கடல் கடந்து வந்து 20 ஆண்டு நிறைவைக் கொண்டாடிய மாணவர்கள் | Dinamalar

கடல் கடந்து வந்து 20 ஆண்டு நிறைவைக் கொண்டாடிய மாணவர்கள்

Added : ஆக 17, 2010 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

20 ஆண்டுகள நிறைவை அண்ணாமலை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த  ரசாயனப்  பொறியாளர்  மாணவர்கள், குடும்பத்தோடு மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள், அண்ணாமலை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த  ரசாயனப் பொறியியல் பிரிவைச் சேர்ந்த 1990 -ல் பட்டம் பெற்ற மாணவர்கள் தாங்கள் குடும்பத்தோடு குழுமி மகாபலிபுரத்தில் சந்தித்தனர். பல மாணவர்கள் இன்று அமரிக்கா, துபாய், குவைத், சிங்கபூர், மலேசியா என்று பல்வேறு நாடுகளிலிருந்து தங்கள் நண்பர்களை சந்திக்க கடல் கடந்து தங்கள் பிள்ளைகளோடு வந்திருந்தனர்.
ஒவ்வொருவராக அங்கு வர வர, அங்கே முன்னே குழுமியிருந்த நண்பர்களை ஆற தழுவி வரவேற்றனர். ஒவ்வொருவரும் அவர்தம் நண்பர்களை பெயர் சொல்லாமல் பட்ட பெயரிலே அழைத்து மகிழ்ந்தனர். அதை கண்ட அவர்தம் பிள்ளைகள் ஆச்சர்யம் கொண்டு சிரித்தனர். ஐ.ஜி., மிக்கி, தாடி, மாங்க், சுல்தான், அண்ணாச்சி, குள்ள பாஸ், முறுக்ஸ், போல்ட் என்று வெவ்வேறு பட்ட பெயர்கள் காற்றில் ஒலித்தன.
பிறகு தங்கள் அடைந்த முன்னேற்றங்கள், மற்றும் வேலை செய்யும் இணைகளை பற்றி விசாரித்து மகிழ்ந்தனர். களிப்பின் ஒரு பகுதியாக தங்களின் செல்வங்களின் தனித் திறமையை வெளிக்காட்டினர். பிறகு ஒவ்வொரு குழந்தைக்கும் பரிசுகள் வழங்கி மகிழ்ச்சி படுத்தினர்.
மாமல்லபுரத்தில் கூடிய இவர்கள், அடுத்த நாள் காலை 2 பஸ்ஸில் சிதம்பரம் சென்றனர். அங்கு அவர்தம் சக முன்னாள் மாணவியும் இந்நாள் பேராசிரியையும் ஆன முல்லை தங்களின் பழைய பேராசிரியர்களை அழைத்து, மற்றும் இன்றைய தலைவர்கள் பழனியப்பன் மற்றும்  விருத்தகிரி தலைமையில் பெருவிழா நடத்தினார்.
அதில் ஒவ்வொரு முன்னாள் மாணவரும் தாங்கள் அடைந்த வளர்ச்சி மற்றும் தாங்களின் இன்றைய பதவியினை பகிர்ந்தனர். மற்றும், மாணவர்கள் பேசும் பொது, தாங்கள் செய்த குறும்புகளை பொறுத்துக்கொண்டு தங்களை வழி நடத்திய பேராசிரியர்களுக்கு நன்றி நவின்றனர். பின்னர் முன்னாள் மாணவகளின் சார்பாக 25 ,000 மதிப்புள்ள புத்தகங்களையும் மற்றும் இ- புத்தகங்கள் கொண்ட டிவிடி களையும் அவர்கள்தம் நூலகத்திற்கு நன்கொடையாக சமர்பித்தனர்.
முன்னாள் பேராசிரியைகள் பேசும்போது தங்களது மாணவர்களின் வளர்ச்சியைக் கண்டு தாயைப்போல் மகிழ்ந்ததாகச் சொல்லி வாழ்த்தினர். முன்னாள் பேராசிரியைகள் முன்னாள் மாணவர்களின் நட்பின் ஆழத்தை புகழ்ந்து பேசும்போது, அன்று  எதேச்சையாக நண்பர்கள் தினம் அமைந்தது என்றும், நல்ல மனதோடு செய்யும் எந்த காரியத்திற்கும் இறைவன் அருள் உண்டு என்பதிற்கு இந்த எதிர்பாரா 'நண்பர்கள் தினம்' ஒரு சான்று என்றனர். பிறகு 1990 -யை சேர்ந்த மாணர்வர்கள் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடக்கும் ஒவ்வொரு செமினாருக்கும் மிகுந்த உதவியாக இருந்ததை சுட்டி காட்டி வாழ்த்தினார்கள். பின்னர் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசினை கொடுத்து மகிழ்ந்தனர்.
விழா முடிந்ததை ஒட்டி, தாங்கள் பயன்படுத்திய பஸ், தங்கி இருந்த விடுதி,  படித்த துறை,   டீ-கடை, லைப்ரரி, பார்க் என தங்கள் குடும்பத்திற்கு காண்பித்து பழைய நினைவுகளில் பயணித்தனர். பின் அனைவரும் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்று தரிசித்து சென்னை திரும்பினர்.




Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஷங்கர் - London,யுனைடெட் கிங்டம்
01-அக்-201011:57:14 IST Report Abuse
ஷங்கர் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் - நாங்கள் செய்ய நினைத்து செய்யாததை நீங்கள் செய்து காண்பித்து இருக்கிறீர்கள்.
Rate this:
Share this comment
Cancel
Prabhakaran - சென்னை,இந்தியா
08-செப்-201014:13:57 IST Report Abuse
Prabhakaran நான் இந்த செய்தியை படித்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். ஆனந்தகுமார் சொல்வது போல இருவத்தி ஐந்து ஆண்டு நிறைவு விழாவை சிறப்பாக கொண்டாட உள்ளோம். இச்செய்தி எங்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது. நன்றிகள் பலப்பல.
Rate this:
Share this comment
Cancel
த.ஆனந்த குமார் - Kualalumpur,மலேஷியா
28-ஆக-201022:26:40 IST Report Abuse
த.ஆனந்த குமார் இந்த செய்தி படித்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் நாங்களும் 25 வருடங்கள் கழித்து வரும் decemeber மாதம் மிக பிருமாண்டமான அளவில் (நண்பர்கள் எண்ணிக்கை ) சந்தித்து மகிழ இருக்கிறோம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X