idha padinga mudhalla | "ஜூலி... ஐ லவ் யூ...' காதல் பள்ளி துவக்குகிறார் பேராசிரியர் | Dinamalar
Advertisement
"ஜூலி... ஐ லவ் யூ...' காதல் பள்ளி துவக்குகிறார் பேராசிரியர்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பாட்னா : பீகாரில், கல்லூரி மாணவியை காதலித்து திருமணம் செய்ததால், வேலையிலிருந்து நீக்கப்பட்ட, 60 வயது பேராசிரியர், காதல் பள்ளிக்கூடம் துவக்கும் நடவடிக்கையில், மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.


பாட்னா பல்கலைக் கழக கட்டுப்பாட்டில் உள்ள, பி.என்.கல்லூரியில், இந்தி பேராசிரியராக பணியாற்றியவர், மதுக் நாத், 53. அவர் வகுப்பில் படித்த, 23 வயது, ஜூலி என்ற மாணவியை, காதலித்து வந்தார். இந்த தகவல், 2006ம் ஆண்டு வெளியே தெரிய வர, "மகள் வயதில் இருந்த மாணவியுடன் காதலா?' என, கொதித்த மாணவர்களும், சக பேராசிரியர்களும், மதுக் நாத்தை அடித்து துவைத்தனர். இந்த விவகாரம் அப்போது, நாடு முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.


எனினும், மாணவி ஜூலி மீதான காதலை மட்டும், பேராசிரியர் மதுக் நாத், கைவிடவில்லை.
இதனால், 2009ம் ஆண்டு, கல்லூரியில் இருந்து அவர், "டிஸ்மிஸ்' செய்யப்பட்டார். ஏற்கனவே திருமணமான மதுக் நாத், பிறகு, ஜூலியை திருமணம் செய்து கொண்டார். இப்போது, 60 வயதாகும் மதுக், தன் காதல் மனைவியுடன், பாட்னாவில், இன்பமாக வாழ்க்கை நடத்தி வருகிறார். காதலர் தினத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம், ஏராளமான காதலர்களும், பத்திரிகையாளர்களும், மதுக் நாத்தை சந்தித்தனர்.


அப்போது அவர் கூறியதாவது: நான் ஏற்கனவே திருமணம் ஆனவன் தான். மகள் வயதில் மாணவியை காதலித்தது தவறு தான். காதலுக்கு கண் இல்லையே... காதலித்து விட்டேன்; ஜூலியை மணந்தும் கொண்டேன். நான் செய்தது தவறு என தெரிவித்து, கல்லூரியிலிருந்து என்னை, "டிஸ்மிஸ்' செய்தனர். கணக்கை முடித்து, பி.எப்., மற்றும் பிற பலன்களுக்கான தொகை, சில நாட்களுக்கு முன் தான் வந்தது. காதலர் தினத்தன்று, என் உயிர் காதலி, ஜூலிக்கு, கார் பரிசு வழங்க வேண்டும் என, நினைத்தேன். குறிப்பிட்ட ஒரு மாடல் காரையே, பரிசாக வழங்க நினைத்திருந்தேன். அதே காரையே, ஜூலியும் விரும்பியிருந்தது, எனக்கு பிறகு தான் தெரிய வந்தது. நானும், ஜூலியும் மகிழ்ச்சியாக வாழ்கிறோம்.


கடந்த சில ஆண்டுகளாகவே, 15 லட்ச ரூபாய் செலவழித்து, என் சொந்த ஊரான, பாகல்பூரில், காதல் பள்ளிக் கூடம் கட்டி வருகிறேன்; விரைவில் துவக்க உள்ளேன். அந்த பள்ளியில், காதலின் மகத்துவம் குறித்து, அனைத்து வயதினருக்கும் கற்று கொடுக்க உள்ளேன். இவ்வாறு, பேராசிரியர் மதுக் நாத் கூறினார். அப்போது அருகில் இருந்த, காதல் மனைவியான மாணவி, ஜூலி, கணவரான பேராசிரியரை, கண்கொட்டாமல் பார்த்து, ரசித்து கொண்டிருந்தார்.


Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (15)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சிறிலங்கன் - Dammam,சவுதி அரேபியா
18-பிப்-201310:58:10 IST Report Abuse
சிறிலங்கன் சுவையாகச் சொன்னால்...டீனேஜ் முடியுமாம் (23) ல்....டீனேஜ் ஆரம்பிக்குமாம் 60 ல்... இரண்டும் இணைந்துள்ளது...
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
G.SUBRAMANIAN.KUMBAKONAM - KUMBAKONAM ,இந்தியா
16-பிப்-201316:11:06 IST Report Abuse
G.SUBRAMANIAN.KUMBAKONAM சரி உங்களுக்கு தான் அறிவு இல்லை ...................அந்த பெண்ணுக்கு .......எங்கு போச்சு ...........அறிவு ........இது கல்வியின் மீது ஏற்பட்ட காதலா..............
Rate this:
7 members
0 members
18 members
Share this comment
PPA - Maryland,யூ.எஸ்.ஏ
16-பிப்-201317:15:57 IST Report Abuse
PPAஎல்லோரும் நம்மை போல் சிந்திக்க வேண்டும் என நினைப்பது தவறு. காதலுக்கு கண் இல்லை என்பது உண்மையே. அந்த பெண்ணை வாழ்த்த கற்று கொள்ளுங்கள்....
Rate this:
9 members
0 members
9 members
Share this comment
LAX - Trichy,இந்தியா
17-பிப்-201320:05:13 IST Report Abuse
LAXசாகப்போகும் வயதில் ஒன்றுமறியா பிஞ்சுக்குழந்தையை பலாத்காரம் செய்யும் கயவர்கள் இருக்கும்போது, இவர் விவரமான கல்லூரி மாணவியைத்தானே காதலித்தார்? அவ்வை சண்முகியில் வரும் ஜெமினி கணேசன் மாதிரியே "அன்பு 50 60 ஆனா போதும் மலரும்" என்பதை தவறாகப் புரிந்துகொண்டாரோ? போகட்டும் விடுங்கள்....
Rate this:
0 members
1 members
3 members
Share this comment
Cancel
manikandan - chennai,இந்தியா
16-பிப்-201314:25:31 IST Report Abuse
manikandan இந்த செய்தி முக்கியத்துவம் தர வேண்டுமா ?
Rate this:
1 members
0 members
16 members
Share this comment
Cancel
Mohamed Nawaz - Sakaka,சவுதி அரேபியா
16-பிப்-201314:22:09 IST Report Abuse
Mohamed Nawaz அடுத்த படத்துக்கு கதை கிடைச்சிருச்சு, தமிழில் காதல்ரூபம், மலையாளத்தில் கொலேஜ் மாஷேயின் ப்ரேமம், ஹிந்தி தெலுங்கு என எல்லா மொழிகளிலும் ஹாலிவூட் ரேஞ்சுக்கு எடுத்து கலக்க போகிறார் பவர் ஸ்டார். பின்னே டுர்ர்ர்ர்ர்
Rate this:
1 members
1 members
21 members
Share this comment
GURU.INDIAN - beiruth,லெபனான்
16-பிப்-201315:44:11 IST Report Abuse
GURU.INDIANஅட விடுங்கப்பா பல்லு இருக்குறவன் பக்கோடா திங்குறான் உங்களாலே முடியலையா ?...
Rate this:
4 members
0 members
34 members
Share this comment
Cancel
Guru - Batam,இந்தோனேசியா
16-பிப்-201312:38:01 IST Report Abuse
Guru செய்த கயவாளிதனத்த என்னாமா பில்டப் பண்ணி சொல்லுரான்பா
Rate this:
4 members
1 members
25 members
Share this comment
Cancel
pandian - Abu Dhabi.,ஐக்கிய அரபு நாடுகள்
16-பிப்-201312:13:08 IST Report Abuse
pandian இந்தியா எங்கேயோ போயிருச்சு.
Rate this:
2 members
0 members
6 members
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
16-பிப்-201311:15:25 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் ஊரின் பெயரும் பாகல்பூர்...சரிதான் போச்சு..
Rate this:
1 members
0 members
20 members
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
16-பிப்-201310:56:42 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் எனக்கு 53 உனக்கு 23..எப்பிடி படத்துக்கு தலைப்பு?
Rate this:
1 members
0 members
22 members
Share this comment
Cancel
suresh - kudanthai,இந்தியா
16-பிப்-201310:22:00 IST Report Abuse
suresh காதல் பள்ளிகூடத்தில் என்ன சொல்லி குடுபிங்க?
Rate this:
1 members
0 members
8 members
Share this comment
Cancel
m.s.kumar - chennai,இந்தியா
16-பிப்-201309:34:40 IST Report Abuse
m.s.kumar அய்யா மன்மத குஞ்சு , காதல் பெயரில் காமத்தை வளர்க்காமல் இருந்தால் சரி
Rate this:
0 members
1 members
23 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்