கட்சிப் பதவிகள் தொடர்பாக, வாரிசுகளுக்கு மத்தியில் நடக்கும் பனிப்போருக்கு முற்றுப்புள்ளி வைக்க, நடிகை குஷ்புவை துருப்புச்சீட்டாக, தி.மு.க., தலைவர் கருணாநிதி கையில் எடுத்துள்ளாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. லோக்சபா தேர்தலில், வாரிசுகளின் கோஷ்டி சண்டையால், கட்சி வேட்பாளர்களின் வெற்றி பாதிக்கக் கூடாது என்பதற்காக, தி.மு.க., துணை தலைவர் பதவியை ஸ்டாலினுக்கும், பொருளாளர் பதவியை மத்திய அமைச்சர் அழகிரிக்கும், துணைப் பொதுச்செயலர் பதவி யை கனிமொழிக்கும் பிரித்துக் கொடுக்க, கருணாநிதி தரப்பில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆயுட்காலம் முடியும் வரை:
கனிமொழிக்கு பதவி :
லோக்சபா தேர்தலில், வாரிசுகளின் கோஷ்டி சண்டையால், கட்சி வேட்பாளர்களின் வெற்றி பாதிக்கக் கூடாது என்பதற்காக, ஸ்டாலினுக்கு துணை தலைவர் பதவியும், அழகிரிக்கு பொருளாளர் பதவியும், கனிமொழிக்கு துணை பொதுச் செயலர் பதவியும் வழங்குவதற்கு, கருணாநிதி தரப்பில் ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது. கட்சி பதவிகள் முழுவதும் குடும்பத்தினருக்கே வழங்கப்பட்டு விட்டது என்ற விமர்சனம் எழுந்து விடாமல் இருக்கும் வகையில், ஒவ்வொருவருக்கும் படிப்படியாக பதவிகள் வழங்கப்படவுள்ளது. குஷ்புவை ஓரங்கட்டி வைக்க வேண்டும் என்பதில் வாரிசுகளின் குடும்பத்தினர் ஒருமித்த கருத்துடன் உள்ளனர். எனினும், ஸ்டாலினை விமர்சித்த குஷ்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குடும்பத்தினரின் வலியுறுத்தலையும் கருணாநிதி கண்டுகொள்ளவில்லை. மாறாக, குஷ்புக்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, கருணாநிதி எச்சரிக்கை விடுத்தார்.
நடிகர் வடிவேலு ஒதுங்கல் :
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
MGR was accused of being the reason for the rise of karunanithee.Yes,it is true that because of MGR only Karunanithee was elected as the CM.At the same time when MGR found Karunanithee derailing he got him removed and made sure that Karuna never came back.Shamelessly Karuna tried all his tricks when MGR was getting treatment at USA then also Karuna failed. known the colour of Karunanithee let us decide come what may He or any of his family (of all kinds) are not tobe voted.
கட்சி தலைமை மற்றும் பிற முக்கிய பதவிகள்,அதிகாரம் எல்லாம் மஞ்சள் துண்டு குடும்பத்திற்கு என்ன நிரந்தர பட்டா போட்டு கொடுத்து இருக்கிறார்களா? தலைமை பதவி குறித்து கருத்து கூற குஷ்புவிற்கு உரிமை இல்லையா ? குஷ்புவின் மாற்று சிந்தனைக்கு கட்சியில் உள்ள சிந்திக்க கூடிய பகுத்தறிவு உள்ள எல்லோரும் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும். அப்பாவி உடன்பிறப்புகளின் உழைப்பையும்,ரத்தத்தையும் உறிஞ்சி ஒரு குடும்பம் மட்டும்,பதவி அதிகாரம் அனுபவித்து வருகிறது என்பது தான் உண்மை.மவனே குஷ்புவை குறித்து தவறாக பேசுபவர்கள்,தாக்குபவர்களுக்கு கட்சின் உடன்பிறப்பு,தொண்டர்கள் சார்பில் வன்மையாக கண்டனம் தெரிவிக்கிறோம். அண்ணா கண்ட கனவினை நிறைவேற்ற குஷ்பு புதிய தலைமை தான் கட்சிக்கு இன்று தேவை. குஷ்பு நமிதா தலைமையில் புத்துயிர் கொடுத்து,ஒரு ஒளிமயமான எதிர்காலத்தை காண்போம் மஞ்சள் துண்டு கும்பல் கொஞ்ச ஆண்டுகள் ஒதுங்கி இருக்கட்டும்.உடன்பிறப்பே கிளு கிளுப்பான எதிர்காலம் காத்து கொண்டு இருக்கிறது.வெற்றி உறுதி
கலைஞர் குஷ்பூவை துருப்புதசீட்டாக பயன்படுத்தவேண்டியதில்லை, ஏனென்றால் தி.மு.(க) விற்கு குஷ்பூ மிகப்பெரிய உறுப்புசீட்டு... தி.மு.(க) விற்கு அவரே பெரிய கருப்பு சீட்டு, காரியம் முடிந்தவுடன் அவர் செருப்புசீட்டு, இதில் வேறு யாருக்கும் இல்லை மறுப்புசீட்டு, கஞ்சாநெஞ்சனின் விருப்பசீட்டு , தலைவலியின் வேருப்புசீட்டு .
திராவிட முன்னேற்ற கழகத்தை அண்ணா துவக்கிபோதும் சரி, அதன் பின் கட்சியை வளர்க்கும் போதும் சரி எவ்வளவோ பிரச்சினைகள் இருந்தன, ஏற்பட்டன, அதையெல்லாம் தாங்கிக்கொண்டு, தடைகளையெல்லாம் தாண்டி, உள்குத்துக்களைஎல்லாம் உள்வாங்கி, எத்தனை எத்தனை போராட்டங்களைஎல்லாம் சந்தித்து, கட்சியை வேகமாக வளர்த்தார். அண்ணா எப்படியெல்லாம் கட்சியை வளர்த்து, அழிக்கமுடியாத அளவுக்கு உருவாக்கினார் என்பதெல்லாம் இன்றைக்கு நிறைய பேருக்கு தெரியக்கூட தெரியாது. இன்றைய இளைஞ்சர்கள், குறிப்பாக தி.மு.க வில் உள்ள இளஞ்சர்கள், தி.மு.க தோன்றிய வரலாறு, வளர்ந்த வரலாறு, அண்ணாவும் மற்ற மற்ற தலைவகளும் பட்ட கஷ்டங்கள் , காங்கிரஸ் தலைவர்களின் அடக்குமுறைகளை எப்படியெல்லாம் எதிர்கொண்டார்கள் என்பதையெல்லாம் படித்து அறிந்தார்களானால், கருணாநிதி யார், கருணாநிதி எப்படியெல்லாம் தி.மு.க வை சின்னாபின்னபடுத்தி, சீரழித்துள்ளார் என்பதெல்லாம் எளிதாக புரியும், அப்படி புரிந்து கொண்டார்களானால், கருணாநிதி பின்னால் போவதையும், கருணாநிதி குடும்பத்துக்கு காவடி தூக்குவதையும் அவமானமாக கருத தொடங்கிடுவர். அண்ணா ஒன்றும் கட்சி தொடங்கி , இன்றைக்கு குடும்ப கட்சிகளாக நடத்திக்கொண்டு இருக்கின்றார்களே சிலர் அது போல கோடிகளை கையில் வைத்து கொண்டு கட்சி நடத்தவில்லை. கொள்கையை மட்டுமே நம்பி , அந்த கொள்கைகளுக்காக தன் பின்னால் அணிதிரண்ட ஆயிரக்கணக்கான தொண்டர்கள், தொண்டர்கள் என்பது கூட சரியாக இருக்காது , ஆயிரக்கணக்கான தம்பிகளை நம்பி , தமிழக மக்களின் உரிமைகளுக்காக குரல்கொடுத்து , தமிழக மக்களின் நல்வாழ்வுக்காக, மத்தியில் ஆண்டு கொண்டு - தமிழகத்தை வஞ்சித்து கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியிடமிருந்து உரிமைகளை பெற போராடினார். வட மாநிலத்துக்கு அதிக சலுகைகள் , அதிக நிதியாதாரங்கள், அதிக தொழிற்கூடங்கள் என்று செய்துகொண்டு, தென் மாநிலங்களின் வளர்ச்சிக்காக அதிக அளவில் எந்தவொரு திட்டங்களையும் தீட்டாமல் மத்திய காங்கிரஸ் அரசு நேரு காலத்திலேயே வஞ்சித்து வந்தது தான் அண்ணா அவர்களின் கண்டன பேச்சுக்களில் முதன்மையானவையாக இருந்தன அந்நாட்களில். மத்திய அரசு தமிழகத்தை எப்படியெல்லாம் வஞ்சிக்கின்றது என்பதை விலாவாரியாக , புள்ளிவிவரங்களுடன் , ஆதாரபூர்வமாக எழுதியும் ,பேசியும் வந்தார் அண்ணா. ஆட்சி அதிகாரத்தை தன்னிடம் வைத்துள்ள காங்கிரஸ் கட்சி , அதுவும் மத்தியிலும் மட்டுமல்ல மாநிலத்திலும், சும்மா இருப்பார்களா?. எப்படி எப்படியெல்லாம் அண்ணாவுக்கும், கட்சிக்கும், மற்ற முன்னணி தலைவர்களுக்கும் தொல்லைகள், இடைஞ்சல்கள் கொடுக்க முடியுமோ அவ்வளவையும் தந்தார்கள். அண்ணாவையும் மற்ற மற்ற தலைவர்களையும் எள்ளி நகையாடினார்கள், தூற்றினார்கள், மூடர்கள் என்றெல்லாம் பேசினார்கள். அண்ணா இதற்கெல்லாம் கொஞ்சமும் அஞ்சவில்லை, என்னை எப்படி வேண்டுமானாலும் திட்டி கொள்ளுங்கள், எப்படிவேண்டுமானாலும் அர்ச்சியுங்கள், எவ்வளவு கீழ்த்தரமாக பேச முடியுமோ பேசுங்கள் ஆனால் , தமிழகத்தின் உரிமைக்காக குரல் கொடுப்பதை மட்டும் உங்களால் ஒடுக்கவே முடியாது என்று ஆணித்தரமாக பேசியும் , எழுதியும் வந்தார். தமிழ் மொழியின் மீது அளவுகடந்த பற்று , பாசம் கொண்டிருந்த அண்ணா அவர்கள் தமிழ் மொழிக்காகவும் பலமாக குரல் கொடுத்து வந்தார். தமிழின் வளத்தை, எழிலை, நீண்ட பாரம்பரியத்தை , சொல்லழகை, நடையழகை எல்லாம் புதிய கோணத்தில் எடுத்தியம்பி வந்தார். அண்ணா பின்னால் அணிதிரண்டோரின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கானோர் என்பது, பல்லாயிரக்கணக்கானோர் என்றும் அதுவே ஒருசில ஆண்டுகளில் பல லட்சமாகவும் கூடியது. பல லட்சகணக்கான தம்பிகளை அண்ணா பெறுவதற்குள் , சந்தித்த அடக்குமுறைகள் கொஞ்ச நஞ்சமல்ல, எத்துனை தம்பிகள் அடி உதை பட நேரிட்டது, எத்துனை தம்பிகள் தங்கள் உடல் உறுப்புகளை கூட கட்சிக்காக , அண்ணாவின் லட்சியத்துக்காக முழக்கமிட்டபோது இழந்துள்ளார்கள், பல இளைஞ்சர்கள் தங்கள் உயிரைக்கூட இழந்துள்ளார்கள், பலர் தங்கள் வீடு வாசல்களை இழந்துள்ளார்கள். எல்லாம் தமிழக மக்களின் நலனுக்காக குரல் கொடுத்ததால் , தமிழக மக்களுக்காக போராடியதால். அண்ணா அனுபவித்த தொல்ல்லைகள், மற்ற மற்ற கட்சி தலைவர்கள், தொண்டர்கள் அனுபவித்த துயரங்கள் எண்ணிலடங்காதது. அவற்றையெல்லாம் முழுமையாக விவரித்தால், இன்றைய இளைஞ்சர்கள் முழுமையாக தெரிந்துகொண்டார்கலாயின் , அண்ணா அரும்பாடுபட்டு வளர்த்த கட்சியில், ""கரையான் புற்றெடுக்க - கருநாகம் குடிபுகுந்தது போல "" இன்று கருணாநிதி புகுந்துகொண்டு எப்படியெல்லாம் மற்ற தலைவர்களை அடக்கி , ஒடுக்கி , கட்சியையே தன்னுடைய குடும்ப சொத்து போலாக்கிகொண்டுள்ளார் என்பதெல்லாம் தெள்ளத்தெளிவாக உணருவார்கள். அண்ணா வுடன் ஒப்பிடவே தகுதியில்லாத நபர் தான் கருணாநிதி என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி போல புரியதொடங்கும். அண்ணாவின் அயராத உழைப்பையும், மற்ற முன்னணி தலைவர்களின் தளராத உழைப்பையும் , ஆயிரக்கணக்கான அன்புத்தம்பிகளின் உழைப்பு , தியாகம் இவைகளை அடித்தளமாக கொண்டு எழுப்பப்பட்ட மாளிகை தான் தி.மு.க . பல்லாயிரக்கணக்கானோரின் உழைப்பால், தியாகத்தால் உயர்ந்த இந்த கட்சியைத்தான் கருணாநிதி தன் குடும்ப சொத்தாக்கி , தன் மனைவி, துணைவி, மகன்கள், மகள்கள், பேரன்கள் ஆகியோருக்கு பங்கு போட்டு கொடுத்து கொண்டுள்ளார். இவ்வளவு மோசமான, கீழ்த்தரமான , மட்டமான , சுயநலமான , அருவருக்க தக்க ஜென்மத்தை அகில இந்தியாவிலும், இல்லை இல்லை அகில உலகிலும் பார்க்கமுடியுமா என்பது சந்தேகம் தான். கருணாநிதியின் சுயநலம் பற்றி ஊர் உலகத்துக்கு சமீப காலமாக நன்றாகவே தெரியதொடங்கிவிட்டது, ஆனாலும் ஏன் பாவம் தி.மு.க தொண்டர்கள் இன்னமும் இவருக்கு லாவணி பாடிக்கொண்டு திரிகின்றார்கள் என்பது தான் புரியவே இல்லை. ஒருவித மயக்கத்திலேயே அவர்களை கருணாநிதி வைத்துகொண்டிருப்பதால், கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினரால் மூளைசலவை செய்யப்பட்ட அவர்களால் அதிலிருந்து விடுபட முடியவில்லையா?. அல்லது விடுபட விருப்பமில்லையா?. கட்சியை எப்போதோ கருணாநிதி கொஞ்சம் கொஞ்சமாக அழிக்க தொடங்கிவிட்டார், இப்போது முழுமையாக தன் குடும்பத்தாருக்கு பாகம் பிரித்து கொடுத்து , அதன் முடிவுரையை எழுத தலைபட்டுவிட்டார் என்பதை தான் அவரது நடவடிக்கைகள் காட்டுகின்றது. கட்சியில் உள்ள முன்னணி தலைவர்கள் இப்போதும் விழித்துக்கொண்டு குரல் கொடுக்காமல் விட்டு விட்டால் , பின் எப்போதும் இந்த கட்சியை காப்பாற்றவே முடியாத நிலை ஏற்பட்டுவிடும். ஆட்சியில் இருந்தபோது தான் முன்னணி தலைவர்கள் கருணாநிதியின் இத்தகைய அடாவடி செயல்களை எதிர்க்க முடியாத நிலை இருந்தது, எதிர்த்தால் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி எதிர்த்து பேசுபவர்களை நசுக்கி விடுவார் என்று பலரும் வாய் மூடி மௌனியாக இருந்தனர். எதிர்த்தால் மறுநாள் வாக்கிங் போய்விட்டு வீட்டுக்கு உயிருடன் திரும்புவோமா என்கிற அச்சம் ஏற்கெனவே நடந்த இரண்டு மூன்று சம்பவங்களுக்கு பின் ஏற்பட்டுவிட்டது. ஆனால் இப்போது நிலைமை அப்படியில்லை, கருணாநிதியின் முறையற்ற செயலை துணிந்து கண்டிக்க , போராட , கட்சியை அவர் குடும்பத்தின் பிடியில் இருந்து மீட்க முடியும். அண்ணாவின் கட்சியை உயிரோட்டமாக வைத்திருக்க முன்னணி தலைவர்களும், தொண்டர்களும் விரும்புகிறார்களா அல்லது இப்படியே அடிமை வாழ்க்கையையே வாழ போகின்றார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.