இருபது ஆண்டுகளுக்குப் பின் ஒன்றிணைந்த மாணவர்கள்| Dinamalar

இருபது ஆண்டுகளுக்குப் பின் ஒன்றிணைந்த மாணவர்கள்

Added : ஆக 17, 2010
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
இருபது ஆண்டுகளுக்குப் பின் ஒன்றிணைந்த மாணவர்கள்

மதுரை: மதுரை நாகமலை புதுக்கோட்டை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் 1987- 90ம் ஆண்டுகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் படித்த மாணவர்கள் 20 ஆண்டுகளுக்குப் பின் ஒன்று சேர்ந்தனர். இந்த மாணவர்களில் பலர் பல்வேறு நகரங்களில் குடும்பத்துடன் வசிக்கின்றனர். குடும்பத்தினருடன் ஒன்றிணைந்த இம்மாணவர்கள் தங்கள் கல்லூரி கனவுகளை மீண்டும் கண்களில் கொண்டு வந்தனர். கால நேரம் போவதே தெரியாமல், கலந்துரையாடினர். இவர்களில் பலர் சென்ட்ரல் எக்சைஸ், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உட்பட பல நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். பலர் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒருமாணவர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமெரிக்காவில் இருந்து மதுரை வந்திருந்தார். மீண்டும் ஒன்றிணைந்த அவர்கள் குடும்பமாக போட்டோ எடுத்துக் கொண்டு விடைபெற்றனர்.
பழைய மாணவர்கள் சந்திப்பின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட தட்சிணாமூர்த்தி கூறுகையில், ""இனி ஆண்டுதோறும் குடும்பத்துடன் கலந்துரையாட உள்ளோம். சில மாணவர்கள் எங்கு உள்ளனர் என தெரியாததால் அவர்களை அழைக்க முடியவில்லை. இந்த பேட்ஜில் படித்த மாணவர்கள் பங்கேற்க விரும்பினால் 99651 10108 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்'' என்றார். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் கண்ணன், சந்திரமோகன் செய்திருந்தனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X