முடிந்தது ஐம்பது; திரும்பியது இளமை| Dinamalar

முடிந்தது ஐம்பது; திரும்பியது இளமை

Added : ஆக 17, 2010
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
முடிந்தது ஐம்பது; திரும்பியது இளமை

மதுரை: ஒன்றாக உண்டு... ஒன்றாக விளையாடி... ஒன்றாக மகிழ்ந்து... ஒன்றாக அழுது... இப்படி கல்லூரி காலங்களில் ஒன்றாக அனுபவித்த பசுமை நிறைந்த நினைவுகளை ஐம்பது ஆண்டுகள் கழித்தும் "ரீப்ளே' பண்ண முடியுமா? "முடியும்' என காட்டி உள்ளனர் டாக்டர்கள். இவர்கள், 1960ல் மதுரை மருத்துவக்கல்லூரிக்குள் அடியெடுத்து வைத்தவர்கள். அப்போது அவர்களின் எண்ணிக்கை 150. டாக்டர் படிப்பை இவர்கள் முடித்து ஐம்பது ஆண்டுகள் ஆகி விட்டன. இடைப்பட்ட காலத்தில் ஒவ்வொருவரும் ஒரு திசையில். வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டவர்கள் சிலர். மற்றவர்களைப் போல், காலவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இவர்கள், தொழிலில் "பிசி'யாகி விட்டதால் இடையில் சந்தித்துக்கொள்ள முடியவில்லை. இருப்பினும் 1981 மற்றும் 1989ம் ஆண்டுகளில் சிலர் சந்தித்துக்கொண்டனர். ஒட்டுமொத்தமாக சந்திப்பது இவர்களுக்கு "பிரம்ம பிரயத்தனமாக' இருந்தது.
இருப்பினும் அந்த "பேட்சில்' இடம் பிடித்திருந்த மதுரை டாக்டர்கள் அத்வைதம், நாராயணசாமி போன்றோர் பெரும் முயற்சி செய்து, மதுரை பாண்டியன் ஓட்டலில் சந்தித்தனர். வெளிநாடு உள்பட பல்வேறு இடங்களில் இருந்து 55 டாக்டர்கள், பேரன், பேத்தியுடன் கலந்து கொண்டு, குதூகலித்து மகிழ்ந்தனர். "டேய் மாப்ளே...', "டேய் மச்சான்...', "என்னடா, உனக்கு வயசாயிருச்சு...', "நீ மட்டும் என்னடா, அப்படியே இருக்கே...', "பிள்ளைக எத்தனை, என்ன செய்யுறாங்க...' - இப்படிப்பட்ட குசல விசாரிப்புகள், அந்த இடத்தையே "கலகலக்க' வைத்தன.
அது மட்டுமா, குடும்பத்தினரின் காதுகளுக்கு கேட்காமல், "தங்களுக்குள் கிசுகிசுத்துகொண்ட', பழைய சமாச்சாரங்களும் உண்டு.
நிகழ்ச்சி குறித்து கருத்து தெரிவித்த டாக்டர்கள், "சந்திப்பு... ரொம்ப தித்திப்பு' என்றனர் கோரசாக. டாக்டர் அத்வைதம் கூறும்போது, ""எங்களுக்கு 65 வயதுக்கு மேல் ஆகி விட்டாலும், மீண்டும் கல்லூரி காலத்திற்கே சென்று விட்டோம். இப்போதும் கூட வயதாகி விட்டதாக நாங்கள் நினைக்கவில்லை. இதை விட ஆச்சரியம், எங்களுக்கு பேராசிரியர்களாக இருந்த சிலரையும் கவுரவித்தோம். எங்களில் பெரும்பாலானோர் இன்னமும் வேலை செய்துகொண்டு இருக்கிறோம்.
ஓய்வெடுப்பதே ஒரு வியாதி தான். எங்களில் சிலர் இன்னமும் கூட கிராமப்புறங்களில் சேவை செய்கின்றனர். இந்தக் கால மருத்துவ கல்லூரி மாணவர்கள் மத்தியில் அர்ப்பணிப்பு இல்லை. ஆசிரியர் - மாணவர் இடையே இடைவெளி அதிகரிக்கிறது. இதற்கு, கலாசாரம், பண்பாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக இருக்கலாம்'' என்றார்.
சுறுசுறுப்பின் உச்சத்தில் இருந்த அவர்களை கண்டால், மற்றவர்களுக்கும் உற்சாகம் தொற்றிக்கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X