National conference about heritage buildings | பாரம்பரிய கட்டடங்கள் குறித்த தேசிய கருத்தரங்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாரம்பரிய கட்டடங்கள் குறித்த தேசிய கருத்தரங்கம்

Added : பிப் 16, 2013

சென்னை :"இந்தியாவின் நாகரிகம், சென்னையில் இருந்து தான் துவங்கியது. ஆனால், இங்குள்ள பாரம்பரியமிக்க கட்டடங்கள் பராமரிக்கப்படுவதில்லை' என, கட்டட கலை குறித்த தேசிய கருத்தரங்கில், அறிஞர்கள் கருத்து தெரிவித்தனர்.

கட்டட கலைக்கான கல்வி நிறுவனமான, "மிடாஸ் ' சார்பில், சென்னையில் உள்ள பாரம்பரியமிக்க இந்திய - அரேபிய கட்டட கலை குறித்த, ஒரு நாள் தேசிய கருத்தரங்கம், கொட்டிவாக்கத்தில் நேற்று நடந்தது.இதில், சிறப்பு விருந்தினர்களாக, ஆற்காட் நவாப் குலாம் முகமது அப்துல் அலி பகதூர், தட்சின்சித்ரா நிறுவனர் டெபோரா தியாகராஜன், சென்னை நகர் வரலாற்று ஆசிரியர் முத்தையா, மிடாஸ் இயக்குனர் ஜாபர் ஏஏ கான் ரிபா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அவர்கள் கூறியதாவது:சென்னை நகரில், 450க்கும் மேற்பட்ட பாரம்பரியம் மிக்க கட்டடங்கள் உள்ளன. அவை அழிந்து போகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன. சென்னை, வால்டாக்ஸ் சாலையில் உள்ள கல்சா மஹாலும், மெரீனா வாலாஜா சாலையில் உள்ள ஹுமாயுன் மஹால் ஆகியவை, 1798ம் ஆண்டு கட்டப்பட்டவை.இவை போல, நூற்றுக்கணக்கான கட்டடங்கள் சென்னை பாரம்பரியத்தின் அடையாளங்கள். இந்தியாவின் நாகரிகம் துவங்கிய இடம், சென்னையில் தான். ஆனால், இங்குள்ள பாரம்பரியமிக்க கட்டடங்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை. இன்றைய இளைய தலைமுறையினர் சென்னையின் பாரம்பரியத்தை பற்றி தெரிந்துக் கொள்ள முடிவதில்லை.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X