லண்டன்: காதலர் தினக் கொண்டாட்டத்தில், பெண்களை விட, ஆண்களே அதிக உற்சாகம் காட்டுவதாக, ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.உலகமெங்கும் இன்று, காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக பிரிட்டனில், ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
காதலை கொண்டாடுவதில், அதிக ஆர்வம் காட்டுவது ஆண்களா, பெண்களா என்பதை அறிய நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 21 சதவீத பெண்கள், தங்களுக்கு காதலர் தினத்தில் ஆர்வம் இல்லை என, தெரிவித்துள்ளனர். ஆண்களில், 14 சதவீதத்தினர் இதே கருத்தை தெரிவித்துள்ளனர்.அதே போல, காதலர் தினத்தில், பரிசு பொருட்களுக்காக செலவு செய்வதிலும், பெண்களுக்கு பெரிய ஆர்வம் இல்லை. 25 சதவீதத்துக்கும் மேற்பட்ட பெண்கள், தங்கள் காதலருக்கு வாழ்த்து அட்டை மட்டும் அனுப்புவதில் ஆர்வம் செலுத்துகின்றனர். தங்கள் காதலிகளுக்கு பூங்கொத்து முதல் நகைகள் வரை பரிசளிப்பதற்காக, தங்கள் பணத்தை வாரியிறைக்க, ஆண்கள் தயங்குவதில்லை.இவ்வாறு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா என் உயிர் நின்னதனறோ இது முதிர்ந்த காதலின் எல்லை காதலர் தினத்தில். மீதி எல்லாம் உடல் வனப்பில் உருவாகும் ஒரு மன கிளர்ச்சி. இதற்கும் காதலுக்கும் சம்பந்தம் இல்லை. இங்கு நாம் காண்பது காமத்தின் அல்லல் தான் காதலர் தினம்.
இன்றைய பல காதல்கள் உண்மை காதல்களாக இல்லை. இன்று பெரும்பாலானவை வெளி அழகை மட்டும் வைத்து வருகிறது. காதலுக்கு வெளி அழகும் ஒரு காரணமாக இருக்கலாம், ஆனால் அது மட்டுமே காரணமாக இருக்கக் கூடாது. மேலும் இன்றைக்கு பல பேர் பணத்தையும், வசதியையும் பார்த்து தான் விரும்புகின்றனர். மற்றவரின் மனதையோ, குணத்தையோ, நடத்தையையோ பார்த்து காதலிப்பதில்லை. இன்று சில பெண்கள் ஒரு ஆணை காதலிக்கும் முன் அவரிடம் எவ்வளவு பணம் இருக்கிறது, அவரது வசதி என்ன என பார்த்து தான் காதலிக்கிறார்கள். ஆணிடம் பணம் இருக்கும் வரையும், இல்லை அந்த ஆண் அந்த பெண்ணுக்காக பணத்தை செலவழிக்கும் வரை தான் காதலிக்கிறார். இன்றைக்கு பல காதல்கள் இப்படி தான் இருக்கிறது. அவரிடம் பணம் தீர்ந்தவுடனோ, அவர் இவருக்காக செலவழிப்பதை நிறுத்தியவுடனோ இவர் அவரை விரும்புவதையும் நிறுத்தி விடுகிறார். பிறகு வேறு ஒருவரை பிடிக்கிறார். இவைகள் உண்மை காதல் இல்லை. இவைகள் பணத்திற்காகவும், தன் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளவும் செய்யும் ஒரு நாடகம். எல்லா காதலர்களும் இப்படி இல்லை என்றாலும், இன்று பலர் இப்படி உள்ளனர் என்பது உண்மை. இந்த லட்சணத்தில் இதற்கு ஒரு தினம் வேறு. உண்மை காதலுக்கு தனியாக ஒரு தினம் தேவை இல்லை.
25 சதவீதத்துக்கும் மேற்பட்ட பெண்கள், தங்கள் காதலருக்கு வாழ்த்து அட்டை மட்டும் அனுப்புவதில் ஆர்வம் செலுத்துகின்றனர் (தன்னுடைய பணம் என்றால் எப்படி ). தங்கள் காதலிகளுக்கு பூங்கொத்து முதல் நகைகள் வரை பரிசளிப்பதற்காக, தங்கள் பணத்தை வாரியிறைக்க, ஆண்கள் தயங்குவதில்லைகாதலியைப்பார்த்து காதலன் பாட வேண்டியது உன் கண்ணில் நீர் வழிந்தால் என் பர்சு காலியாகுதடி. இவர்களின் காதல் உண்மை என்று நம்பி வாழ்கையை தொலைக்காதீர்கள் ஆண்களே விளக்கொளியை நாடும் விட்டில் பூச்சிகள் ஆகாதீர்கள். உலகமெங்கும் இன்று, காதலர் தினம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவு தினம் கொண்டாடப்படுகிறது என்பதே உண்மை .
டார்லிங், நாம் இன்னும் எத்தனை ஆண்டுகள் காதலர்களாகவே இருப்பது? டியர், யோசி, நாடெங்கும் லஞ்சம்,ஊழல். பேட்டைக்கு பேட்டை கொலை,கொள்ளை,கற்பழிப்பு. குற்றம் சுமத்தப்பட்டவன் பதவியில், மறுக்கப்பட்ட நீதி,எங்கும் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி விஷம்போல், எதிர்காலமே சூனியமாய் தெரிகிறது. இதில் கல்யாணம் செய்துகொண்டு பிள்ளை குட்டிகள் ஆகிவிட்டால்,வீட்டு செலவு,உன் மேக்கப் செலவு, பிள்ளைகள் ஸ்கூல் பீஸ் என்று போய் விடும். வருமானம் பத்தாது. எனவே கல்யாணம், கத்திரிக்காய் எல்லாம் வேண்டாம்,இப்படியே இருப்போம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.