விழியிழந்த வாலிபரை கைபிடித்து தேர்வெழுத அழைத்து வந்த கால்இழந்த பட்டதாரி மாணவர்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

காரைக்குடி :டி.என்.பி.எஸ்.சி., குரூப் -1 முதல்நிலை தேர்வில், பங்கேற்க வந்த, பார்வை இல்லாத மாணவரை, கால்களை இழந்த மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் அழைத்து வந்தது, மனித நேயத்தை மலரச் செய்வதாக இருந்தது.

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1, முதல்நிலை தேர்வு, காரைக்குடியில், அழகப்பா அரசு கலைக்கல்லூரி, இன்ஜி., கல்லூரியில் நேற்று நடந்தது. இன்ஜி., கல்லூரியில் 400 பேரில், 250 பேரும், அரசு கலை கல்லூரியில் 347 பேரில் 181 பேரும் தேர்வு எழுத வந்து இருந்தனர். மேற்பார்வையாளர்களாக முதன்மை கண்காணிப்பாளர்கள் ராஜேந்திரன், வைரவன் செயல்பட்டனர். தேர்வெழுத வந்திருந்த விழியிழந்த பி.எட்., மாணவர் முத்துக்குமாரை, அவரது நண்பரும், கால் இழந்த மாற்றுத்திறனாளி மாணவருமான கே.ராஜா, தனது மூன்று சக்கர வாகனத்தில் அழைத்து வந்தார்.

முத்துக்குமார் கூறுகையில், ""சாதாரண விவசாய குடும்பத்தில், பிறந்த நான், இந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறேன் என்றால், என் தாய், தந்தையரும், நண்பர்களுமே காரணம். தற்போது, அழகப்பா கல்லூரியில், பி.எட்., படித்து வருகிறேன். பாடங்களை "பிரெய்லி' முறையிலும், மாணவர்கள் சொல்வதை கேட்டும், சி.டி.,க்கள் வாயிலாகவும் படித்து வருகிறேன். கண்டிப்பாக இத்தேர்வில்,வெற்றி பெறுவேன். பார்வை இழந்த எனக்கு பார்வையாக இருப்பவர்கள் என் நண்பர்கள், என்றார்.

கே.ராஜா,மாற்றுத்திறனாளி: முத்துக்குமார் நன்கு படிப்பார். நான் மட்டுமல்ல, என்னுடன் பயிலும் அத்தனை மாணவர்களும், முத்துக் குமாருக்கு உதவி செய்வோம். எங்கள் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும், என்றார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (12)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ganesh Selva - Chennai,இந்தியா
19-பிப்-201315:22:38 IST Report Abuse
Ganesh Selva நீங்கள் வெற்றிபெற என் மனதார்ந்த வாழ்த்துக்கள் நண்பா..
Rate this:
Share this comment
Cancel
Minibala - Chennai,இந்தியா
18-பிப்-201314:06:10 IST Report Abuse
Minibala உங்களது விடா முயற்சிக்கு எனது அன்பான வாழ்த்துக்கள். தங்கள் வெற்றிக்கு கடவுள் துணை புரிவார்
Rate this:
Share this comment
Cancel
Ashok ,India - India,இந்தியா
18-பிப்-201313:50:15 IST Report Abuse
Ashok ,India பார்வை இல்லாத இது போன்ற மாணவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கி சமபளம் மற்றவர்களை விட 50 சதவீதம் கூடுதலாக வழங்கினால் இது போன்ற மாணவர்களுக்கு வாழ்க்கையாவது பிரகாசமாக தெரியட்டும். அது போல கை,கால் பாதிக்கப்பட்டோர் அரசு வேலைக்கு சேர்ந்தால் சம்பளம் 20 சதவீதம் அதிகமாக வழங்க அம்மா அவர்கள் அணையிட வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
nallusamy - thathiengarpet,இந்தியா
18-பிப்-201313:07:16 IST Report Abuse
nallusamy உழைப்பையும்,உண்மையான நட்பையும் நுகர வாய்ப்பளித்த தினமலருக்கு நன்றிகள்.முத்துக்குமார் & ராஜா மென்மேலும் முன்னேற வாழ்த்துகள்.
Rate this:
Share this comment
Cancel
Sathathulla Thulla - DEVAPANDALAM
18-பிப்-201311:00:46 IST Report Abuse
Sathathulla Thulla வாழ்த்துக்கள் நிச்சயம் வெற்றி கிடைக்கும்...
Rate this:
Share this comment
Cancel
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
18-பிப்-201301:25:53 IST Report Abuse
GOWSALYA உங்களுக்கும் நட்புக்கும் வணங்குகிறோம் நண்பர்களே ...இதைவிட சொல்ல வார்த்தையில்லை.
Rate this:
Share this comment
Cancel
Mustafa - Dammam,சவுதி அரேபியா
17-பிப்-201314:44:53 IST Report Abuse
Mustafa பாராட்ட வார்த்தையில்லை, இலக்குகளை விரித்துக்கொண்டு மென்மேலும் முன்னேறிச்செல்லுங்கள் நண்பர்களே
Rate this:
Share this comment
Cancel
sami annachi - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17-பிப்-201314:00:01 IST Report Abuse
sami annachi இவர்களை இந்த சமுதாயம் தான் மாற்று கண் கொண்டு பார்க்கிறது. ஆனால் இவர்களுக்குள் நிறைய திறமைகள் ஒளிந்துகொண்டு இருகின்றன. இவர்களை அரசும் மக்களும் கண்ணியத்தோடு பார்க்கவேண்டும். அரசு ஊழியர்கள் சில இடங்களில் இவர்களை அலச்சிய படுத்துகிறார்கள் மிகவும் வருத்தம் அளிக்கிறது
Rate this:
Share this comment
Cancel
ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா
17-பிப்-201313:46:26 IST Report Abuse
ஆனந்த் பார்வை இல்லாதவருக்கு பல கண்கள்.. நடக்க இயலாதவருக்கு பல கால்கள்.. உலகம் அமைதியாக சுழல இதுவும் ஒரு காரணம்
Rate this:
Share this comment
Cancel
sundar iyer - chennai,இந்தியா
17-பிப்-201309:29:08 IST Report Abuse
sundar iyer நாட்டில் இன்னும் மனிதாபிமானம் சாகவில்லை என நிரூபனம் ஆகியுள்ளது. இவர்களை போல் உள்ளவர்கள் தான் நம்முடைய அப்துல கலாம் சொல்வது போல் வருங்கால தூண்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்