தி.மு.க., தலைவர் கருணாநிதியின், முதல் கொள்ளு பேத்தி அமுதவல்லி திருமணம், சென்னையில் இன்று நடக்கிறது. அதில், "குடும்பத்தினர் அனைவரும் பங்கேற்று, குடும்ப ஒற்றுமையை, கட்சியினருக்கு பறைசாற்ற வேண்டும். திருமணத்தை புறக்கணித்தால், அவர்களிடம் பேசுவதை நிறுத்திக் கொள்வேன்' என, கருணாநிதி கட்டளையிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, மத்திய அமைச்சர் அழகிரி, நேற்று காலை, கோபாலபுரம் வீட்டில், கருணாநிதியை சந்தித்து பேசினார். இருவரின் சந்திப்பால், இரு வாரங்களாக, அவர்களின் மத்தியில் நிலவிய, பனிப்போர் விலகியது.இம்மாதம், 3ம் தேதி நடந்த ஒரு நிகழ்ச்சியில், "தமிழ் சமுதாய மேன்மைக்காக, எனக்கு பின் ஸ்டாலின் பாடுபடுவார்' என, கருணாநிதி பேசினார். அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், "தி.மு.க., மடம் அல்ல' என, மத்திய அமைச்சர் அழகிரி பதிலளித்தார்.
இதையடுத்து, தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில், "தலைமைக்கு எதிராக யாராவது பேசினால், நடவடிக்கை எடுக்கப்படும்' என, கருணாநிதி எச்சரிக்கை விடுத்தார்.அ@தாடு, "தலைவர் பதவிக்கு ஸ்டாலின் போட்டியிட்டால், நான் முன்மொழிவேன்' எனக் கூறி, தனக்கு பின், அடுத்த தலைவர் ஸ்டாலின் என்பதை, திட்டவட்டமாக கருணாநிதி தெரிவித்தார். கருணாநிதியின்கோபத்தை தணிக்கும் வகையில், அவரை சந்தித்து பேச அழகிரி விரும்பினார். ஆனால், அழகிரியை, கருணாநிதி தவிர்த்தார். அவர்கள் இருவரிடமும், உறவினர்கள் அமிர்தம், செல்வம் ஆகியோர் சமரச பேச்சு நடத்தினர். இருப்பினும், இரு வாரங்களாக அவர்கள் நேரில் சந்தித்துக் கொள்ளவில்லை.
இம்மாதம், 17ம் தேதி, கருணாநிதியின் மூத்த மகன் முத்துவின் பேத்தி, அமுதவல்லிக்கும், போலீஸ் டி.ஐ.ஜி., சண்முக ராஜேஸ்வரன் மகன், சித்தார்த்துக்கும், சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள முத்துவின் வீட்டில் நிச்சயதார்த்தம் நடந்தது.அதில், கருணாநிதி, ராஜாத்தி, ஸ்டாலின், துர்கா பங்@கற்றனர். தயாளு, அழகிரி, அவரது மனைவி காந்தி ஆகியோர் பங்கேற்கவில்லை. கருணாநிதியை பொறுத்தவரையில், அவரது மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகளின் திருமணம் மற்றும் தனது சொந்தங்களின் இல்ல திருமணங்களையும் நடத்தி வைத்துள்ளார்.
தன் முதல் கொள்ளு பேத்தியின் திருமணத்தை, கருணாநிதி இன்று காலை நடத்தி வைக்க இருப்பதால், கருணாநிதி மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார். இந்த திருமணத்தை, தன் வாழ்நாளில் முக்கியமான நாளாக அவர் கருதுகிறார். கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவதியின் மகன் முத்து. பத்மாவதி உயிரோடு இல்லை என்பதால், அவரது இடத்தில், தயாளு, ராஜாத்தியும் இருந்து, மணமக்களை வாழ்த்த வேண்டும் என, கருணாநிதி கட்டளையிட்டுள்ளார்.
அழகிரியின் இரண்டாவது மகள்:
தனியாக இரண்டு மணி நேரம் :
"கருணாநிதி - அழகிரி இடை@ய இதுபோன்ற உரசல் நாடகம் வழக்கமாக நடப்பது தான். இந்த முறை, சற்று விரைவாக@வ நாடகம் முடிவுக்கு வந்து விட்டது' என, பெயர் வெளியிட விரும்பாத, தி.மு.க., முன்னணி பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.-நமது நிருபர்-
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
தலைமை வாரிசு அரசியல் பண்ணும் போது, அக்கட்சியில் இருக்கும் மற்ற தலைவர்களும் வாரிசு ஆட்சி தான் செய்வார்கள், அக்கட்சி தொண்டர்களும் விதி விலக்கல்ல, அவர்களும் எல்லா தலைமுறைகளிலும் தொண்டர்களாகவே இருப்பார்கள். எனவே தல முதல் கால் வரை வாரிசு அரசியல் தான். தொண்டன் தொண்டன் தான், தலைவர்கள் தலைவர்கள் தான் எப்போதும்........ இது முடிவல்ல ..... ஆரம்பம்.... இது ஒரு மெகா சீரியல்...தலைவர் இருக்கும் வரை தொடர்ந்துகொண்டே இருக்கும்... இளிச்சவாயர்கள் தொண்டர்கள் பார்த்து ரசித்துக்கொண்டே இருக்க வேண்டியது தான்...எல்லாம் விதி
அழகிரி எத்தனை மத்திய அமைச்சர் கூட்டத்தில் கலந்து கொண்டு உள்ளார் .ஆங்கிலம் அறியா தமிழ் மகன் அவர். எத்தனை பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்றுள்ளார் வெறும் பூஜ்யத்துக்கு ராஜ்ஜியம் கொடுக்கப்பட்டுள்ளது .........நாங்கள் தமிழ் மண்ணுக்கு உரமாவோம் என்று வசனம் மட்டும் பேசத்தெரியும் ஆனால் உறம் மற்றும் ரசாயன துறையை கவனிக்க முடியவில்லை ........முத்தழகன்
பத்திரிகைகள் இதை ஊதிப் பெரிதுபடுத்துகின்றன. அழகிரியைப் பொருத்தவரை மதுரை மாவட்ட அளவில்தான் செயல்பட முடியும். அதுவும், கடந்த சட்டசபைத் தேர்தலில் அவர் பொறுப்பேற்றிருந்த மதுரை மண்டலத்திலேயே தி.மு.க பெரிய சரிவை சந்தித்தது. ஒரு குடும்பத்தில் பிரச்சினை என்பது எப்போதுமே இருக்கும். இது அரசியல் குடும்பம் என்பதால் உங்களுக்கு தினசரி நடவடிக்கை எல்லாமே செய்தி தான்.... கருணாநிதி குடும்பத்திற்குள் ஏதாவது பிரிவினை, சண்டை நடக்காதா?அதில் கொஞ்சம் குளிர் காயலாமா?என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தவர்களுக்கு பேரிடியான செய்திதான் இது....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.