Kanimozhi sadden on marrige issue | திருமணத்தையே கேலி செய்கின்றனர்: கனிமொழி வேதனை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

திருமணத்தையே கேலி செய்கின்றனர்: கனிமொழி வேதனை

Updated : பிப் 15, 2013 | Added : பிப் 14, 2013 | கருத்துகள் (221)
Advertisement
திருமணத்தையே கேலி செய்கின்றனர்: கனிமொழி  வேதனை

சென்னை: ""காதலர் தினத்தில் நாய்க்கும், நாய்க்கும் திருமணம் செய்து வைப்பதன் மூலம், திருமணத்தையே கேலி செய்கின்றனர்,'' என, தி.மு.க., ராஜ்யசபா, எம்.பி., கனிமொழி பேசினார்.சமூக அமைதிக்கான படைப்பாளிகள் இயக்கத்தின் சார்பில், "வன்மத்தில் கறைபடுமோ காதல்' என்ற தலைப்பில், திறந்தவெளி கவியரங்கம், சென்னையில் நேற்று நடந்தது.கவியரங்கத்திற்கு, கவிஞர் வாலி தலைமை வகித்து பேசியதாவது:காதல் திருமணத்தால் தான், ஜாதி ஒழிக்க முடியும். நானும் காதல் திருமணம் செய்தவன் தான். காதல் எதிர்ப்பு என்பது, அர்த்தமற்ற செயல். இஷ்டப்பட்டு கஷ்டப்படுவது தான், காதல். உடல் கவர்ச்சியில் வருவது, காதல் அல்ல; ஆன்மாவை தொடுவது தான், காதல். என் அண்ணனின் மகள், ஒரு பையனை காதலித்தாள். அண்ணன் குடும்பத்தினர், காதலை எதிர்த்தனர். அந்த பையன் என்னிடம் வந்து, "நீங்கள் தான் எங்கள் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும்' என்றான்.
"அந்த பையன், நல்ல பையனாக இருக்கும் போது, ஏன் எதிர்க்க வேண்டும்' என, அண்ணனிடம் கேட்டேன். ஒரு வழியாக அவரை சம்மதிக்க வைத்து, அந்த திருமணத்தை, நான் தான் நடத்தி வைத்தேன்.இன்னொரு திருமணத்தில், மணப்பெண், பிராமணர் குடும்பத்தை சேர்ந்தவர். மணமகன் யார் என்றால், இளையராஜா மகன் யுவன் சங்கர்ராஜா. இளையராஜா என்ன ஜாதி என, எல்லாருக்கும் தெரியும். காதலுக்கு ஜாதி இல்லை என்பதை, என் குடும்பத்தில் நடந்த திருமணமே ஒரு எடுத்துக்காட்டு.இவ்வாறு வாலி ÷ பசினார்.
தி.மு.க., ராஜ்யசபா கனிமொழி பேசியதாவது:
காதலர் தினத்தை, போர்க்களமாக, அரசியல் கட்சிகள் மாற்றியுள்ளன. ஆனால், காதலர் தினத்தை, கவிஞர்கள் ஒன்று சேர்ந்து, சமூக நீதி களமாக மாற்றியுள்ளனர். ஜாதியை பார்க்காமல் வருவது தான், காதல். காதலர் தினத்தில் நாய்க்கும், நாய்க்கும் திருமணம் செய்து வைக்கின்றனர். மிருகங்கள் என்ன பாவம் செய்தன? காதலை கொச்சைப்படுத்துவதாக கூறி, திருமணத்தையே கேலி செய்கின்றனர்.எதற்காக போராட்டம் நடத்துகிறோம் என்ற தெளிவு இல்லாமல், சில அரசியல் கட்சிகள், குழப்பத்தோடு போராட்டத்தை நடத்துகின்றன. அந்தக் கட்சிகளின் கொள்கைள் நீர்த்துப் போய்விட்டன. விலை போவதற்கு பையில் ஒன்றுமில்லை. அதனால் தான் இளைஞர்களுக்கு எதிராக காதல் எதிர்ப்பு போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். தமிழகத்தை கூறு போட நினைக்கும் கட்சிகளை இந்த சிறுகுரல் பற்றி எரிந்து பொசுக்கும். ஜாதி வேண்டும் என, குறிப்பிட்ட பெரிய சக்திகள் தலை தூக்கியுள்ளது. அதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (221)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
saravanan sagadevan - Chennai,இந்தியா
20-பிப்-201310:46:43 IST Report Abuse
saravanan sagadevan பணகரர்களும் , அதிகாரத்தில் உள்ளவர்களும் ஒரு மனைவி இருக்கும் போதே இரண்டு துணைவிகள் வைத்து கொண்டால் அதுவும் காதல் . ஆனால் அதையே சாதாரண மனிதர்கள் செய்தால் அது கள்ள காதல் . என்ன செய்ய பல்லு இருகிறவன் பக்கோடா சாபிடுறான் .
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
20-பிப்-201300:13:17 IST Report Abuse
Pugazh V டபிள் சென்ச்சுரியில் படித்தவர்கள் எண்ணிக்கை. கனிமொழியின் வார்த்தைகளை இவ்வளவு பேர் படிகிரார்களா மிக்க நன்று. மணமுடித்த பின் மனதுக்கு ஒவ்வாதவரை மண விலக்கு செய்வதில் என்ன தவறு தகுதியின்மை என்று புரியவில்லை. ஏன் கனிமொழியின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கிறார்கள்? பிறரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிப் பேசுவது தமிழர் மரபல்லவே. கொஞ்சமேனும் நாகரீகமாக நடந்து கொள்வது நலம்.
Rate this:
Share this comment
Cancel
மருதாணி - சான் ஹோசே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
15-பிப்-201323:41:12 IST Report Abuse
மருதாணி ஏன் நாய்க்கு மட்டும் அந்த ஆசை இருக்காதா?
Rate this:
Share this comment
Cancel
Bellie Nanja Gowder - Coimbatore,இந்தியா
15-பிப்-201323:21:44 IST Report Abuse
Bellie Nanja Gowder சீர்திருத்த திருமணம் என்ற பேரில் நீங்கள் செய்யும் கேலி கூத்தை விட இது ஒன்றும் கேகி இல்லை
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
15-பிப்-201321:51:35 IST Report Abuse
g.s,rajan தமிழ்ப்பண்பாடு எங்கே ?தமிழ்ப்பண்பாடு என்பது என்ன ?தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்களேன் .சாதி மட்டும் இல்லேன்னா உங்களை மாதிரி அரசியல்வாதிங்க பொழப்புல மண்ணுதான்
Rate this:
Share this comment
Cancel
Anand - Madurai,இந்தியா
15-பிப்-201320:57:39 IST Report Abuse
Anand அது எல்லாம் இருக்கட்டும் கனி அக்கா, நீங்க அடிச்சா 2 G பணம் எங்க வச்சி இருக்கிங்க?? அத சொல்லுங்க கா
Rate this:
Share this comment
Cancel
Raju Rangaraj - Erode,இந்தியா
15-பிப்-201320:32:55 IST Report Abuse
Raju Rangaraj ஈரோட்டில் சிக்கய்ய நாயக்கர் கல்லூரி நிர்வாகத்தின் முன்னாள் தலைவர் பெரியார் என்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்,அப்போது பிராமணாள் கபே என்று ஓட்டல்கள் சாதியை வெஜ் ஓட்டலுக்கு குறித்ததை எதிர்த்து பிராமணாள் பெயரை தார் பூசி அழித்தார்கள். ஆனால் இன்றும் அந்த கல்லூரியின் பெயர் சிக்கய்ய நாயக்கர் கல்லூரி ,,,,,,,,சாதியை ஒழிக்க முடியுமா ?
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
16-பிப்-201309:08:35 IST Report Abuse
Pannadai Pandianகவுண்டரே, திருப்பூர் போன்ற ஊர்களில் கவுண்டர் மெஸ் என்று உள்ளது. கவுண்டர் மெஸ் என்று பெயர் வைத்ததற்கு காரணம் ஜாதி ஈடுபாட்டால் அல்ல. அந்த ஹோடேலில் சுவையான மாமிச உணவு கிடைக்கும் என்பதால் தான். அதே போலத்தான் இந்த பிராமணாள் கபே யும். வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் வயறு கோளாறு ஊர் போயி சேரும் வரை வராமல் இருக்க இந்த மாதிரி உணவு விடுதிகளை அணுகினார்கள். காலம் மாற மாற இந்த பெயர்களும் மாறிவிட்டது. தற்போது பிராமணர்களே பிராமணாள் ஹோட்டல் என்று பெயர் வைக்க கூசுகிறார்கள் என்பது தான் உண்மை. ...
Rate this:
Share this comment
LAX - Trichy,இந்தியா
19-பிப்-201316:17:12 IST Report Abuse
LAXபிராமணாள் கஃபே என்ற பெயரைத்தாங்கி நடந்து வந்த ஹோட்டலை சமீபத்தில் தி.க.வினர் (போராட்டம் நடத்தி போக்குவரத்து நெரிசல்களை ஏற்ப்படுத்தி) பெயர் மாற்றம் செய்ய வைத்துவிட்டனரே? இது பெயர் வைத்தவர் தவறா? போராட்டம் செய்தவர்கள் தவறா? அல்லது அதற்கு பயந்து பெயரை மாற்றியவர்கள் தவறா? வேறு யாரையும் மிரட்டி பணிய வைக்க முடியாது.. பிராமின்கள் என்றால் அவ்வளவு இளக்காரம் அவர்கள் மற்றவர்களிடம் மல்லுக்கு நிற்கமாட்டார்கள் என்ற தைரியத்தில்.....
Rate this:
Share this comment
Cancel
rajaguru - chennai,இந்தியா
15-பிப்-201320:05:03 IST Report Abuse
rajaguru ஒரு பெண் காதல் கொண்டு ஒருவனை மட்டும் மணந்து வாழ்தால் அதை வரவேற்கலாம். பலரையும் காதலித்து பல பேருடன் தொடர்பு கொள்ளும் போது நாயை போல் இருக்காதீர்கள் என்பதை வலியுறுத்த தான் இப்படி திருமணம் நடக்கிறது
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
16-பிப்-201309:09:41 IST Report Abuse
Pannadai Pandianசூபர் விளக்கம். உண்மை இதுதான்....
Rate this:
Share this comment
T.C.MAHENDRAN - LUSAKA,ஜாம்பியா
16-பிப்-201313:52:46 IST Report Abuse
T.C.MAHENDRANராஜகுரு,நேரடியான தாக்குதல் கருத்து உங்களுடையது....
Rate this:
Share this comment
Cancel
V. Udayakumar - Ranipet,இந்தியா
15-பிப்-201319:41:38 IST Report Abuse
V. Udayakumar நாய்களுக்கு ஜாதி இல்லை. மதம் இல்லை. அப்புறம் என்ன.
Rate this:
Share this comment
Cancel
Parvez - Trichirappalli,இந்தியா
15-பிப்-201318:34:37 IST Report Abuse
Parvez கனிமொழி, காதலை பற்றியோ திருமணத்தை பற்றியோ பேச என்ன தகுதி இருக்கிறது என்பது புரியாத புதிர்???அப்பா முதல்வராக இருந்தபோது அரசன் பயர் வொர்க்ஸ் குடும்பத்தில் நல்லதொரு வரனை தான் கட்டி வைத்தார்கள். வாழ பிடிக்காமல் விவாகரத்து, பிறகு யாரோ அரவிந்தன் .......என்று தொடர்கிறது. இவர்கள் பேசுகிறார்கள் காதலை பற்றியும் திருமணத்தை பற்றியும், கொடுமைடா சாமீ..........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை