சென்னை: நடிகர் கமல் நடித்துள்ள, "விஸ்வரூபம்' படம் வெளியிடுவதை, இம்மாதம், 28ம் தேதி வரை, சென்னை ஐகோர்ட் தள்ளிவைத்துள்ளது. இம்மாதம், 26ம் தேதி, படத்தை பார்த்து உத்தரவு பிறப்பிப்பதாக, நீதிபதி தெரிவித்துள்ளார். அரசின் முடிவுக்கு தடை விதிக்காததால், இன்று, விஸ்வரூபம் படம் வெளியாக வாய்ப்பில்லை.
கமல் நடித்துள்ள, விஸ்வரூபம் படம், சர்ச்சையை கிளப்பியுள்ளது. சிறுபான்மையினரின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக, படத்தில் காட்சிகள் உள்ளன என, முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. போலீஸ் கமிஷனரிடமும், அரசிடமும், முறையிட்டன.
இதையடுத்து, 15 நாட்களுக்கு, தியேட்டர்களில் திரையிட தடை விதித்து, சென்னை போலீஸ் கமிஷனர் மற்றும் பிற மாவட்டங்களில், கலெக்டர்களும், உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.
படத்தை வெளியிடுவதில், குறுக்கீடு செய்யக் கூடாது என்றும், இதற்கு தடை விதிக்கக் கோரியும், ஐகோர்ட்டில், ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில், மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை, நீதிபதி வெங்கட்ராமன் விசாரித்தார். ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில், மூத்த வழக்கறிஞர், பி.எஸ்.ராமன் வாதாடியதாவது:
இந்தப் படத்திற்கு, "சென்சார் போர்டு' அனுமதி வழங்கியுள்ளது. மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகி விட்டது. இந்தியாவில் நாளை (இன்று) வெளியிடப்படுகிறது. "டாவின்சி கோடு' என்கிற திரைப்படத்தை வெளியிட தடை விதித்தபோது, அதை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. சட்டம் - ஒழுங்கைப் பொறுத்தவரை, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஒவ்வொரு மாவட்ட கலெக்டரும், படத்தைத் திரையிடக் கூடாது என, தியேட்டர்களுக்கு உத்தரவிட்டு இருப்பதாகத் தெரிகிறது. ஒரே மாதிரியான உத்தரவுகளை இவர்கள் பிறப்பித்துள்ளனர். இப்படம், முஸ்லிம் அமைப்பினருக்குத் திரையிட்டுக் காட்டப்பட்டது.ஏற்கனவே, தமிழகம், ஆந்திராவில், 500 தியேட்டர்கள், "புக்' செய்யப்பட்டுள்ளன. டிக்கெட்டுக்கள் விற்பனை நடந்துள்ளது. இந்நிலையில், படத்தை திரையிடக் கூடாது என்றால், குழப்பம் தான் ஏற்படும். எனவே, அரசின் முடிவுக்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் வாதாடினார்.
அரசு தரப்பில், அட்வகேட் - ஜெனரல் நவநீதகிருஷ்ணன் வாதாடியதாவது:இது ஒரு உணர்வு பூர்வமான பிரச்னை. மக்களின் பாதுகாப்பு முக்கியம். கமிஷனர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மனுத் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. அந்தந்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள, பதற்றமான சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, மாவட்டக் கலெக்டர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவுகளை எதிர்த்து வழக்கு தொடரப்படவில்லை. 15 நாட்களுக்குத் தான் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உளவுத்துறை மூலம் கிடைத்த கருத்தின் அடிப்படையில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. "டேம் 999' படத்திற்கு தமிழக அரசு விதித்த தடை செல்லும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.இவ்வாறு, அவர் வாதாடினார்.டிக்கெட் வாங்கியவர்கள் சார்பில், வழக்கறிஞர் ஸ்டாலின், முஸ்லிம் அமைப்பு சார்பில், வழக்கறிஞர் சங்கரசுப்பு, கமல் ரசிகரான வழக்கறிஞர் ராஜசேகர் ஆகியோரும் வாதாடினர்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட, நீதிபதி வெங்கட்ராமன், மனு மீதான விசாரணையை, இம்மாதம், 28ம் தேதிக்கு தள்ளிவைத்தார். அதுவரை, படம் வெளியிடுவதை தள்ளி வைக்குமாறும், இம்மாதம், 26ம் தேதி படத்தை பார்த்த பின், உத்தரவு பிறப்பிப்பதாகவும், நீதிபதி தெரிவித்தார். அரசின் முடிவுக்கு தடை ஏதும் விதிக்காததால், விஸ்வரூபம் படம், இன்று வெளியாக வாய்ப்பில்லை.
புதுச்சேரியிலும் தடை
தமிழக அரசின் தடை உத்தரவு, புதுச்சேரி மாநிலத்தில் பொருந்தாது என்பதால், வரும், 25ம் தேதி திட்டமிட்டபடி விஸ்வரூபம் படம் வெளியாகும் என, கமல் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர்.இந்நிலையில், புதுச்சேரி அனைத்து இஸ்லாமிய ஐக்கிய கூட்டமைப்பு சார்பில், கலெக்டர் தீபக்குமாரிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை கலெக்டர் தீபக்குமார், முதல்வர் ரங்கசாமியின் பார்வைக்கு அனுப்பி வைத்தார். மனுவை பரிசீலித்த புதுச்சேரி அரசு, விஸ்வரூபம் படத்திற்கு தடை விதிக்க பரிந்துரைத்தது.இதையடுத்து கலெக்டர் தீபக்குமார், விஸ்வரூபம் திரைப்படத்தை இரண்டு வாரங்களுக்கு திரையிடக் கூடாது என, தடை விதித்து, நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கமல் வேதனை
""விஸ்வரூபம் பட பிரச்னையில் சிறு குழுக்கள், அரசியல் வாழ்வும், லாபமும் பெற நினைக்கின்றன. விஸ்வரூபம் படத்தை பார்க்கும் நடுநிலையான தேசப்பற்றுள்ள, எந்த ஒரு முஸ்லிமும், பெருமையாகத் தான் கருதுவர்'' என, கமல் தெரிவித்துள்ளார்.படத்தின் தொழில் நுட்பக் கலைஞர்களுக்காக அமெரிக்காவில், விஸ்வரூபம் படத்தை காட்ட சென்றுள்ள கமல்ஹாசன், அமெரிக்காவிலிருந்து வெளியிட்டுள்ள அறிக்கை:விஸ்வரூபம் படத்திற்கு பலர் ஆதரவு தெரிவித்த நிலையில், திடீரென இந்தப்படம் இஸ்லாமிய சகோதரர்களுக்கு எதிரானதாக உருவாக்கப்பட்டுள்ளதாக கருத்து வெளியிடப்பட்டுள்ளது. இது எனக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. இப்படம், எந்த வகையில் முஸ்லிம்களுக்கு எதிரானது என, எனக்கு தெரியவில்லை.ஒரு நடிகன் என்ற முறையில், என் கடமைக்கும், பல படி மேலாக சென்று, மனிதாபிமான முறையில், முஸ்லிம் சமுதாயத்திற்காக குரல் கொடுத்துள்ளேன். இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்கான இந்தியா அமைப்பில், நான் உறுப்பினராக உள்ளேன்.என் படம் மூலம், ஒரு மதத்தை அவமரியாதை செய்து விட்டதாக, என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் என்னை காயப்படுத்தி உள்ளன. அதோடு என் உணர்வுகள் உண்மையிலேயே அவமதிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.என்னை ஈவு இரக்கம் இல்லாமல், ஒரு கருவி போல பயன்படுத்தி, சிறு குழுக்கள் அரசியல் வாழ்வும், லாபமும் பெற நினைக்கின்றன. விஸ்வரூபம் படத்தை பார்க்கும் நடுநிலையான, தேசப்பற்றுள்ள எந்த ஒரு முஸ்லிமும் நிச்சயம், படத்தை பெருமையாகத்தான் கருதுவர். அந்த நோக்கத்துக்காகத் தான், இந்தப் படமும் வடிவமைக்கப்பட்டுள்ளது.படத்திற்கு எதிரான தடையை சட்டப்படி சந்திப்பேன். இதுபோன்ற கலாச்சார தீவிரவாதம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இணையதளம் வாயிலாக எனக்கு ஆதரவு தெரிவித்துள்ள, அனைவருக்கும் நன்றி.இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மறு பரீசிலனை செய்ய மத்திய அரசு ஆலோசனை
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர், மணீஷ் திவாரி கூறியதாவது:
ஏற்கனவே இது தொடர்பான ஒரு வழக்கில்," திரைப்பட தணிக்கை குழுவின் முடிவு தான், அனைத்தையும் கட்டுப்படுத்தும்' என, சுப்ரீம் கோர்ட், உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, தமிழக அரசு, இது தொடர்பாக, முடிவு எடுப்பதற்கு முன், சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை, கருத்தில் கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில், தமிழக அரசு, தன் முடிவை, மறு பரிசீலனை செய்ய வேண்டும்.இவ்வாறு, மணீஷ் திவாரி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
Oh, what a shame
No Men in Kollywood
When the Tamil Nadu government was raping Kamal Haasan and his film Vishwaroopam on specious, flimsy grounds, the Tamil film industry (Kollywood) proved it’s woefully short of men
I can’t recollect seeing a single leading star coming to Kamal Haasan’s defense.
What a spineless lot
Their courage is restricted just to the screen.
Sleeping or preting to be asleep?
Except for Prakash Raj’s strong support, I have yet to see any other Tamil star come to Kamal Haasan’s defense.
If history teaches us anything, it’s that when you’re silent in the face of injustice to others, tomorrow you will meet the same fate
Have you ever given a comment common for a human????
I normally support Muslims in lot of controversies. But here it is very dangerous to see the network. See how the network acts. banned in TN. Immediately getting banned in other places like Malaysia where it was already released. Andhra, karnataka. Finally Mallus whom i normally oppose had the backbone as well as democratic thoughts. but this network is dangerous is what i feel. TN muslims were always the integral part of TN. But these stupid politicians are trying to get the muslims out of the mainstream. Please muslim brothers, realise it and act now. Else you will suffer in the future. These javarullahs of the world are fenetics.
இதே பெரியார் பேரனாகிய கமலஹாசன் என்ற நடிகன் ( ஒரு வியாபாரி ) பல மாதங்களுக்கு முன்பு ஹிந்துக்கள் தெய்வமாக வழிபடும் மகாலட்சுமி பற்றி அவதூறாக ஒரு பாட்டை எழுதி கடும் கண்டனத்திற்கு உள்ளானார். கண்டனங்களை சட்டை செய்யாமல், தன்னை எப்போதும் ஒரு கடவுள் மறுப்பாளனாக காட்டி கொள்வார். எல்லோரும் ஒரே நிலைபாட்டை எப்போதும் எடுக்க மாட்டார்கள் என்பதற்கு நடைபெறும் நிகழ்வுகளே ஒரு உதாரணம்.
நான் ஒரு நல்ல இந்துவாக இருக்கவேண்டும் என விரும்புகிறவன். கமல் தீவிரவாதிகளுக்கு எப்போதும் எதிரானவர். அது இந்து தீவிரவாதியாக இருந்தாலும் சரி. அவரால் நிச்சயமாக அப்பாவிகளை புண்படுத்தும்படி பிலிம் எடுக்கமுடியாது. மலேசிய nafeez சொல்லியபடி படம் முஸ்லிம் சகோதரர்களை பெருமைப்படும்படிதான் எடுத்திருப்பார். எதிர்பவர்கவேண்டுமானால் முஸ்லிம்கள் சிறந்த தேசபக்தர்களாக சித்தரித்து படம் எடுக்கவேண்டியதுதானே. அதுதான் முஸ்லிம்மதத்திற்கு பெருமை சேர்க்கும். இந்திய முஸ்லிம்களுக்கும் பெருமைசேர்க்கும் ,ஜெய் ஹிந்த்.வந்தேமாதரம் ,ஜெய் அல்லா .
இவர்களுக்கு யாருடனும் ஒத்து போகும் குணம் குறைந்து வருவது வருததக்கது. இப்போது கூட சூடான் எனும் நாடு இரண்டாக பிரிந்தது. யார் உண்மையான முஸ்லிம் என்ற சண்டையில் பாகிஸ்தானில் அவர்களுக்குள்ளாகவே குண்டு வைத்து கொள்கிறார்கள் . இந்து மதத்தில் சாதி கொடுமைகள் என்றால் அவர்களுக்கு சகிப்புத்தன்மை எனபது பெரும் பிரச்சினை. கருத்து சுதந்திரம் வேண்டும் என்பதை புரிந்து கொண்ட காரணத்தினால் தான் மேலை நாடுகள் மதத்தையும் அரசாங்கத்தையும் பிரித்து வைத்தன,முன்னேறுகின்றன.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.