Advertisement
ஒடிசாவில் 60க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இலவச கல்வி அளிக்கும் டீக்கடைக்காரர்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

15 பிப்
2013
10:53
பதிவு செய்த நாள்
பிப் 15,2013 10:35

கட்டாக்: ஒடிசாவில், டீக்கடைக்காரர் ஒருவர் சுமார் 60 ஏழை குழந்தைகளுக்கு தனது சொந்த செலவில் கல்வி அளித்து வருகிறார்.

ஒடிசா மாநிலம் கட்டாக்கைச் சேர்ந்தவர் பிரகாஷ் ராவ். அங்குள்ள சேரிப்பகுதியில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். பதினொன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள பிரகாஷ், அதற்கு மேல் படிக்க வசதியில்லாததால் படிப்பை கைவிட்டு விட்டார். தற்போது டீக்கடை நடத்தி வரும் அவருக்கு படிப்பின் அருமை நன்றாக தெரியும். அவர் டீக்கடை வைத்திருக்கும் பகுதியில் உள்ள மக்களில் பெரும்பாலானோர் கூலித் தொழிலாளிகள். அன்றன்றைக்கு தொழிலுக்குச் சென்றால் தான் அவர்களுக்கு வருமானம். இதனால் அவர்களின் குழந்தைகள் படிக்க வசதியின்றி, தெருக்களில் சுற்றித்திரிவதைக் கண்டு வேதனையடைந்த பிரகாஷ், அவர்கள் படிப்பதற்காக சிறு பள்ளி ஒன்றை அமைத்துள்ளார். அதில் தற்போது 3ம் வகுப்பு வரை கல்வியளிக்கப்பட்டு வருகிறது. 3ம் வகுப்புக்கு மேல் குழந்தைகள் அரசு பள்ளிகளில் சேர்ந்து படிக்க, பிரகாஷ் உதவி செய்து வருகிறார். இப்பள்ளியில் சுமார் 60 ஏழை குழந்தைகள் படித்து வருகின்றன. குழந்தைகளுக்கு கல்வியளிக்க 4 டீச்சர்களை நியமித்துள்ள பிரகாஷ், அவர்கள் நான்கு பேருக்கும் சம்பளமாக ரூ. 10 ஆயிரம் தந்து வருகிறார். மேலும், சம்பளம், மற்ற செலவுகள் எல்லாம் சேர்த்து மாதம் ஒன்றிற்கு அவருக்கு ரூ. 20 ஆயிரம் செலவாகி வருகிறது. இவை அனைத்தையும் தனது டீக்கடையிலிருந்து மட்டுமே எடுத்து செலவிட்டு வருகிறார் பிரகாஷ். தனது பள்ளிக்காக இதுவரை யாரிடம் பணஉதவி அவர் கேட்டதில்லை.


பிரகாஷின் பள்ளியில் படித்து வரும் ஜெயா என்ற சிறுமியின் தாய் கூறுகையில், "முன்பெல்லாம் குழந்தைகள் தெருக்களில் சுற்றித்திரிவார்கள். அவர்களில் சிலர் சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டு வந்தனர். ஆனால் பிரகாஷ் பள்ளி ஆரம்பித்த பின் அவர்கள் அனைவரும் மாறி விட்டனர். இப்போது ஒழுங்காக பள்ளி செல்கின்றனர். இப்போது எனது இரு பெண் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து கனவு கண்டு வருகிறேன்" என்று தெரிவித்தார்.


இதுகுறித்து பிரகாஷ் கூறுகையில், "தாய், தந்தையர்கள் பணிக்குச் சென்ற பின் அவர்களது குழந்தைகள் தெருவில் சுற்றித்திரிவது கண்டு மிகவும் மனவேதனை அடைந்தேன். தற்போது பள்ளி துவங்கியதும் அவர்களது பெற்றோர்களே குழந்தைகளை பள்ளிக்கு வந்து விடும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சமூக விரோத செயல்கள் செய்தவர்கள் தற்போது திருந்தி விட்டனர். எந்த ஒரு சிறார் சட்டமும் மாற்றங்களைக் கொண்டு வராது. ஒழுக்கக்கல்வியே குழந்தைகளிடம் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும்" என்றார். கல்விப்பணி மட்டுமல்லாமல், 50 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ள பிரகாஷ், அவசர காலத்தில் ரத்தம் தேவைப்படுவோருக்கு ரத்த தானமும் செய்து வருகிறார்.


இன்றைய சிக்கலான, குழப்பமான காலகட்டத்தில், அநேகம் பேர் மகிழ்ச்சியை வெளியில் தேடிக் கொண்டிருக்கும் வேளையில், அடுத்தவர்களுக்கு உதவி புரிவதிலேயே மகிழ்ச்சி இருக்கிறது என்பதை எளிதான வகையில் சுட்டிக்காட்டும் வகையில் வாழ்ந்து வரும் பிரகாஷ் ராவ் போன்றவர்கள் நமக்கு முன்னுதாரணமாக இருந்து வருகின்றனர்.





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (72)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Eswaran - Palani,இந்தியா
18-பிப்-201308:42:55 IST Report Abuse
Eswaran அடேங்கப்பா ... இந்த நல்லவருக்குக் குவிந்துள்ள பாராட்டுக்களே அவரது செயல் எவ்வளவு உயர்ந்தது என்பதற்கு அத்தாட்சி.மீண்டுமொரு முறை வணங்கி வாழ்த்துகிறேன். ஈஸ்வரன்,பழநி.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Erodeiva - ERODE,இந்தியா
16-பிப்-201310:56:37 IST Report Abuse
Erodeiva இது போல சத்தமில்லாமல் சமுதாய சேவை செய்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு அரசு அதிகாரிகளும் அரசியல் மற்றும் ஜாதி தலைவர்களும் ஆதரவு கரம் நீட்டாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரவம் தர்ரமிள் இருந்தால் சரி.
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
vagthiagarajan - chennai,இந்தியா
16-பிப்-201309:27:16 IST Report Abuse
vagthiagarajan கோடிகளில் புரளும் அரசியல்வாதிகள் உள்ள நாட்டில் இவரை போல் உள்ளவர்களால்தான் நாடு இன்னும் நற்பெயர் அழியாமல் காப்பற்றப்படுகிறது.===== கதிரா
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
parvathy murali - melbourne,ஆஸ்திரேலியா
16-பிப்-201308:38:25 IST Report Abuse
parvathy murali இந்த மனிதரிடம் நான் கடவுளை பார்க்கிறேன் அவரை வணங்குகிறேன்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Vinayagamurugan K - Rio de Janeiro,பிரேசில்
16-பிப்-201308:31:22 IST Report Abuse
Vinayagamurugan K திரு பிரகாஷ் அவர்களே வாழ்க வளர்க உங்கள் தொண்டு, தங்கள் சுய தொழில் மூலம் கல்வியினை வளர்க்கும் உங்கள் கருணையே கருணை உங்கள் உள்ளம் அறிந்து மகிழ்கிறேன். 28 ஆண்டுகளுக்கு முன் எனது கிராமத்தில் என்முயர்ச்சி இன்று எல்லோரும் கற்றவராக , கிராமமே முன்னேற்ற பதில் உள்ளதை கண்டு மகிழ்கிறேன். தாங்களும் அவ்வின்பத்தை விரைவில் அடைவீர்கள் வாழ்த்துகள்
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
Sahayam - cHENNAI,இந்தியா
16-பிப்-201300:24:10 IST Report Abuse
Sahayam good job. Please try to get help from others/Govt and help ext this service till College for those students
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
G.SUBRAMANIAN.KUMBAKONAM - KUMBAKONAM ,இந்தியா
15-பிப்-201321:14:37 IST Report Abuse
G.SUBRAMANIAN.KUMBAKONAM ஏழ்மையாக இருந்தாலும் .............ஏணி போல மனசை ......கடவுள் கொடுத்து உள்ளார் ..........
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
MUTHU - trichy  ( Posted via: Dinamalar Android App )
15-பிப்-201319:19:01 IST Report Abuse
MUTHU நல்ல இரூ
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
அரசன் - madurai  ( Posted via: Dinamalar Android App )
15-பிப்-201318:23:13 IST Report Abuse
அரசன் எவ்வளவு பாராட்டினாலும் ஈடாகது..மற்றவர்களை குறை சொல்லி பிரயோஜனம் இல்லை.தம்மால் முடிந்ததை செய்தாலே குறை ஏற்பட வாய்பில்லை என்பதை உணர்த்துகின்ற உங்களது வாழ்கை எங்களது பாடம்..ரியல் ஹீரோக்கு ராயல் சல்யூட்
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
kk - kovai  ( Posted via: Dinamalar Android App )
15-பிப்-201317:48:19 IST Report Abuse
kk ஆனா ஊனா சாதனை என்று போடும் பத்தி்ரிக்கைகாரர்களே இவரைப் போன்ற நல்லுள்ளம் படைத்தோரின் செயலைக் கவுரவிக்க தவறுகிறீர்கள்
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.