Derailment in Bihar | பீகாரில் ரயில் தடம் புரண்டது ; பயணிகள் உயிர் தப்பினர் ; நக்சல்கள் தொடர்பு இல்லை| Dinamalar

பீகாரில் ரயில் தடம் புரண்டது ; பயணிகள் உயிர் தப்பினர் ; நக்சல்கள் தொடர்பு இல்லை

Updated : மே 25, 2010 | Added : மே 25, 2010 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பீகார்,ரயில்,தடம்,புரண்டது,Derailment,Bihar

பாட்னா: விமானம் விழுந்து 100 க்கும் மேற்பட்டோரை பலி வாங்கிய துயரம் மனதை விட்டு அகலும் முன்னதாக மீண்டும் பீகாரில் ஒரு விபத்து சம்பவம் நடந்துள்ளது. இந்த விபத்தில் எத்தனைபேர் இறந்தனர், எத்தனை பேர் காயமுற்றனர் என்ற விவரம் இன்னும் அறியப்படவில்லை. பீகாரில் நடந்துள்ள இந்த சம்பவ விவரம் வருமாறு : டில்லியில் இருந்து கவுகாத்தி செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் நவ்காசியா என்ற ரயில்வே ஸ்டேஷன் ( கத்தியார்- ககாரியா இடையில் ) அருகே சென்று கொண்டிருந்த போது தடம் புரண்டிருக்கிறது. காலை 6. 45 மணி அளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

மொத்தம் 14 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து புரண்டது. ரயில் சென்று கொண்டிருந்தபோது பலத்த சப்தத்துடன் வெடிக்கும் சப்தம் கேட்டதாகவும், இதனால் ரயில் டிரைவர் அவசரமாக பிரேக் போட்டதால் ரயில் கவிழ்ந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல் தெரிவிக்கிறது. பல பயணிகள் சிக்கியுள்ளனர். காயமுற்றவர்கள் விவரம் இன்னும் வரவில்லை. மாவோ., நக்சல்கள் தாக்குதல் இருக்குமோ என்ற காரணத்திற்கு அப்படி இருக்க வாய்ப்பில்லை என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஏனெனில் இந்தப்பகுதியில் நக்சல்கள் இருக்க வாய்ப்பு இல்லை என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த பீகாரில் உள்ள பகல்பூர் மாவட்ட உயர் அதிகாரிகள் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இந்த விபத்து காரணமாக இந்த ப்பகுதியில் ரயில் போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. சில ரயில்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Somu - Chennai,ஆப்கானிஸ்தான்
25-மே-201014:17:25 IST Report Abuse
 Somu What happened to law and order in our country?
Rate this:
Share this comment
Cancel
கா கார்த்தி - villupuram,இந்தியா
25-மே-201013:48:27 IST Report Abuse
 கா கார்த்தி ரயில் ஓட்டுனர்(ஓட்டுனர்களுக்கு)களுக்கு கவனம் தேவை.
Rate this:
Share this comment
Cancel
ப.சங்கர் - தேனி,இந்தியா
25-மே-201011:44:52 IST Report Abuse
 ப.சங்கர் விபத்து நேர தகவல் தொடர்பினை அதி நவினமாக்குங்கள் ப்ளீஸ்...
Rate this:
Share this comment
Cancel
sathishkumar - tirupur/tn,இந்தியா
25-மே-201010:45:07 IST Report Abuse
 sathishkumar இந்த கேடு கெட்ட ரயில்வே department கு எத்தனை தொழில் நுட்பம் குடுத்தாலும் தேறாத வேஸ்ட் depatment ,பேசாமே ரயில்வே முழுவதும் பிரைவேட் கையில் கொடுத்து விடலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை