வீட்டில் முடங்கிய முதியவரின் கண்டுபிடிப்புகள் : அரசின் ஊக்குவிப்பும் இல்லை
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

உடுமலை:நூற்பாலைகளில் தரத்தை மேம்படுத்துவதற்கு கண்டறிந்த கருவியை உற்பத்தி செய்ய, மத்திய அரசின் ஊக்குவிப்பு திட்டங்கள் கைகொடுக்காததால், கண்டுபிடிப்பாளர் வேதனையில் உள்ளார்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை எஸ்.வி., புரம் பகுதியில் வசிப்பவர் கனகராஜ், 71; ஸ்பின்னிங் மில் பிட்டர். ஸ்பின்னிங் மில்களில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அனுபவத்தில், நூலின் தரத்தை மேம்படுத்த "நியு மோட் நைப் செபரேட்டர்' எனும் எளிய கருவியை உருவாக்கினார்.கருவியை, மைய விலக்கு விசை தத்துவத்தில் வடிவமைத்து, ஸ்பின்னிங் இயந்திரத்தின் ஸ்பிண்டில்களில் பொருத்துமாறு அமைத்துள்ளார். இக்கருவி நூற்பாலையில், வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.இதை அதிகளவில் உற்பத்தி செய்ய மத்திய, மாநில அரசுகளின் கீழ் இயங்கும் பல்வேறு துறைகளிடம் ஊக்குவிப்பு நிதிக்காக விண்ணப்பித்தார்.மத்திய அரசின் தொழில் நுட்ப தொழில் முனைவோர் ஊக்குவிப்பு திட்ட அதிகாரிகளிடம் இக்கருவி குறித்து தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

கோவை தனியார் கல்லூரியில் நடந்த நேர் காணலில், கருவி உற்பத்தி குறித்த திட்ட கருத்துருவை அளித்தார். இது ஏற்கப்பட்டு, மத்திய அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர் ஊக்குவிப்பு திட்டத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது.இக்கருவியை உற்பத்தி செய்ய, 6 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை ஒதுக்கீடு செய்வதாகவும், இந்நிதி கோவையிலுள்ள தொழில் முனைவோர் ஊக்குவிப்பு திட்ட மையத்திற்கு அனுப்பப்படும்; அம்மையத்தில் கனகராஜ் கருவியை உற்பத்தி செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால், இவரது கண்டுபிடிப்புகள் செயல்பாட்டிற்கு வராமல் முடங்கியுள்ளன.இதே போல், புவியீர்ப்பு விசையை அடிப்படையாக கொண்டு மின் உற்பத்தி மற்றும் மனித வள மேம்பாட்டிற்கான கருவியை தயாரிக்கும் முயற்சியில் இவர் ஈடுபட்டு வருகிறார்.

இது குறித்து கனகராஜ் கூறுகையில், ""பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் போதிய ஊக்குவிப்பு இல்லாமல் வெளியுலக பயன்பாட்டிற்கு வருவதில்லை. பல்வேறு இடையூறுகளுக்கு இடையில் கண்டுபிடிக்கப்பட்ட கருவியை உற்பத்தி செய்ய பத்தாண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறேன். முதியோர் உதவி தொகை ஒன்றே எனக்கு வருவாயாக உள்ளது. போதிய நிதி உதவி அளித்தால், எனது கண்டுபிடிப்பு கருவிகள் அனைவருக்கும் பலனளிக்கும் வகையில் செயல்பாட்டிற்கு வரும்,'' என்றார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (16)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Varatharajan - Oslo,நார்வே
17-பிப்-201302:10:45 IST Report Abuse
Varatharajan இந்த மாதரி ஒருவரின் கண்டு பிடிப்புகளின் மூலம் நிதி உதவி பெற்றவருக்கு நிதி கிடைக்க வில்லையே இதை அரசின் பார்வைக்கு கொண்டு செல்வது பத்திரிக்கைகளின் கடமை அல்லவா? நிதி உதவி ஒதுகீடு செய்யப்பட்டும் அவரது கைக்கு வரவில்லை இரண்டு வருடமாக என்றால் வேதனை தான் உற்ச்சாகம் குறைந்து விடுகிறது இது போன்ற கண்டுபிடிப்பாளர்களுக்கு கருணை காட்டுங்கள் அரசு அதிகாரிகளே கமிசன் காசு கையுக்கு வரவில்லை என்று கிடப்பில் போட்டுவிட்டீர்களா?
Rate this:
Share this comment
Cancel
viji - erode,இந்தியா
16-பிப்-201314:51:36 IST Report Abuse
viji வாழ்த்துக்கள் அய்யா.இது போன்றவர்களை அரசு ஊக்குவிக்கலாம்
Rate this:
Share this comment
Cancel
tulasidas - Tirupur,இந்தியா
16-பிப்-201306:34:27 IST Report Abuse
tulasidas ஜி டி நாயுடு காலத்திலிருந்தே இந்தியனின் கண்டுபிடிப்புகள் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்டதில்லை. டீசல் எஞ்சின் ஒரு இந்தியர் கண்டுபிடித்தது என்றாலும் அது இந்தியாவில் அங்கீகரிக்கப்படாமல் அவர் கண்டுபிடிப்பை ஜப்பான் நிறுவனம் ஒன்று கூட்டு சேர்ந்த பிறகு இந்திய அரசாங்கம் ஜப்பானிடம் விலைகொடுத்து வாங்கியது .[ suri & nayyar ] இது வரலாறு. ஊழல் புரிந்தே வளர்ந்தவர்களுக்கு தேச நலனாவது ஒன்றாவது?
Rate this:
Share this comment
Cancel
Sundaram - Chennai,இந்தியா
14-பிப்-201317:30:13 IST Report Abuse
Sundaram அரசும் மக்களும் அன்னியர்களின் எந்திரங்களை விட்டு நம் நாட்டு கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
ganapathy - khartoum,சூடான்
14-பிப்-201316:56:01 IST Report Abuse
ganapathy நிறைய சம்பாதிக்கும் ராமராஜ் காட்டன் அதிபர் ஏதாவது உதவி செய்யலாம். முதியவருக்கு வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
மண்ணாந்தை - Raichur,இந்தியா
13-பிப்-201316:44:42 IST Report Abuse
மண்ணாந்தை தமிழ் நாட்டில் இயங்கும் ஸ்பின்னிங் மில்ல்களின் எண்ணிக்கை ஐநூறுக்கும் மேல். இவைகளில் உள்ள ஸ்பிண்டில்களின் எண்ணீக்கை இருபது மில்லியன்களுக்கும் மேல். லாபம் வரும் காலங்களில் ஸ்பின்னிங் மில்ல்கள் ஒரு ஒரு ஸ்பிண்டில் மூலமும் சம்பாதிக்கும் லாபம் இருபத்தி ஐந்து ரூபாய்க்கும் மேல். இந்த கண்ண்டுபிடிப்பாளர் காத்திருப்பதோ வெறும் ஏழு லட்சம் ரூபாய்க்கும் குறைவான தொகைக்கு. தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்பிண்டில் அளவை கருத்தில் கொண்டால், ஒரு ஸ்பிண்டில்க்கு முப்பத்தைந்து பைசாவிற்கும் குறைவாகவே தேவைப்படும். இந்த தொகையை மில்களஎ அவர்களின் அசோசியேசன் மூலம் கொடுத்து உதவலாம். ஆனால் செய்ய மாட்டார்கள். இந்த கண்ண்டுபிடிப்புகளை உபயோகமற்றவை என்று கிண்டலடித்துக்கொண்டே வேறு மூலையில் காப்பியடித்திக் கொண்டிருப்பார்கள். இதுதான் இந்தியா.
Rate this:
Share this comment
Cancel
G.SUBRAMANIAN.KUMBAKONAM - KUMBAKONAM ,இந்தியா
13-பிப்-201315:13:50 IST Report Abuse
G.SUBRAMANIAN.KUMBAKONAM .இந்த பணத்தை தனியார் நிறுவனமும் .........பேங்க் போன்று .......கடனாக தந்து ........அவரை ஊகுவிக்கலாமே ............
Rate this:
Share this comment
Cancel
sundaramss - Chennai,இந்தியா
13-பிப்-201311:44:47 IST Report Abuse
sundaramss எங்களுக்கு ஊழல் செய்வதற்குதான் நேரம் இருக்கு
Rate this:
Share this comment
Cancel
Raja Singh - Chennai,இந்தியா
13-பிப்-201311:28:13 IST Report Abuse
Raja Singh கனகராஜ் அய்யாவிற்கு வாழ்த்துக்கள் , அய்யா நீங்கள் இந்தியராக பிறந்ததால் உங்களுக்கு அங்கீகாரம் கிடைப்பது குதிரை கொம்பு { உங்களுக்கு ஆங்கில பொய் புலமை தெரியாது, கமிசன் கொடுக்க தெரியாது } , நீங்கள் அயல் நாட்டவறாய் இருந்திருந்தால் அதிலும் குறிப்பாக அமெரிக்கா, இத்தாலி அல்லது இலங்கையில் பிறந்திருந்தால் சிவப்பு கம்பள வரவேற்ப்பு ...
Rate this:
Share this comment
Cancel
Kavi - Udumalpet,இந்தியா
13-பிப்-201311:14:58 IST Report Abuse
Kavi வாழ்த்துக்கள், தமிழக அரசு கவனிக்க வேண்டும்.. நம்மால் முடியாததை ஒருவர் செய்தால் அதை கவனித்து செயல் படுத்த வேண்டும்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்