Real Story | அப்போ ஆட்டோ ஓட்டுநர், இப்ப வழக்கறிஞர்... வெங்கடலட்சுமியின் சாதனைக்கதை - எல்.முருகராஜ்| Dinamalar

அப்போ ஆட்டோ ஓட்டுநர், இப்ப வழக்கறிஞர்... வெங்கடலட்சுமியின் சாதனைக்கதை - எல்.முருகராஜ்

Added : பிப் 16, 2013 | கருத்துகள் (24)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
அப்போ ஆட்டோ ஓட்டுநர், இப்ப வழக்கறிஞர்... வெங்கடலட்சுமியின் சாதனைக்கதை - எல்.முருகராஜ்

பெங்களூரு தேவசங்கரி நகர் பகுதியில் இருந்து வெளிவருகிறது ஒரு ஆட்டோ, அந்த ஆட்டோவை ஒட்டிவருகிறார் ஒரு பெண். மலர்ந்த கண்களும், சிரித்த முகமும் கொண்ட அந்த பெண்ணைப் பார்த்து பலரும் வாழ்த்து தெரிவிக்கின்றனர். பதிலுக்கு அவரும் நன்றி தெரிவித்தபடி தனது பயணத்தை தொடர்கிறார்.

இவரது இந்த ஆட்டோ ஒட்டுனர் பணி இந்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது. அடுத்த மாதம் முதல் இவர் காக்கி சீருடையை கழட்டிவைத்துவிட்டு கறுப்பு கவுனை மாட்டிக்கொண்டு கோர்ட்டிற்கு சென்று வாதாடப்போகிறார்.

ஆம்... ஆட்டோ டிரைவர் வெங்கடலட்சுமி, வழக்கறிஞர் வெங்கடலட்சுமியாகிறார்.
இது ஒன்றும் ஒரு நாள் கதை அல்ல அவரது மனதிற்குள் விழுந்த பலநாள் விதை.

எளிய குடும்பத்தைச் சேர்ந்த வெங்கடலட்சுமிக்கு, டிகிரி முடித்த கையோடு திருமணம் ஆகிவிட்டது. கணவர் வெல்டிங் வேலை செய்பவர். திருமணத்திற்கு சாட்சியாக ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.
பெண் குழந்தையை நல்லதொரு பள்ளியில் சேர்த்தார், படிப்பு செலவு அதிகமானது, கணவரது வருமானம் போதவில்லை, தனக்கு தெரிந்த சமையல் வேலையை மேற்கொண்டார். ஐம்பது, நூறு பேரின் தேவைக்கு, வீட்டிலேயே சமைத்து எடுத்துப்போய் கொடுத்து வருமானம் பார்த்து வந்தார். சமைத்த உணவுகளை எடுத்துப் போகவேண்டிய ஆட்டோ டிரைவர் பல சமயம் வராமல் போய் தொழிலில் சங்கடத்தை ஏற்படுத்தினார். இதன் காரணமாக இவரே ஆட்டோ ஓட்டுவது என்று முடிவு செய்தார்.


ஆட்டோ வாங்கியதும் பலரும் இவரது ஆட்டோவில் பயணம் செய்ய விருப்பப்படவே, சமையல் தொழிலை விட்டுவிட்டு ஆட்டோ ஓட்டுனராகி விட்டார். மீட்டருக்கு மேல் கட்டணம் வசூலிப்பது இல்லை. வாடிக்கையாளரிடம் சரளமாக ஆங்கிலத்தில் பேசுதல் போன்றவைகளால் இவருக்கு வாடிக்கையாளர் எண்ணிக்கை கூடியது.
இப்படியே சில வருடங்கள் ஓடியது இந்த நிலையில்தான் ஒரு நாள், ஐந்து பேர் கொண்ட ரௌடி கும்பல் இவரை தாக்கி, கடத்தி விபச்சார கும்பலிடம் விற்பதற்கு முயன்றது, மிகவும் போராடி அவர்களிடம் இருந்து தப்பிய வெங்கடலட்சுமி உடனே போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இவரது புகார் அங்கே கண்டுகொள்ளப்படவில்லை, நாளைக்கு வாம்மா, நாளைக்கு வாம்மா என்று அலைக்கழிக்கப்பட்டார், குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்பதில் தீவிரமாக இருந்த வெங்கடலட்சுமி வழக்கு பதிவு செய்ய மிகவும் சிரமப்பட்டார், கோர்ட்டில் வெங்கடலட்சுமி சார்பில் வாதாடிய வழக்கறிஞரின் வாதத்தில் உயிரே இல்லை, மேலும் இந்த வழக்கை கோர்ட்டிற்கு கொண்டு வருவதற்கே பதிமூன்று வருடங்களாகி விட்டது.
தன்னைப்போல எத்தனை அபலைப் பெண்கள் இப்படி சத்தில்லாத, உணர்வில்லாத, உயிரில்லாத வாதத்தால் மோசம் போய்க் கொண்டு இருக்கின்றனர் என்று உணர்ந்து அப்போதே தானும் ஒரு வழக்கறிஞராவது என்று முடிவு செய்தார்.

சட்டக்கல்வியை தபால் மூலம் படிப்பதால் பலன் இல்லை என்பதால் தனது 36வது வயதில் ரெகுலர் கல்லூரியில் சேர்ந்தார். காலை 8 மணியில் இருந்து மதியம் 2 மணிவரை கல்லூரி வாழ்க்கை பிறகு மதியம் 2 மணிமுதல் இரவு வரை ஆட்டோ ஒட்டும்பணி. ஆட்டோவிலேயே பாடபுத்தகங்களை வைத்திருப்பார், வாடிக்கையாளருக்காக காத்திருக்கும் நேரத்திலும், ஆட்டோவை ஓட்டாத நேரத்திலும் பாடபுத்தகங்களை படிப்பார். வீட்டிற்கு போனாலும் அன்றைய பாடக்குறிப்புகளை படித்து முடித்துவிட்டே தூங்கப் போவார்.
இப்படியான இவரது ஐந்து வருட படிப்பு வீண் போகவில்லை, நல்ல மார்க்குகள் எடுத்து வெற்றிகரமாக எல்.எல்.பி., படித்து முடித்தார், ஆனாலும் பார் கவுன்சில் எக்சாம் பாஸ் ஆனால்தான் கேஸ்களில் ஆஜராகமுடியும் என்ற நிலை, அந்த தேர்வையும் வெற்றிகரமாக முடித்ததன் எதிரொலியாக வருகின்ற மார்ச் மாதம் முதல் கோர்ட்டிற்கு வழக்கறிஞர் வெங்கடலட்சுமியாக செல்ல இருக்கிறார்.

ஒரு நியாயமான ஆட்டோ ஒட்டுனராக இருந்த நான் இனி நேர்மையான அதே நேரத்தில் சமூகத்தில் நீதி கிடைக்காத பெண்களுக்காக வாதாடும் வழக்கறிஞராக இருப்பேன் என்கிறார் உறுதியாக...

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
luckymalar - chennai,இந்தியா
02-ஏப்-201314:35:14 IST Report Abuse
luckymalar முதலில் சபாஷ் மேடம்........ இனி நீங்கள் எடுத்து வைக்கும் ஒரு ஒரு அடியும் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.......... நலவர்களுக்கு மட்டும் துணையாக இருக்க கடவுள் அருள் எப்போதும் துணை இருக்கட்டும்........ அன்புடன் சகோதரி............
Rate this:
Share this comment
Cancel
vasan - doha,கத்தார்
27-பிப்-201314:43:44 IST Report Abuse
vasan வாழ்துக்கள் மேடம்......ஆண்டவன் உங்களுக்கு உறுதுணையாக இருப்பான்........
Rate this:
Share this comment
Cancel
G.Krishnan - chennai,இந்தியா
23-பிப்-201311:55:29 IST Report Abuse
G.Krishnan சூழ்நிலை இவரை வழக்கறிஞராக ஆக்கிஇருக்கிரது. . . . .வைராக்கியத்துடன். .இவர் படித்து சமையல் செய்பவர் /ஆடோ ஓட்டுனர் வெங்கடலட்சுமி. . . . . வழக்கறிஞர் வெங்கடலட்சுமியாகி இருக்கிறார். . . . .படித்தால் மட்டுமே. . . .இதை சாதிக்க முடியும் என்பதை நிருபித்து இருக்கிறார் . . .படிப்பு . . .கல்வி. . . . அதன் முக்கியதுவத்தை உணர்த்தியதற்கு . . .நன்றி . . .. .இளய சமுதாயத்தினர் இதை புரிந்து கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தால். . .நாடு முன்னேறும் . . . நல்ல செய்தி
Rate this:
Share this comment
Cancel
Nambi - Dubai,இந்தியா
23-பிப்-201301:12:01 IST Report Abuse
Nambi விடா முயற்சி ,தன்னம்பிக்கை ,கடின உழைப்பு இவற்றின் உருவமாக இவரை நான் பார்க்கிறேன்.இவர் மகத்தான சாதனை படைப்பார்
Rate this:
Share this comment
Cancel
selva - trichy,இந்தியா
22-பிப்-201314:55:43 IST Report Abuse
selva வாழ்த்துக்கள் மேடம்
Rate this:
Share this comment
Cancel
RAJA.A.R FOREVER - Ad Doha,கத்தார்
21-பிப்-201309:31:37 IST Report Abuse
RAJA.A.R FOREVER my heartly wishes madam......hard work,honest,sincere never fails.....many peoples proved & u too joined those list
Rate this:
Share this comment
Cancel
MICHAEL RAJ.A - bangalore,இந்தியா
20-பிப்-201310:57:52 IST Report Abuse
MICHAEL RAJ.A வெற்றி பெற வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
vayalum vazhvum-saravanakumar - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
19-பிப்-201316:49:01 IST Report Abuse
vayalum vazhvum-saravanakumar சக்திக்கு நிகர் வேறு என்ன உண்டு, அதனால் தான் பெண்மையை சக்தியின் வடிவாக பார்கின்றனர், தாங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
Wilsonsam Sp - bobigny,பிரான்ஸ்
19-பிப்-201315:40:23 IST Report Abuse
Wilsonsam Sp எம்மா இந்த கேடுகெட்ட நாட்டில் பிறந்த இனிதான் நீ தைரியமா இருக்கனும் நம் நாட்டில் தினமும் கற்பழிப்பு நடக்கிறது
Rate this:
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - hyderabad,இந்தியா
19-பிப்-201306:47:40 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே வாழ்த்துக்கள் வேங்கடலெட்சுமி , ஜெய் பராசக்தி. ஒரு வேண்டுகோள் தயவு செய்து அரசியல் வாதிகளுக்கு மாத்திரம் கோர்டில் ஆஜராக மாட்டேன் என்று சபதமும் செய்து கொள்ளுகள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை