Actor Khushbu's house vandalised after interview on Stalin | திருச்சியில் நடிகை குஷ்பு மீது செருப்பு வீச்சு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

திருச்சியில் நடிகை குஷ்பு மீது செருப்பு வீச்சு

Added : பிப் 08, 2013 | கருத்துகள் (192)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

திருச்சி: தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினுக்கு எதிராக பேட்டி கொடுத்ததாக, நடிகை குஷ்பு மீது, திருச்சியில், தி.மு.க.,வினர் செருப்பு வீசி தாக்குதல் நடத்தினர். திருச்சி, தேசியக்கல்லூரி மைதானத்தில், தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., சிவா மகள் திருமணம், தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில் நேற்று காலை நடந்தது. விழாவில், நடிகை குஷ்பு பங்கேற்று பேசினார்.
திருச்சி சென்ட்ரல் பஸ்ஸ்டாண்ட் அருகேயுள்ள, "பெமினா' ஓட்டலுக்கு சென்று ஓய்வெடுத்து விட்டு, விமானத்தில் சென்னைக்கு செல்வதற்காக, ஓட்டல் அறையிலிருந்து மதியம், 1:45 மணியளவில் வெளியே வந்தார்.ஓட்டலுக்கு வெளியே வந்து, காரில் ஏறச் சென்ற குஷ்புவை, தி.மு.க., கரைவேட்டி கட்டிய, 50 பேர் கொண்ட கும்பல் வழி மறித்தது. "குஷ்பு ஒழிக' என்று கோஷமிட்டனர். அவர்களிடம், "எதற்காக, கோஷம் போடுகிறீர்கள்' என, குஷ்பு கேட்டார்."தமிழகம் முழுவதும் உள்ள தொண்டர்கள், தி.மு.க., தலைவராக தளபதியை (ஸ்டாலின்) ஏற்றுக் கொண்டுவிட்டனர். நீ யாரடி, அவருக்கு எதிராக பேட்டி கொடுக்க' என்று கேட்டு, சரமாரியாக ஆபாச வார்த்தைகளால் திட்டினர்.

திடீரென்று அவர்கள், குஷ்பு மீது செருப்புகள், தண்ணீர் பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தினர். நிலை குலைந்து போன குஷ்புவை, ஓட்டல் மேலாளர் அமர்நாத் காப்பாற்றி, மீண்டும் ஓட்டலுக்குள் அழைத்துச் சென்றார்.போலீசார் வரும் முன், ஓட்டலில் திரண்டிருந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. அதன் பின், 2:15 மணியளவில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன், குஷ்பு விமான நிலையத்துக்கு சென்றார். மதியம், 2.30 மணிக்கு, சென்னை செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில், சென்னைக்கு கிளம்பிச் சென்றார்.

குஷ்பு மீது தாக்குதல் ஏன்?

வார இதழ் ஒன்றில், "தளபதி தான் அடுத்த தலைவராக வரவேண்டும் என்ற அவசியம் இல்லை' என, ஸ்டாலினுக்கு எதிராக, நடிகை குஷ்பு பேட்டியளித்ததை போல, போஸ்டர் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. புத்தகத்தை வாங்கி முழுமையாக படிக்காமல், வெறும் போஸ்டர் செய்தியை மட்டும் பார்த்து விட்டு, ஆத்திரமடைந்த சில உடன்பிறப்புகள், குஷ்பு மீது தாக்குதல் நடத்தினர் என்று கூறப்படுகிறது.
செருப்பு வீச்சுக்கு பின் குஷ்பு விளக்கம் : ""என் வழி, தலைவர் கருணாநிதி வழி; நான் அளித்த பேட்டியை தொண்டர்கள் தவறுதலாக புரிந்து கொண்டனர்,'' என்று செருப்பு வீசி தாக்குதல் நடத்தப்பட்ட பின், நடிகை குஷ்பு நிருபர்களிடம் கூறினார். தாக்குதல் சம்பவங்களுக்குப் பின், ஸ்டாலினை சந்திக்க குஷ்பு முயன்றார். ஆனால், ஸ்டாலின் அவரை சந்திக்க மறுத்துவிட்டதாக தெரிகிறது.

வீடு மீது கல்வீச்சு :

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள, குஷ்புவின் வீட்டை, 20க்கும் மேற்பட்டோர் கல்வீசி தாக்கினர். பேட்டி தொடர்பாக, திருச்சியில் குஷ்பு மீது, செருப்பு வீச்சு சம்பவம் நடந்த அதே நேரத்தில், சென்னை, பட்டினப்பாக்கம், லீத் கேஸ்டல் வடக்கு தெருவில், குஷ்பு வீட்டு முன், 10 பெண்கள் உட்பட, 20 க்கும் மேற்பட்டோர் கூடினர். அவர்கள் குஷ்புவுக்கு எதிராக கோஷம் எழுப்பியதுடன், வீட்டின் முகப்பு விளக்கு, கார் கண்ணாடி, ஆகியவற்றை கல்வீசி தாக்கிவிட்டு, அங்கிருந்து மாயமாகினர். தாக்குதல் நடத்தியவர்கள், ஸ்டாலின் ஆதரவாளர்கள் என கூறப்படுகிறது.

தாக்குதல் நடந்தபோது, குஷ்பு, அவரது கணவர், சினிமா டைரக்டர், சுந்தர்.சி ஆகியோர் வீட்டில் இல்லை. குஷ்புவின் மகள்கள் அவந்திகா, அனந்திகா மற்றும் பணியாளர்கள் மட்டுமே வீட்டில் இருந்தனர். கல்வீச்சு தாக்குதல் காரணமாக, அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது; போலீசார் குவிக்கப்பட்டனர். மதியம் 2:00 மணிக்கு, குஷ்புவின் தாயார், நஜ்மாகான் வீட்டுக்கு வந்தார். அப்போது, குஷ்புவின் மகள்கள் இருவரும் அவரை கட்டிப்பிடித்து அழுதனர். நேற்று மாலை வரை, இதுபற்றி போலீசில் புகார் செய்யப்படவில்லை.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (192)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Senthilkumar - Bangalore,இந்தியா
10-பிப்-201317:16:28 IST Report Abuse
Senthilkumar குஷ்புவை கவர்ச்சிக்காக மட்டும் திமுகவில் வைத்து இருக்கிறார்கள் , தலைமைக்கு கருத்து சொல்ல இல்லை என்று குஷ்பு புரிந்து கொள்ள வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Sengkang,சிங்கப்பூர்
09-பிப்-201300:02:13 IST Report Abuse
K.Sugavanam தலைமை கழகம் கடும் கண்டனம் தெரிவிச்சு நடவடிக்கை எடுக்க படும்னு சொல்றாங்க. கட்சியிலிருந்து குசுபுவை நீக்க சதின்னும் சொல்றாங்க.மகளிர் அணி பொம்பளைங்க தானே டி வீ ல ஆவேசமா ஆட்டம் போட்டாங்க.அப்போ மகளிர் அணி தலைவிக்கு தெரியாமயா? ஓஹோ....அப்புடி போகுதா... ரெண்டுபேரு இருந்தாலே வம்புதான் போல..
Rate this:
Share this comment
Cancel
E.DHANASEKARAN - TRICHY,இந்தியா
08-பிப்-201316:39:17 IST Report Abuse
E.DHANASEKARAN குஷ்பூ யார் ?அவர் எங்கிருந்து வந்தார், அரைகுறை ஆடையோடு 20 வருடங்களுக்கு முன்னால் சினிமாவில் தோன்றி, தமிழக இல வட்டங்களை மயக்கிய மாயாஜால மங்கை, அவர் D M K என்கிற கட்சி காணாமல் செய்து விடுவார். மும்பை மங்கை தமிழக பெண்களை இழிவு படுத்தியவர். இந்து கடவுளை இழிவு படுத்தியவர். தனக்கு பின்னால் சர்ச்சைகள் வேண்டும் என்று நினைப்பவர். இவரை யாரும் கண்டு கொள்ளாதீர்
Rate this:
Share this comment
Cancel
murugan - ruwais,ஐக்கிய அரபு நாடுகள்
08-பிப்-201316:34:37 IST Report Abuse
murugan குஸ்பூ உனக்கு இது எல்லாம் தேவையா. வந்தோமா வேடிக்கை காட்டினோமா போனோமான்னு இருக்கணும். இப்படியா சின்னபிள்ளை தனமா பேசுறது.
Rate this:
Share this comment
Cancel
சத்தி - Bangalore,இந்தியா
08-பிப்-201316:15:28 IST Report Abuse
சத்தி இன்று செருப்பு வீசியதன் மூலம் நம் கலாசாரம், நாகரிகம், கருத்துரிமை காப்பாற்றப்பட்டுள்ளது. குஷ்பு வின் அரசியல் காட்டில் இனி அடை மழை தான்.
Rate this:
Share this comment
Cancel
BT Shysen - Chennai,இந்தியா
08-பிப்-201315:58:30 IST Report Abuse
BT Shysen அய்ய்ய்யாயோ.... அந்த அற்புதமான காட்சிய நேர்ல பார்குற பாக்கியம் எனக்கு கெடைக்காம போச்சே......அவள.....
Rate this:
Share this comment
premkumar - thanjavur,இந்தியா
06-மார்-201316:47:22 IST Report Abuse
premkumarPURIYUTHU UNGA FEELINGS............ ...
Rate this:
Share this comment
Cancel
Ajay ganesh - kumbakonam ,இந்தியா
08-பிப்-201315:41:36 IST Report Abuse
Ajay ganesh திராவிடர் கலாச்சாரத்தின் புதிய வடிவம் கற்புக்கரசி குஷ்ப்பு. செருப்பெடுத்து திருப்பி வீசவில்லை‌யா.. இன்னும் தி மு க வின் கொள்கைகளை சரியாக படிக்கவில்லை போல் உள்ளது
Rate this:
Share this comment
Cancel
மதுர முனியாண்டி - madurai,இந்தியா
08-பிப்-201315:40:47 IST Report Abuse
மதுர முனியாண்டி இந்த சாக்கடையில் கல்லெறிந்தவர்கள் யார்....
Rate this:
Share this comment
Cancel
மதுர முனியாண்டி - madurai,இந்தியா
08-பிப்-201315:38:52 IST Report Abuse
மதுர முனியாண்டி ஐயஹோ சைதை தமிழரசி தாக்கப்பட்டாரா??? கோவில் கட்டியவர்கள் இந்த மணிமேகலைக்கு சிலை வைத்தால் நன்றாக இருக்கும்...
Rate this:
Share this comment
Cancel
JALRA JAYRAMAN - chennai,இந்தியா
08-பிப்-201315:25:53 IST Report Abuse
JALRA JAYRAMAN குஷ்பூ அக்காவுக்கு இரண்டு வழி தான் உள்ளது, ஒன்று அரசியலுக்கு முழுக்கு போடுவது. இரண்டாவது அதிமுகவில் சேர்வது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை