சென்னை : ""கர்நாடகாவில் இருக்கும் செல்வாக்கை தக்க வைத்துக் கொள்வதற்காக, காவிரி பிரச்னையில் தமிழகத்துக்கு எதிராக, காங்கிரசும், பா.ஜ.,வும் செயல்படுகின்றன,'' என, முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டினார். பொதுப்பணித் துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் மகள், முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் மகன், ஆவடி நகர செயலர் தீனதயாளன் மகன் ஆகியோரது திருமணங்கள் மற்றும் ஜெ., பேரவை சார்பில், 65 ஜோடிகளுக்கு இலவச திருமணம் ஆகியவற்றை, சென்னை, ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நேற்று நடத்தி வைத்து, ஜெயலலிதா பேசியதாவது:
வஞ்சிக்கும் மத்திய அரசு :
சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று தான், காவிரி நீரையும், வெளிமாநிலங்களிலிருந்து மின்சாரம் கொண்டு வர, வழித் தடத்தையும் அமைக்க அனுமதி பெற வேண்டியுள்ளது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை, அரசிதழில் வெளியிட, மத்திய அரசுக்கு மனமில்லை. தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.,வுக்கு, கர்நாடகத்தில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால், இரு தேசிய கட்சிகளுக்கும், தமிழகத்தில் செல்வாக்கில்லை. தலைகீழாக நின்றாலும், அவர்களால் தமிழகத்தில் வெற்றி பெற முடியாது. இதனால், காவிரி பிரச்னையில் இரு கட்சிகளும், கர்நாடகத்துக்கு சாதகமாக நடந்து கொள்கின்றன. மத்திய அரசில் அதிகாரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும், தி.மு.க., இதற்கு பக்கவாத்தியம் வாசிக்கிறது.
முன்மாதிரி :
இவ்வாறு, ஜெயலலிதா பேசினார்.
65 ஜோடிகளுக்கு 65 சீர்வரிசை : முதல்வர் ஜெயலலிதாவின், 65வது பிறந்த நாளை முன்னிட்டு, ஜெ., பேரவை சார்பில், 65 ஜோடிகளுக்கு நடத்தி வைக்கப்பட்ட திருமணம் என்பதால், மணமக்களுக்கு, 65 சீர் வரிசைகள் வழங்கப்பட்டன. மணமகளுக்கு நான்கு கிராம் தாலி, வெள்ளி மெட்டி, பட்டுப் புடவை, மணமகனுக்கு பட்டு வேட்டி, பட்டு சட்டை வழங்கப்பட்டது. இவை தவிர, மெத்தை, ஜமக்காளம், தலையணை, பெட்ஷீட், சூட்கேஸ், சாமி படம், குத்துவிளக்கு, கமாட்சி விளக்கு, குங்கும சிமிழ், கற்பூர ஆரத்தி, துபகால், பஞ்சபாத்திரம், உத்தரணி, ஆரத்தி தட்டு, பூஜை மணி, கிரைண்டர், மிக்சி, கேஸ் ஸ்டவ், குக்கர், டேபிள் பேன், டிபன் கேரியர், சுவர் கடிகாரம், கை கெடிகாரம், குடம், தவலை, சொம்பு, டம்பளர், இட்லி அடுக்கு, சாப்பாடு பிளேட், டிபன் பிளேட், பொங்கல் பாத்திரம், கடாய், பால் பாத்திரம், குழம்பு பாத்திரம், அன்ன கரண்டி, தோசை கல், தோசை கரண்டி, தாம்பூல தட்டு உள்ளிட்ட, 65 சீர் வரிசை பொருள்கள் வழங்கப்பட்டன.
ஜெ., கருத்துக்கு பா.ஜ., பதில் : ""தமிழகத்தில் பா.ஜ., செல்வாக்கு இல்லாமல் உள்ளது என, முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளது சரியல்ல,'' என, அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார் . அ.தி.மு.க., ஜெ., பேரவை சார்பில், 65 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வத்து, முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், ""தேசிய கட்சியான காங்கிரஸ், பா.ஜ.,வுக்கு தமிழகத்தில் செல்வாக்கில்லை. கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பு, அக்கட்சிகளுக்கு உள்ளது. இதனால், கர்நாடகத்துக்கு சாதகமாக நடப்பதற்காக, காவிரி பிரச்னையில், தமிழகத்துக்கு துரோகம் செய்கின்றனர்,'' என, குற்றம்சாட்டினார். இதற்கு, பதில் அளித்து, பா.ஜ., மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: தமிழகத்துக்கு தண்ணீர் தர மாட்டேன் என, கர்நாடக பா.ஜ., அரசு அடம் பிடிப்பது தவறு. கோர்ட் உத்தரவுப்படி தண்ணீர் திறந்து விட வேண்டும்.
காவரி பிரச்னையில், தமிழகம் எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும், தமிழக பா.ஜ., துணை நிற்கும் என, ஏற்கனவே அறிவித்துள்ளோம். காவிரி விவகாரத்தில், தமிழகத்துக்கு ஆதரவாக, கர்நாடக, அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், எந்த போராட்டத்தையும் நடத்தவில்லை. இந்நிலையில், பா.ஜ., துரோகம் செய்கிறது. தமிழகத்தில் செல்வாக்கு இல்லாத கட்சி என்றெல்லாம், முதல்வர் ஜெயலலிதா பேசுவது சரியல்ல. கர்நாடகத்தில், அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து, காவிரி பிரச்னைக்கு குரல் கொடுக்கின்றன. ஆனால், தமிழகத்தில், அந்த ஒற்றுமையில்லை. இதை, மத்திய அரசும் புரிந்து கொண்டு, அதற்கேற்ப செயல்படுகிறது. எனவே, பா.ஜ.,வை குற்றம் சுமத்துவது முறையற்றது. இவ்வாறு, ராதாகிருஷ்ணன் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
தமிழக பாஜக தலைவர் சொல்லியிருக்கும் ஒரு கருத்து குறிப்பிடத்தக்கது. முதல்வர் சொல்வது போல கர்நாடகாவில் பாஜக மட்டுமல்ல, எல்லா கட்சிகளும் சேர்ந்து நிற்கின்றன, காவிரி பிரச்னை மட்டுமல்ல, ஏதாவது மக்கள் பிரச்னைகளில் தமிழக கட்சிகள் ஒற்றுமையாக ஒருங்கிணைந்து போராடியதுண்டா? அதற்கான வாய்ப்பினை ஆளும் கட்சிதான் கொடுத்ததுண்டா? அரசியல் வேறுபாடுகளை தேர்தலோடு நிறுத்தி விட்டு, ஏதோ குடும்ப விரோதிகள் போல் செயல் படாமல், மக்கள் பிரச்னைகளுக்காக, அனைத்து தலைவர்களும் ஒற்றுமையாக செயல் பட்டால் தான் மத்திய அரசு செவி சாய்க்கும். செவி கொடுப்பாரா நமது முதல்வர்?
காவிரியில் தண்ணீர் விடவில்லை என்று பாயும் அரசியல் கட்சிகளும் விவசாய அமைப்புகளும் இருக்கும் தண்ணீரை பயன்படுத்த முறையான ஏற்பாடுகள் உள்ளனவா என்பதை மனசாட்சியுடன் சிந்திக்க வேண்டும். இரு தினங்கள் முன்பு தொட்டியம் முதல் திருச்சி வரை பேருந்தில் வர வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்பொழுது சாலையின் இருபுறமும் பார்த்து கொண்டே வந்தபொழுது காவிரியிலிருந்து பிரியும் வாய்க்கால்கலின் இருபுறமும் மண்சரிந்து குறுகியும் நீர் போக்குக்கு தடை ஏற்படும் வகையில் இருப்பதையும் சில பகுதிகளில் ஆகாய தாமரை கொடிகள் படர்ந்து நீர் ஓட்டத்தை தடை செய்தும் இருக்கும் நிலையினை கண்டு அதிர்தேன். அமைச்சாராக இருந்த T.S.S. ராஜன் அவர்களால் ஏற்படுத்தப்பட்டு அவர்கள் பெயரில் அழைக்கப்படும் வாய்க்காலின் தற்பொழுதைய நிலையோ பரிதாபம். .இதே போன்ற நிலைதான் தஞ்சை மாவட்டத்திலும் உள்ளது இதனை சரி செய்ய வேண்டிய பொதுப்பணித்துறையோ அடிப்படை பணியல்லாது வேறு பணியில் ஈடுபட்டுள்ளது. . இந்த நிலையில் காவிரியில் இருந்து வாய்க்கள் மூலம் வயல்களுக்கு எப்படி பாசனம் செய்யபடுகிறது என்பது ஆச்சர்யம். ஈரோடு மாவட்டத்தில் கீழ் பவானி அணைக்கட்டிலிருந்து தண்ணீர் செல்லும் வாய்க்கால்கள் அனைத்தும் சிமெண்ட் பூச்சுடன் உள்ளதால் நீர் எந்த வித சேதாரமும் இல்லாமல் பாசனத்திற்கு பயன் படுவதையும் பார்த்துள்ளேன். அதே போன்று மேட்டுர்லிருந்து பாசனத்திற்கு திறந்து விடப்படும் நீர் சிக்கனத்துடன் பயன்படுத்த எதுவாக வாய்க்கால்கள் அனைத்தும் நவீன படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு கிடைக்கும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும் நிலை இல்லை என்றால் எதிர்காலத்தில் டெல்டா மாவட்டத்திற்கு தண்ணீர் கிடைப்பது என்பது குதிரை கொம்புதான்.
சீனாவை உதாரணம் காட்டினால் கருத்து பதிப்பதில்லை. இருந்தாலும் கூறுகிறேன் கேளுங்கள், கருத்து கூறும் கடமையை செய்து விடுகிறேன் முதலில். தண்ணீர் அதிகம் இருந்தும் யாங் சி நதி நீர் பாயும் டெல்டா பகுதிகளில் கூட பல இடங்களில் வயல்களுக்கு மிக சிறிய சிமென்ட் கால்வாய் அமைத்து ஒவ்வொரு வயலுக்கும் (உரியவர்களுக்கு) பைப் கனக்ஷன் கொடுத்துள்ளார்கள். கூடவே தண்ணீர் மீட்டர். தண்ணீர் மீட்டர், கட்டணம் எதுக்கென்றால் விவசாயிகள் ஊரான் .....................வேலியில் .................கூடாதென்பதற்காக. கட்டணம் என்று ஒன்று வைத்தால் தான் எதையும் அளவாக எதையும் உபயோகிப்பார்கள். ...
சமிபகாலமாக பல வாசகர்களின் கருத்து நடுநிலையாகவும் ,தெளிவாகவும் உள்ளது ..யார் மீது குற்றம் இருந்தாலும் அவர்களை விமர்சனம் செய்ய நமக்கு உரிமை உள்ளது ...ஆனால் அது நடுநிலையாக இருக்க வேண்டும் ...பத்திரிக்கை தான் அதன் செயலை செய்யமுடியவில்லை ( மான நஷ்ட வழக்கு பாயும் ) நாமளும் இந்த அரசாங்க குறைகளை சுட்டிக்காட்டவில்லை என்றால் ஜனநாயகம் இந்த அரசாங்கத்தின் காலடியில் சென்றுவிடும் ....தி மு க வோ ,ஆ தி மு க வோ நமது பார்வை எதிர்கால தேச நலனை காக இருக்கவேண்டும் ...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.