காந்தி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gokul - Bangalore,இந்தியா
06-நவ-201217:54:00 IST Report Abuse
Gokul இதெல்லாம் சரி...தாமிரபரணி ஆறு இன்னும் எதனை நாளைக்கு இருக்கும் எனபது தான் என்னோட டவுட்....
Rate this:
Share this comment
Cancel
Durai selvaraju - Thanjavur,இந்தியா
06-நவ-201214:45:50 IST Report Abuse
Durai selvaraju பாரம்பரிய கலை மற்றும் கைவினைஞர்களுக்கு பெருமை சேர்க்கும் செய்தி...வழக்கறிஞர் திரு.சஞ்சய்காந்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...தஞ்சாவூர் தட்டும், ஓவியமும், தலையாட்டி பொம்மையும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனவா? அவற்றுக்கும் புவிசார் குறியீடு பெறவேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
Shaikh Miyakkhan - jeddah,சவுதி அரேபியா
06-நவ-201213:46:26 IST Report Abuse
Shaikh Miyakkhan பாசமுள்ள பத்தமடை எங்களது ஊர் பாய்க்கு புவிசார் குறியீடு பதிவேட்டில், பதிவு செய்வதற்காக உதவிய வழக்கறிஞர் சஞ்சய்காந்தி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றின் வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X