sex abuse case against teachers | வகுப்பறையில் ஆசிரியர்கள் இருவர் "லீலை' ; ஆபாசம் அம்பலம் | Dinamalar
Advertisement
வகுப்பறையில் ஆசிரியர்கள் இருவர் "லீலை' ; ஆபாசம் அம்பலம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

வால்பாறை : வால்பாறை, அரசு பள்ளி வளாகத்தில், ஆபாச நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை கோரி, பொதுமக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இணையதளத்தில் வெளியானது :

கோவை மாவட்டம், வால்பாறையில், சோலையாறு எஸ்டேட் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது; 150 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியர், வேறு ஒரு அரசு பள்ளியின் தலைமை ஆசிரியையுடன், நிர்வாணமாக இருப்பது போன்ற ஆபாசப் படங்கள், சமீபத்தில் இணையதளம் ஒன்றில் வெளியானது. இது, இப்பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை கோரி, பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள், வால்பாறை - பொள்ளாச்சி மெயின் ரோட்டில், நேற்று காலை, சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வால்பாறை இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையிலான போலீசார், பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர். அப்போது, ஆபாச ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க, மக்கள் கோரினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதைத் தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் காரணமாக, அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து, பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் முனியசாமி மற்றும் பொதுமக்கள் கூறியதாவது: வால்பாறை, சோலையாறு எஸ்டேட் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் உதயன், 49, வேறு ஒரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியையுடன், பள்ளி வகுப்பறையில் உல்லாசமாக இருப்பது போன்ற காட்சிகள், இணையதளத்தில் வெளியாகியுள்ளன.

இது போன்ற சம்பவங்களை பார்க்கும் போது, பள்ளியில் பயிலும் மாணவியருக்கு போதிய பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை காணப்படுகிறது. எனவே, ஆபாச நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.மூன்றாவது சம்பவம்

வால்பாறை அடுத்துள்ள காடம்பாறையில் பணிபுரிந்து வந்த மின்வாரிய இன்ஜினியர் சுப்ரமணியம், சமீபத்தில், செக்ஸ் புகாருக்கு உள்ளாகி கைதானார். இவரிடம் இருந்து எண்ணற்ற பெண்களின் ஆபாசப் படக் காட்சிகள், "சிடி'க்களாக பறிமுதல் செய்யப்பட்டன. இவரே வீடியோ எடுத்திருந்ததும் அம்பலமானது. இந்த அசிங்கமே இன்னும் மறையாத நிலையில், அடுத்ததாக, வால்பாறை தாசில்தார் குணாளன் மீது, அலுவலகத்தில் தற்காலிக எழுத்தராக பணிபுரிந்து வந்த காளீஸ்வரி என்ற பெண், செக்ஸ் புகார் அளித்து, பரபரப்பை ஏற்படுத்தினார். இவ்விரு சம்பவங்களின் பரபரப்பே அடங்காத நிலையில், மூன்றாவது சம்பவமாக, பள்ளி ஆசிரியர், ஆசிரியையின் ஆபாச காட்சிப் படங்கள் இணையதளத்தில் வெளியாகி, போராட்டத்தில் மக்கள் குதிக்கும் அளவுக்கு, பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
"தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை' : பாலியல் புகாரில் சிக்கிய பள்ளி தலைமை ஆசிரியர்கள் விவகாரம் குறித்து, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் காளிமுத்துவிடம் கேட்ட போது, ""இத்தகைய செயலில் ஈடுபட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் இருவர் மீதும், துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து, விரைவில், "சஸ்பெண்ட்' செய்யப்படுவர்,'' என்றார்.திட்டமிட்ட சதியாம்!

புகாரில் சிக்கிய சோலையார் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் உதயனை தொடர்பு கொண்டு கேட்டபோது, ""எனக்கு வேண்டாதவர்கள், என் படத்தை கிராபிக் செய்து, இணையதளத்தில் படத்தை வெளியிட்டு அவமானப்படுத்தியுள்ளனர்; இது திட்டமிட்ட சதி; என்னை பழி வாங்கும் நோக்கத்தோடு, சிலர் திட்டமிட்டு, இந்த காரியத்தை செய்துள்ளனர்,'' என்றார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (93)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopal Samy - coimbatore ,இந்தியா
30-ஜன-201300:21:57 IST Report Abuse
Gopal Samy A Doctor made a mistake one life is loss. A Engineer made a mistake a family or a village will be loss. But A TEACHER made a mistake the whole generation will be loss. Dismiss them.
Rate this:
1 members
0 members
9 members
Share this comment
Cancel
Aravind Kumar - Chennai,இந்தியா
29-ஜன-201307:43:10 IST Report Abuse
Aravind Kumar அம்மையாரின் முகம் சரியாக தெரியவில்லையே.. face up /...
Rate this:
1 members
0 members
2 members
Share this comment
Cancel
Kumar - Chennai,இந்தியா
28-ஜன-201305:24:03 IST Report Abuse
Kumar இதில் எந்த அளவு உண்மை இருக்கும் என்று யாருமே யோசிக்கவில்லை என்றே தெரிகிறது. இந்த அளவுக்கு தைரியமாக செயல்பட முடியுமா? விவேகமில்லாமல் எவருமே செயல்பட மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். பெயரை கெடுக்கும் அல்லது பழிவாங்கும் செயலா என்னும் முறையிலும் சிந்திக்கவேண்டும்.
Rate this:
5 members
1 members
8 members
Share this comment
Cancel
poomalai - sundarapandiam,இந்தியா
26-ஜன-201320:59:00 IST Report Abuse
poomalai இது மாதிரியான செய்திகளை சற்று தம்பட்டம் அடிக்காதிருப்பது சற்று என்று கருதுகிறேன். திருட்டு,காம லிலைகள் பற்றி மீடீயாக்கள்தான் அதிகம் சமுதாயத்தை கெடுக்கின்றன. இதுபோன்ற செய்திகளை படிக்கும் ஆசிரியர்களே இச்செயல்களுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். மாதா,பிதா, குரு, தெய்வம் என்று போதிக்கும் ஆசான்களான மேற்கண்ட மூன்று நிலைகளிலும் உள்ள ஆசானான குருவே இத்தவறுகளுக்கு காரணமாக இருப்பது மிகக் கொடுமை. இவர்களிடம் பாடம் பயிலும் மாணவர்களின் நிலை ,,,,,,,,,,,,,,,, என்ன என்பதை அரசுதான் சற்று சிந்திக்க வேண்டும்
Rate this:
0 members
0 members
17 members
Share this comment
Cancel
Venkatesh R Venkatesh - Dammam,சவுதி அரேபியா
23-ஜன-201313:46:28 IST Report Abuse
Venkatesh R Venkatesh இங்க ஒருத்தர் சொன்ன மாதிரி தனிமனித சுதந்திரம் என்பதற்காக தெருவில் துணியில்லாமல் அலையமுடியுமா? எதைக்காட்டிலும் ஆசிரியர் தொழில் மிகப்புனிதமானது என்பதை மறந்து இப்படியா?
Rate this:
2 members
0 members
35 members
Share this comment
Cancel
Divaharan - Tirunelveli,இந்தியா
23-ஜன-201313:04:33 IST Report Abuse
Divaharan கழிப்பறையை சுத்தம் செய்யும் தலைமை ஆசிரியரிடம் இருவரையும் பணி செய்ய அனுப்ப வேண்டும்
Rate this:
1 members
1 members
39 members
Share this comment
Cancel
NARAYANAN . 1958. - TIRUCHY.,இந்தியா
23-ஜன-201311:02:18 IST Report Abuse
NARAYANAN . 1958. உணர்ச்சிக்கு எல்லை இல்லாமல் போய்விட்டது.இது கூட ஒரு பாலியல் பலாத்காரம் தான்.இதில் முதல் குற்றவாளி அந்த டீச்சர் தான் இரண்டாவது குற்றவாளி வாத்தியார். ஆனால் இதற்கு தண்டனை தர எந்த சட்டம் இருக்கிறது பலஹீனமான நம் ஜனநாயகம். ........
Rate this:
2 members
1 members
30 members
Share this comment
Cancel
Ravi - Doha,கத்தார்
23-ஜன-201310:11:37 IST Report Abuse
Ravi இப்படிப்பட்ட தலைமை ஆசிரியரும் தலைமை ஆசிரியையும் இப்படி இருந்தால மாணவர்களுக்கு X th முடிக்க சொல்ல மாட்டார்கள். +X தான் முடிக்க வைப்பார்கள். இளம் மனதில் சீக்கிரம் பதிந்து விடும் இந்த சம்பவம். கலாசாரம் சீர்கெடும்.
Rate this:
1 members
0 members
29 members
Share this comment
Cancel
தமிழ் குடிமகன் - போயஸ்கார்டன் ,இத்தாலி
23-ஜன-201309:46:21 IST Report Abuse
தமிழ் குடிமகன் மீடியாவின் வளர்ச்சியே காரணம் .
Rate this:
5 members
1 members
21 members
Share this comment
Cancel
Natarajan Iyer - chennai,இந்தியா
23-ஜன-201306:51:35 IST Report Abuse
Natarajan Iyer சதியோ அல்லது உண்மையோ இரண்டு பேர் முகத்தையும் வெளியிடு.......... அல்லது இரண்டு பேர் முகத்தையும் மறைத்துவிடு.......... ஆணின் முகத்தை மட்டும் வெளியிடுவது தவறு.
Rate this:
1 members
0 members
48 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்