district news | தாமல் வராகீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தாமல் வராகீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

Added : பிப் 14, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காஞ்சிபுரம்:தாமல் கிராமத்தில் உள்ள, கவுரீஸ்வரி உடனுறை வராகீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், நேற்று நடந்தது.சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரத்தை அடுத்துள்ளது தாமல்

கிராமம். இங்கு கவுரீஸ்வரி உடனுறை, வராகீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வராஹ அவதாரம் எடுத்த பெருமாள் வழிபட்டதாகக் கூறப்படுகிறது.இக்கோவிலில், கடந்த 2001ம் ஆண்டு

கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது புதிதாக, 118 அடி உயர ராஜகோபுரம் கட்டப்பட்டது.மூலவர் சன்னிதி புதுப்பிக்கப்பட்டது. திருப்பணிகள் முடிந்து, நேற்று கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, கடந்த 11ம் தேதி யாகசாலை பூஜை துவங்கியது. தினமும் காலையிலிருந்து மாலை வரை, சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டன.நேற்று காலை 9:00 மணிக்கு, மேளதாளங்கள் ஒலிக்க, அதிர்வேட்டுகள்

முழங்க, ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து மூலவர் சன்னிதி மற்றும் பரிவார மூர்த்தி சன்னிதிகளுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.கும்பாபிஷேகத்தில், ஆயிரக்கணக்கான

பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. கோவில் வெளிப்புறம் பல்வேறு தரப்பினர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். பகல் 12:00 மணிக்கு, சுவாமிக்கு மகா அபி÷

ஷகம் நடந்தது. மாலை சிறப்பு அலங்காரம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X