E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
நாக்கில் முதல்வர் படம் வரைந்து நன்றி செலுத்திய ஓவிய ஆசிரியர்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

18 பிப்
2013
01:14
பதிவு செய்த நாள்
பிப் 17,2013 00:16

விழுப்புரம் : நாக்கில் முதல்வர் ஜெ., படத்தை வரைந்து ஓவிய ஆசிரியர் ஒருவர், முதல்வருக்கு நன்றி செலுத்தி வியப்பில் ஆழ்த்தினார். விழுப்புரம் மாவட்டம், மணலூர்பேட்டையைச் சேர்ந்தவர் செல்வம், 33; ஓவியர். இவர், சிவனார்தாங்கல் அரசு பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக உள்ளார்.கண்ணாடியைப் பார்த்தபடி :

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த செல்வம், மக்கள் முன்னிலையில் நாக்கில் ஓவியம் வரைந்து வியப்பை ஏற்படுத்தினார்.கலைத்திறனை ஊக்கப்படுத்தும் வகையில் தங்களுக்கு ஆசிரியர் பணி வழங்கிய, முதல்வர் ஜெ.,விற்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில், அவரது பிறந்த நாளையொட்டியும், முதல்வரின் படத்தை நாக்கில் வரைந்து காட்டியதாக கூறினார். நாக்கை நீட்டியபடி, அதில் தூரிகையால் வாட்டர் கலர் மூலம் முதல்வரின் உருவப்படத்தை வரைந்து அசத்தினார். 10 நிமிடங்கள் எடுத்துக்கொண்ட அவர், கண்ணாடியைப் பார்த்தபடி முதல்வர் ஜெ., உருவத்தை நாக்கில் வரைந்து காட்டினார்.
நாக்கில் படம் வரைந்த, ஓவியர் செல்வம், ஏற்கனவே இதே போன்று பாரதியார், அப்துல்கலாம் உள்ளிட்டோரின் படங்களை வரைந்து வியப்பை ஏற்படுத்தியுள்ளார். தன் ஓவிய கலைத்திறனுக்கு அங்கீகாரம் அளித்ததோடு, வேலை வாய்ப்பையும் வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி செலுத்தும் விதத்தில், முதல்வர் பிறந்த நாளையொட்டி, அவரது ஓவியம் வரைந்து காட்டியதாக ஓவியர் பெருமிதப்பட்டார். நாக்கில் ஓவியம் வரைந்த செல்வத்திற்கு, அங்கிருந்தவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (66)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Idi-amin Palin - Nashville,பெர்முடா
18-பிப்-201300:13:46 IST Report Abuse
Idi-amin Palin நாக்கு-ல தானே ஓவியத்தை போட்டிருக்காக ..வேற பாடி-பார்ட்ஸ்-ல எதிலும் போடலியே?
Rate this:
2 members
0 members
0 members
Cancel
v.sundaravadivelu - Tiruppur,இந்தியா
17-பிப்-201322:20:36 IST Report Abuse
v.sundaravadivelu நாக்கோட வரையறதை நிறுத்திக்க ராசா..
Rate this:
1 members
0 members
1 members
Cancel
ஆ.தவமணி, - சேந்தமங்கலம், நாமக்கல்.,இந்தியா
17-பிப்-201321:45:12 IST Report Abuse
ஆ.தவமணி,   வென்றிடுவேன் நான் வென்றிடுவேன் என்ற அகத்தியர் சினிமா பட பாடலில், சீர்காழி கோவிந்தராஜன் (அகத்தியர்) , "சரஸ்வதி என் நாவில் குடியிருப்பாள்" என்று பாடுவார். இன்று, , சைக்கிள், மடிக்கணினி உள்ளிட்ட மாணவ மாணவியருக்கு உதவிடும் பல்வேறு அத்யாவசிய பொருட்களை விலையின்றி வழங்குவதன் வாயிலாகவும், ஆசிரியர்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவதாலும் அந்த ஓவியர் நமது மாண்புமிகு.முதலவர் அவர்களை சரவச்தியாகும், தம்மை அகத்தியர் போன்றும் உருவகித்துள்ளார். கடவுளே இல்லை எனக் கூறித் திரியும் பகுத்தறிவு பகலவனின் அடியார்களுக்கு இதெல்லாம் விளங்காததால் தான் காட்டுக்கூச்சலிடுகிரார்கள்.
Rate this:
5 members
0 members
0 members
Cancel
Srinath - Coimbatore,இந்தியா
17-பிப்-201320:12:48 IST Report Abuse
Srinath ஆளும் நிர்வாகிகள்/அமைச்சர்கள் தங்களுடைய கடமையைச் செய்கிறார்கள். அதற்கு ஏன் நாக்கை அறுப்பது, ஓவியம் வரைவது, காவடி தூக்குவது, பால்குடம் எடுப்பது போன்ற செயல்கள் என்பது மட்டும் விளங்கவே மாட்டேன்கிறது. அனேகமாக இந்த மனிதர் தனது பணியில் சேரும் அதேனாளன்று இவருக்கு பதவி உயர்வு கிடைத்தால் கூட வியப்படைய முடியாது.
Rate this:
0 members
0 members
2 members
Cancel
kadayanallur Abu haani - kadayanallur,Tirunelveli,இந்தியா
17-பிப்-201316:24:54 IST Report Abuse
kadayanallur Abu haani தவறான முன்னுதாரணம் நன்றி சொல்ல எத்தனையோ வழிகள் உண்டு இதை பெரிதுபடுத்தி விளம்பரம் செய்தால் வேறு ஏதாவது செய்ய முடியுமா என்று சிந்திக்கும் மாக்கள் நிறைந்த இடம் தமிழகம் (நாக்கை அறுத்து காணிக்கை செய்த பூமி அல்லவா )
Rate this:
33 members
0 members
18 members
Cancel
Ravishankar - Mysore,இந்தியா
17-பிப்-201315:44:49 IST Report Abuse
Ravishankar அடுத்து கருணா ஆட்சி வந்தால் அதே நாக்கில் அலகு குத்தி விடவேண்டியதுதான்.
Rate this:
0 members
0 members
29 members
Cancel
Jeyaseelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
17-பிப்-201315:44:48 IST Report Abuse
Jeyaseelan இவருக்கு நாக்குல சனியா............? இல்ல நாக்கே சனியா .............?
Rate this:
1 members
0 members
40 members
Cancel
Jeyaseelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
17-பிப்-201315:43:39 IST Report Abuse
Jeyaseelan நமது சேகர் சேகரையும் மிஞ்சிவிட்டார் இந்த ஆ(சிரியர்)...............
Rate this:
1 members
1 members
55 members
Cancel
aravindh Raman - Auckland,நியூ சிலாந்து
17-பிப்-201315:35:03 IST Report Abuse
aravindh Raman நாக்கில் உள்ள படத்தை பார்த்தால் எல் ஆர் ஈஸ்வரி படம் போல் அல்லவே உள்ளது. இவர் எதுக்கு ஈஸ்வரி அம்மாக்கு நன்றி சொல்லணும்
Rate this:
10 members
0 members
15 members
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
17-பிப்-201315:32:45 IST Report Abuse
தமிழ்வேல் வாயால வாடா சுடுரவருக்கு இது ரொம்ப பிடுச்சு போயிருக்கு..
Rate this:
0 members
0 members
51 members
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.