Old Memories | அன்னூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 40 ஆண்டுக்கு பின் சந்தித்த மாணவர்கள்| Dinamalar

அன்னூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 40 ஆண்டுக்கு பின் சந்தித்த மாணவர்கள்

Added : டிச 18, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

அன்னூர்: அன்னூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், 40 ஆண்டுகளுக்கு முன் எஸ்.எஸ்.எல்.சி., படித்த மாணவர்கள் ஒன்றாக சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது.
அன்னூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், 1971-72ம் ஆண்டில், எஸ்.எஸ்.எல்.சி., (ஓல்டு) படித்த மாணவர்கள் ஒன்றாக சந்திக்க முடிவு செய்தனர். இதற்காக பள்ளியில், 1972ல் எஸ்.எஸ்.எல்.சி., "பி' வகுப்பில் படித்தவர்கள் பட்டியலும், குரூப் போட்டோவும் பெறப்பட்டது. பட்டியலை வைத்து தேடியதில், அப்போதைய மாணவ, மாணவியர் 38 பேரில், இரு பெண்கள் உள்பட 7 பேர் இறந்த தகவல் தெரிய வந்தது. மூன்று பேர் முகவரி கண்டுபிடிக்க முடியவில்லை.


மீதமுள்ள 28 பேருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 22 பேர் அன்னூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த சந்திப்பில் பங்கேற்றனர். சந்திப்பில், ஏழு பேர் பேரக்குழந்தைகளுடனும், 15 பேர் வாழ்க்கைத் துணையுடனும் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் சர்மா வரவேற்றார்.


நாமக்கல்லில், யுனைடெட் இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில், முதுநிலை மேலாளராக பணிபுரியும் நஞ்சப்பன், சேலம் ஸ்டீல் பிளான்டில் அலுவலராக உள்ள பழனிச்சாமி ஆகியோர் தாங்கள் சந்தித்த சோதனை, பிரச்னை குறித்து பகிர்ந்து கொண்டனர். விவசாயம் மற்றும் வணிகத்தில் ஈடுபட்டுள்ள முன்னாள் மாணவர்கள் தங்கள் தொழில் அனுபவம், குடும்பம் குறித்து தெரிவித்தனர்.


பங்கேற்றவர்களில் பலர் 40 ஆண்டுக்கு பின் சந்தித்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். தங்கள் வாழ்வில் முன்னேற உதவிய அன்னூர் அரசு பள்ளிக்கு ஸ்கேனருடன் கூடிய பிரிண்டர் வழங்கவும், 10 மற்றும் பிளஸ்2வில் முதல் மதிப்பெண் பெறும் மாணவருக்கு ரொக்கப்பரிசு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டது.


சந்திப்பில், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகி கார்த்திகேயன், தொழிலதிபர் சுந்தரம், அப்போதைய மாணவர் மன்ற தலைவர் சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X