Natural cultivation : farmers new idea | இயற்கை விவசாயத்தில் அசத்தும் விவசாயி ; கி.கிரி அருகே 11 ஆண்டாக சாதனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இயற்கை விவசாயத்தில் அசத்தும் விவசாயி ; கி.கிரி அருகே 11 ஆண்டாக சாதனை

Added : பிப் 10, 2013 | கருத்துகள் (17)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
இயற்கை விவசாயத்தில் அசத்தும் விவசாயி ;

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே எட்டு ஏக்கர் நிலத்தில், 11 ஆண்டுகளாக இயற்கை உரம் மற்றும் மருந்துகளை தானே தயாரித்து, அதன் மூலம் தென்னை, மா, வாழை போன்ற பயிர்களை, 75 வயது முதியவர் சாகுபடி செய்து, சாதனை புரிந்து வருகிறார்.

விவசாயத்தில், ரசாயன உரங்கள் பயன்பாட்டால், மனிதனினுக்கு பல்வேறு நோய் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க, விவசாயிகள், இயற்க்கை உரங்களை பயன்படுத்த வேண்டும் என்று, இயற்கை ஆர்வலர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


சில ஆண்டுகளாக, விவசாயிகள் பலர், இயற்கை விவசாயத்தை நோக்கி பயணப்பட துவங்கியுள்ளனர். இயற்கை விவசாயத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதோடு, இயற்கை விவசாயம் மூலம் உற்பத்தி செய்யப்படும் உணவு தானியங்கள், காய்கறிகளுக்கும் சந்தையில் தனி வரவேற்பும், விலையும் கிடைக்க துவங்கியுள்ளது.


இருப்பினும், பல விவசாயிகள், தாங்கள் சாகுபடி செய்யும் பயிருக்கு, தற்போதும் ரசாயன உரங்களை பயன்படுத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி அடுத்த நேரலகிரியை சேர்ந்தவர் அஸ்வத்நாராயணன், 75. இவர், கர்நாடகா மாநில போக்எவரத்து கழகத்தில் வேலை பார்த்து விட்டு ஓய்வு பெற்றுள்ளார். ஓய்வுக்கு பின், நேரலகிரியில் உள்ள தனக்கு சொந்தமான, எட்டு ஏக்கர் நிலத்தில், தென்னை, மா, வாழை, சப்போட்டா, பப்பாளி போன்றவற்றை சாகுபடி செய்துள்ளார்.

இவர், ஒரு பசு மாடு மற்றும் ஒரு கன்றை வளர்த்துக் கொண்டு, அதில் கிடைக்கும் சாணம் மற்றும் கோமியத்தை கொண்டு இயற்கை உரங்களை தானே தயாரித்து விவசாயத்துக்கு பயன்படுத்தி வருகிறார். ரசாயன உரங்களை கொண்டு சாகுபடி செய்பவர்களை காட்டிலும், இவர் அதிக உற்பத்தி செய்து, விவசாய பொருட்களை விற்பனை செய்து வருகிறார். மேலும், தான் உற்பத்தி செய்த இயற்க்கை உரத்தை, தோட்டக்கலை துறைக்கு இலவசமாகவும், இவர் வழங்கி வருகிறார்.

அஸ்வத்நாராயணன் கூறியது:


கடந்த, 2002ம் ஆண்டு, ஹரித்துவாரில் சென்று, இயற்கை உரம் தயாரிப்பது குறித்து பயிற்சி பெற்று வந்தேன். அதன் பிறகு, மாட்டு சாணத்தில் இருந்து, பஞ்ச காவியம் தயாரித்து, மரங்களுக்கு உரமாக போட்டு வருகிறேன். மேலும், மரம் மற்றும் செடிகளுக்கு நோய் ஏற்பட்டால், அதற்கு தெளிப்பதற்காக, கோமியம், 100 லிட்டர், வேப்ப இலை, 25 கிலோ, பச்சைமிளகாய், 10 கிலோ, இஞ்சி, 10 கிலோ, பூண்டு, 10 கிலோ, புகையிலை, 10 கிலோ ஆகியவற்றை அரைத்து, கலந்து, 40 நாள் ஊற வைக்கிறேன்.

அதன் பின், அதை வடிகட்டி, ஒரு லிட்டர் தண்ணீரில், 50 மில்லி கலந்து, மரம் மற்றும் செடிகளுக்கு கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கிறேன். இந்த கரைச்சலை தெளித்தால், மரம் மற்றும் செடிகளை தாக்கும் அனைத்து நோய்களும் சரியாகிவிடுகிறது. இதனால், உற்பத்தியும் அதிகமாகிறது. இயற்கை உரத்தை கொண்டு உற்பத்தி செய்யப்படும் மா, மற்றும் தேங்காய்களை, பலரும் வாங்கிச் செல்கின்றனர். இயற்கை உரங்களை தயாரித்து பயன்படுத்த விரும்புவோர், என்னை அணுகினால், இலவசமாக பயிற்சி அளிக்க தயாராக உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sarva Manikandan - Chennai,இந்தியா
13-பிப்-201315:55:24 IST Report Abuse
Sarva Manikandan உமது சேவை நாட்டுக்கு தேவை
Rate this:
Share this comment
Cancel
Rameshkumar - Chennai,இந்தியா
12-பிப்-201309:51:15 IST Report Abuse
Rameshkumar இந்த மாதிரி நல்ல நல்ல விசயங்களை படிக்கும் போது கண்டிப்பாக சமுதாய மற்றம் ஏற்படும். இந்த மாதிரி விஷயங்களை முதல பக்கத்தில் வெளியிடவும்.
Rate this:
Share this comment
Cancel
Raja Singh - Chennai,இந்தியா
11-பிப்-201314:19:57 IST Report Abuse
Raja Singh இயற்கையின் நேசர் வாழ்க வளமுடன்...
Rate this:
Share this comment
Cancel
Krishnan Iyengar - Thanjavur,இந்தியா
11-பிப்-201312:15:24 IST Report Abuse
Krishnan Iyengar மிக மிக நல்ல கருத்து எல்லோரும் பின்பற்றவேண்டிய ஒன்று நாளையே இதை பின்பற்றவேண்டியது எல்லா விவசாய்களின் கடமை மற்றும் இது ஒன்றும் மண்ணை பாதிக்கவோ பின் விளைவுகளோ இல்லாத ஒரு நல்ல முறை செயற்கை உரங்கள் உடனடி பலன் தரும் ஆனால் மண்ணின் சக்தி முழுவதும் போயே போய் விடும் எனவே இதை தாரக மந்திரமாக எடுத்துகொள்ளவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Gopi - Tiruchirappalli,இந்தியா
10-பிப்-201318:47:48 IST Report Abuse
Gopi இயற்கை வேளாண்மை உண்மையிலேயே வெற்றிகரமானது
Rate this:
Share this comment
Cancel
Loganathan - Madurai,இந்தியா
10-பிப்-201317:08:26 IST Report Abuse
Loganathan ஹரித்வாரில் கற்றுகொண்டதை கிருஷ்ணகிரியில் இலவசமாக கற்றுகொடுக்கிறார் . வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
thamilaga.velanmai - Dharmapuri,இந்தியா
12-பிப்-201302:42:59 IST Report Abuse
thamilaga.velanmaiதொலைபேசி எண் அல்லது கைபேசி எண் கொடுக்குமாறு கேட்கிறேன்...
Rate this:
Share this comment
Cancel
chinnamanibalan - Thoothukudi,இந்தியா
10-பிப்-201313:05:11 IST Report Abuse
chinnamanibalan நாம் அன்றாடம் சாப்பிடும் அரிசி,காய்கறி அனைத்தும் செயற்கை உரம் மற்றும் பூச்சி கொல்லி மருந்து பயன்பாடு காரணமாக நச்சுத்தன்மை உடையதாக மாறி விட்டன.அதனால்தான் புதுப்புது நோய்கள் உருவாகி மனித குலத்திற்கு பெரும் அச்சுறுத்தலையும் ,சவாலையும் உருவாக்கி வருகிறது .இந்நிலையில் பெரியவர் அஸ்வத் நாராயணன் போன்றோரின் ஆக்கபூர்வமான இயற்கை விவசாய முயற்சி,நிச்சயம் மனித குலத்தை மேம்பாடு அடைய செய்யும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை...
Rate this:
Share this comment
Cancel
Ravanan Ramachandran - Chennai,இந்தியா
10-பிப்-201311:50:19 IST Report Abuse
Ravanan Ramachandran 75 வயதில் இவர் இவ்வாறு செய்வது மனதுக்கு சந்தோசமாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கின்றது. இவருக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.பல இளைஞர்கள் இவரது வழியை பின்பற்றினால் எந்த வித நோய் இன்றி பலத்துடன் வாழலாம் அல்லவா.அரசு இவரது பணியை ஊக்குவுக்க வேண்டும். முடிந்தால் பண உதவி தந்து பெரிய அளவில் புரட்சி செய்யலாமே.
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
10-பிப்-201311:10:03 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் இயற்கை விவசாயத்தை அரசும் ஊக்குவிக்க வேண்டும்...செயற்கை உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் பயன்படுத்துவதன்மூலம் மரபியல் சார்ந்த நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்...மேலும் GENETICALLY MODIFIED பயிருக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும்....இயற்கையை பேணி இயற்கை வழி வாழ நாம் நாம் யாவரும் உறுதிமொழி எடுப்போமாக...
Rate this:
Share this comment
Cancel
vayalum vazhvum-saravanakumar - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
10-பிப்-201310:17:41 IST Report Abuse
vayalum vazhvum-saravanakumar நாங்களும் இயற்கை விவசாயம் தான் செய்ய தொடங்கியுள்ளோம், இயற்கை விவசாயம் தொடங்க முடிவு எடுத்திருந்தால் முதலில் மாடுகளும் ஆடுகளும் வளர்க்க ஆரம்பிக்க வேண்டும் நாட்டு மாடாக இருந்தால் மிகவும் நல்லது. பிறகு எடுத்தவுடன் வெறும் எறு மட்டும் போதும் என்று இருந்து விட கூடாது. சிறிது செயற்கை உரம் உபயோகியுங்கள் ஏன் என்றால், நமது நிலத்தின் நுண்ணுயிரிகள் தற்போது குறைவாக உள்ளதால் நமக்கு நாம் இடும் எருவின் பலன் உடனடியாக பயிர்களுக்கு கிடைக்காது அதனால் ஆரம்பத்தில் சிறிது மற்றும் கதிர் அல்லது பூ வைக்கும் போது சிறிதளவு செயற்கை உரம் இடவேனும் மற்ற காலத்தில் மோர் கரைச்சல், பஞ்ச காவ்யா மற்றும் ஜீவமிர்தம் இவற்றை தொடர்ந்து உப்யோகிக்கவேனும். மேலும் மண்ணில் எக்காரணம் கொண்டும் குருணை மருந்துகளை உபயோகம் செய்ய கூடாது. அது மண் புழுக்களை கொன்று விடும். தினமும் கோமியத்தை ஒரு வாளியில் பிடித்து அத்துடன் சாணத்தை சரி பாதி கரைத்து நான்கு மடங்கு நீர் சேர்த்து வயலுக்கு நீர் பாச்சும்போது அதில் சேர்த்து விடுங்கள் ஒரு 6 மாதம் இப்படி தொடர்ந்து செய்தால் அப்புறம் செயற்கை உரத்தை நிறுத்திவிடலாம். எப்பவும் உடல் வலிமை குறைந்தவனை தான் நோய் அன்டும் அது பயிர்களுக்கும் தான். அதன் பிறகு பூச்சி மருந்து கலவையினை அய்யா சொன்னதுபோல தயார் செய்து வைத்து எப்ப வேணும் என்றாலும் உபயோகம் செய்யுங்கள் மேலும் நம்மாழ்வார், பாலேக்கர், இவர்களின் கருத்துக்களை படியுங்கள், மக்கள் டிவி வேளாண்மை செய்திகள் பாருங்கள். இன்டர்நெட் வசதியுள்ளவர்கள் தமிழ் கூகுளே என்று type செய்து இன்டர்நெட் ப்ரௌசெரை தமிழுக்கு மாற்றி வைத்து விடுங்கள். பிறகு இன்டர்நெட் options கரண்ட் என்று type செய்யுங்கள் எப்போவும் தமிழ் ப்ரௌசெர் உங்களுக்கு கிடைக்கும். அதுக்கு பிறகு தங்களின் சந்தேகங்களை தமிழில் type செய்து கேளுங்கள் விடை கிடைக்கும். தமிழில் type செய்வது பிரச்சனை என்றால், நமது தினமலரின் இந்த கருத்துக்களை பதிவு செய்யும் பகுதியில் எழுதி பிறகு கூகுளில் பேஸ்ட் செய்யுங்கள் எளிதாக விடை கிடைக்கும். எதிர் காலம் நமது கையில் யாருக்கும் நாம் பயப்படவேண்டாம் இந்த பூமாதேவி நம்மை காப்பாத்துவாங்க.ஜெய் ஹிந்த்
Rate this:
Share this comment
thamilaga.velanmai - Dharmapuri,இந்தியா
19-பிப்-201310:33:01 IST Report Abuse
thamilaga.velanmaiஉங்களின் பதிவு எதார்த்தமாக உள்ளது. அருமை சரவணன் ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை